Friday, January 16, 2009

புத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010


புத்தகக் கண்காட்சியும் - நான் -செலவு Rs.2,70,010

புத்தகக் கண்காட்சிக்கு போவதற்கு என்று சில SOP(standard operating procedure)வைத்திருக்கிறேன்.குடும்பத்தோடு போவதைத் தவிர்ப்பது.அவர்கள் இலக்கு மொத்தம் ஐந்தோ ஆறு ஸ்டால்கள்தான்.அடுத்த இலக்கு பேல் பூரி,மிளகாய் பஜ்ஜி,பாப் கார்ன்.அந்த ஐந்தோ ஆறில் இவர்கள் தேடுவது வழக்கமான ”மனசே please, அக்னிச் சிறகுகள்,உணவே மருந்து,சுஜாதா.அர்த்தமுள்ள இந்துமதம்.(சிவசங்கரி,அனுராதா இவர்களை பத்து வருடமாக மறந்தேப் போய்விட்டார்கள்).

இவர்களுக்காக இரண்டு நாள் விஜயம் ஏற்படுத்திக்கொண்டேன்.முதல் நாள் இவர்களோடு ஒரு நெட் பிராக்டீஸ். அடுத்த நாள் ரியல் கேம்.அந்த நெட் பிராக்டீஸ்ஸில் இவர்கள் செலவில் நான்கு புத்தகம் நைஸாகத் தேற்றி விட்டேன்.

அடுத்து பு.கண்காட்சி நடக்கும் மூன்று மாதம் முன்பே என் டைரியில் வாங்க வேண்டிய புத்தங்களைப் பற்றிய குறிப்பு எடுக்க ஆரம்பித்தல்.வாங்கிய புத்தகங்களேயே வாங்காமல் இருத்தல்.பெரிய நல்லி பை எடுத்துக் கொண்டு செல்லல்.முக்கியமான ஸ்டால்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுதல்.எடுத்தவுடனேயே வாங்கி விடாமல் சற்று யோசித்து வாங்குதல்.சப்தபதிப் போல் அடிமேல் அடி வைத்து எல்லா ஸ்டால்லயும் பார்த்து விடுவது.தூக்க முடியாத கனம் சேர்ந்தவுடன் “எஸ்யூஸ்மி” கேட்டுக்கொண்டு வெளியேப் போய் வண்டியில் வைத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாதல். 

முதலில் வழக்கமான புத்தக நிலையங்கள்.அடுத்த ரவுண்டில் மற்ற நிலையங்கள்.

கிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி?) 
ஆகி விட்டது.அம்பானி முதல் லூஸூ பையன் வரை புத்தகம் போட்டிருக்கிறார்கள்.அடுத்து நீதான் பாஸ் No.1 Blogger போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.எக்கசக்கமான புத்தங்கள்.அடுத்து நீயு சென்சுரி புக் ஹவுஸ்.இங்கும் நிறைய புத்தங்கள்.நல்ல வெரைட்டி.RBI,98.30 Radio Mirchi,Insurance 
co ஸ்டால்கள்.எதற்கு Insurance co,ஸ்டால்? அடுத்து கலர் நீர் குமிழிகள் விட்டுக்கொண்டு
குழந்தைக்களுக்கான நீர் குமிழி பேனா விற்கிறார் ஒருவர்.இது ஹோம் லைப் எக்சிபிஷ்னா?
அடுத்த வருடம் பொய் மீசை விற்பார் ஒருத்தர்.  


உயிர்மை,காலச்சுவடு இளைஞ்சர் கூட்டம் அலை மோதுகிறது.புது புத்தகங்கள் நிறைய வந்துள்ளது.பார்த்திபன் ஸ்டால் காணவில்லை.அவர் போல் இன்னொருவர் கவிதை எழுதி
ஸ்டால் போட்டுள்ளார்.தபு சங்கர் டைப் கவிதைகள்.நமக்கு அலர்ஜி.கூட்டம் இல்லை.
பல ஸ்டாலகளில் கல்யாணத் தேங்காய் பைப் போல் அழகான சணல் அல்லது காகிதப் பை தருகிறார்கள்.இது வாங்கும் புத்தக அளவைப் பொறுத்தது.

வானதி பதிப்பகத்திலும் கூட்டம் அம்முகிறது.அர்த்தமுள்ள இந்து மதம் எல்லா பாகங்களும் ஒரு pack ஆகக் கிடைக்கிறது.Blaft Publications ஸ்டால் ஒரு boutique மாதிரி இருக்கிறது.கூட்டம் இல்லை.இவர்கள் தமிழில் வந்த Subha, Rajesh Kumar, Vidya Subramaniam, Indra Soundararajan, Ramanichandran,Pattukottai Prabhakar போன்றவர்களுடைய கதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள்.

தமிழினி,காந்தளகம்,கிழைக்காற்று,க்ரியா,பாரதி புத்தகாலயம்,அம்பேத்கர்,அம்ருதா,சாகித்ய அகாடமி இங்கெல்லாம் இலக்கிய ரசனை உள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன.


