Friday, January 2, 2009

கோயில் யானை - - ஒரு கவிதை



         கோயில் யானை
        
          
         நீண்ட வரிசையில் நின்று
         தன் முறை வந்தவுடன்
         அம்பது பைசா துதிக்கையில் வைத்து
         ஆசையோடு தலை குனிந்த
         பள்ளிச் சுற்றுலாவில் வந்த
         ஒவ்வொறு சிறுவர் சிறுமிகளுக்கும்
         கண்களில் நீர் வழிய
         தலையைத் தொட்டு ஒரு
         பொக்கை வாய் சிரிப்போடு
         நல்லா இருங்கள் என்று
         செல்லமாக ஒரு ஆசிர்வாதம்
         அன்போடு துதிக்கை குலுக்கி
         அம்பது ரூபாய் நோட்டு வைத்த
         அயல் நாட்டு தம்பதியர்க்கு
         அவர்கள்  வேண்டிய வரங்கள் கூட
         அன்போடு ஒரு ஆசிர்வாதம்
         அடுத்தடுத்து யார் யாரோ
         துதிக்கையில் காசு வைத்து
         ஆர்வத்தோடு தலை நீட்ட
         நல்லா இருங்கள் என்று
         ஆசிர்வாதம் கொடுக்கும்
         இந்த யானைக்கு -   யார்
         கொடுத்த ஆசிர்வாத்தில் 
         கோயில் வாசலில் நின்று
         காலில் சங்கிலி கட்டி
         சீழ் பிடித்த காலுடன்
         பிச்சை எடுப்போம் என்று
         தன் வயிற்றின் கிழ் உட்கார்ந்து
         ஜீனியர் விகடன் படிக்கும்
         பாகனுக்கும் தெரியாது
         கோயில் உள்ளே இருக்கும் 
         சாமிக்கும் தெரியாது
         
        

11 comments:

  1. யானையின் பலம் யானைக்குத் தெரியவில்லை. ஐம்பது காசுக்குப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. நல்ல கவிதை. நன்று

    ReplyDelete
  2. பாவம் யானை. படிச்சதும் சோகமாப் போச்சு (-:

    ReplyDelete
  3. //நல்லா இருங்கள் என்று ஆசிர்வாதம் கொடுக்கும் இந்த யானைக்கு - யார் கொடுத்த ஆசிர்வாத்தில் கோயில் வாசலில் நின்று காலில் சங்கிலி கட்டி சீழ் பிடித்த காலுடன் பிச்சை எடுப்போம் என்று //

    Nalla varigal!!!

    ReplyDelete
  4. உண்மையான விஷயம்..பாவம்தான் யானை..

    ReplyDelete
  5. யானையைப் பார்க்கும் போதெல்லாம் நான் இப்ப‌டிதான் ஃபீல் ப‌ண்ணுவேன். ந‌ல்ல‌ வ‌ரிக‌ள்

    ReplyDelete
  6. //ஒரு பொக்கை வாய் சிரிப்போடு நல்லா இருங்கள் என்று செல்லமாக ஒரு ஆசிர்வாதம் //

    ரசித்தேன்.

    கோவில் யானைகள் நிஜமாவே பரிதாபம் :( பண்டிகை தினங்களில் அம்பாரியுடன், நகைகளும் ஜொலிக்கும் அணிகலன்களும் சுமந்து நிற்கும் போது இன்னும் பாவம்.

    மனிதன் எந்த விலங்கையும் விட்டுவைப்பதில்லை.

    ReplyDelete
  7. Shakthiprabha,

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. ஆகா, ஒரே மாதிரிதான் யோசிச்சிருக்கோம்.
    சிங்கத்தையே வெல்ல முடிகின்ற யானையை தன் கைபாவையாய் மாற்றி சுகம் காணும் மனிதர்களை என்னவென்று சொல்வது :(

    ReplyDelete
  9. அழைப்பை மதித்து வந்ததற்கு நன்றி பிரேம்குமார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!