இந்த பாடல் “நான் கடவுள்” படத்திற்க்கு ராஜா போட்ட பாடல்.இது ஒரு ஞானப் பாடல்/சித்தர் பாடல் டைப்பா இருக்கு. ஏற்கனவே இந்தப்பாட்டு ராஜாவின் “ரமண மாலை” பக்திப் பாடல் தொகுப்பில் உள்ளது. இது ராஜாவே எழுதியது.பாடியவர் மது பாலகிருஷ்ணா.இவர் poorman"s K.J.Yesudoss.
பின்னி எடுத்து விட்டார்.
ராகம்: மாயா மாளவ கெளள?
இசை: திருவாசக சிம்பனி போல prelude ரொம்ப grand ஆகஆரம்பிக்கிறது.அம்மையும் அப்பனும்” வரிகளுக்கு முன் வரும் இசை புது விதமாக இருக்கிறது.வீணையின்(?) நரம்புகள்அதிர அதிர டிரம்சில் குத்து குத்துன்னு குத்துகிறார்.”ஒரு முறையா இரு முறையா ” இந்த இடத்தில் KJY மன்னிக்கவும் மது உருகுகிறார்.
கிழ் உள்ள site போய் "pitchaipaathiram" எதிர் உள்ள “Listen" கிளிக் செய்க
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அஹம் பிரம்மாஸ்மி
Original by Raja 20 years ago was from Rajavil Ramana Malai.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=jZtQirb1yIU
செயபால் சொன்னது உண்மைதான்.
ReplyDeleteஇசை மட்டுமல்ல
திரு இளையராஜ எழுதிய பாடல் இது.
ஒரு முறை ரமணாஸ்ரமத்தில் அவர் நேரில் பாடும் பொழுது கேட்டுள்ளேன்.
ஒலி தட்டில் எப்படி பாடல் சிதைந்து விடுகிறது என உணர முடிந்தது.
நேரில் கேட்கவேண்டும்...!
\\மடற் பதத்தால் தாங்குவாய்\\
ReplyDeleteஇது மலர் பதத்தால் என்று இருக்கவேண்டும்.