இளைப்பாறுவதற்கு நடுவே உணவகங்கள்.என்கொயரியில் ஒரு பெண் அழைப்பாளினி “உங்க’ல்” நண்பர் முருகேசன் உங்க”லு”க்காக”இங்கு இருக்கிறார்.நீங்க”ல்” வரவும் என கூப்பிடுகிறார்.ஒரு எலக்ட்ரிஷியனை ரொம்ப நேரம் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.அவன்
வந்தானா?

இரண்டு மணி நேரத்தில் பல கடைகளை பார்த்தாகி விட்டதால் கால் கடுக்கிறது.ஒரு 50 புத்தக்ங்கள் வாங்கினேன்.லிஸ்ட் வேண்டாம்.

சும்மா ஒரு கணக்கு. ஒரு ஸ்டாலுக்கு ஆறு புத்தகம் என்ற கணக்காக 450 ஸ்டால்களில் புத்தகம் வாங்கினால் மொத்த புத்தகம் 2700. ஒன்றின் விலை 100 என்றால் மொத்த கணக்கு 450*6*100 = Rs,2,70,000/-. 50 ரூபாய் என்றால் Rs.1,35,000/-

ஒரு நாளைக்கு நான்கு புத்தகம் படிப்பதாக இருந்தால் மொத்தம் 675நாட்கள் ஆகும். 


வாங்கிமுடித்து விட்டு வெளியே வந்து பிளாட்பாரக் கடையில் பத்து ரூபாய்க்குபி.டி.சாமியின் (ஒரு மக்கி போன பேப்பர்) மர்ம-திகில் நாவல் வாங்கினேன்.(பக்கத்துணையுடன் படிக்க).

மொத்த செலவு Rs.2,70,000 + 10 = Rs.2,70,010/-
  

9 comments:

  1. ரவி!
    உண்மையைச் சொல்லுப்பா!
    நிஜமாவே செலவு 2,70,000 ஆ?!

    நம்ப முடியவில்லை...வில்லை...வில்லை..!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    ReplyDelete
  2. வெங்கட்ரமணன்,

    கட்டுரயை ஒரு வாட்டித் திருப்பிப் படிங்க.

    ”சும்மா ஒரு கணக்கு”

    ReplyDelete
  3. என்னை பொறுத்த வரை தனியாக சென்று வருவது தான் நமக்கு மன நிறைவு. நானும் சென்றிருதேன். ஆனால் புத்தகங்களை தேர்ந்து எடுத்து வாங்குவதில் தான் நிறைய குழப்பங்கள். எதை வாங்குவது எதை விடுவது என்று. முடிவில் ஒரு நான்கு மணி நேரம் சுற்றி ஒரு முப்பது புத்தகங்கள் வாங்கினேன்.

    ReplyDelete
  4. ரவி,

    உங்க அனுபவம் நல்லாத்தான் இருக்கு.எல்லா புக்கையும் எங்க வைப்பிங்க.எனக்கு ஒரு 500 புக்
    கடனா கொடுங்க.

    ReplyDelete
  5. கூடிய சீக்கிரம் வலை பதிவு பற்றியும் தமிழ் புத்தகம் வந்து விடும்,

    முப்பது நாட்களில் முன்னூறு வலை பதிவு உருவாக்குவது எப்படி- லக்கி லுக்

    பத்தாயிரம் கேள்வி பதில்கள் - டோன்ட் டூ


    அமெரிக்க, பிரிட்டனில் வலை பதிவு மூலம் பணம் சம்ப்பதிக்க் ஆரம்பித்து விட்டனர். கூடிய விரைவில் தமிழ் மனமும் பதிவை வகை படுத்தும் என நம்புகிறேன்,

    சமையல் பதிவு, சினிமா பதிவு, ஈழம் பதிவு, ஆன்மீக பதிவு, பங்கு வர்த்தகம் பதிவு,

    குப்பன்_யாஹூ

    .

    ReplyDelete
  6. Please give us at least a concise list of books you purchased if you don't mind.

    ReplyDelete
  7. ஆதித்யா,குப்பன் யாஹூ,கிருஷ்ணன்,

    எல்லோருக்கும் நன்றி.

    கிருஷ்ணன் சார்,

    ”concise" னா சுருக்கமாகவும் தெளிவாகவும் என்றுதான் அர்த்தம்.அதன் படி நான் வாங்கிய 50 புத்தகங்கள்:

    கவிதை:ஆதமநாம்/கனிமொழி/உமா மகேஸ்வரி/சுகிர்த ராணி/சுகுமாரன்/
    முகுந்த் நாகராஜன்

    கட்டுரை:ரிக் வேத கால ஆரியர்கள்,திருமந்திரம்,அயோத்திதாசர்,இந்தியா - பிரிவினை,பரிதிமாற் க்லைஞர்,கடவுள்,தமிழ் இலக்கிய வ ரலாறு,கனிமொழி கட்டுரைகள்,ஓஷோ
    தியாகராஜர் கீர்த்தனைகள்,சிவபுராணம்
    சித்தர் பாடல்கள்,மணிக்கொடி காலம்

    கதை:
    பெருமாள் முருகன்,கந்தர்வன்,சு.ரா,ஆதவன்,அம்பை,சல்மா,மரியாதை ராமன்,மட்டி மடையன் கதைகள்,ஜெ.மோ,சி.சு.செ,உலக சிறு கதைகள்,மாபசான்
    கதைகள்,பாட்டிச் சொன்ன கதைகள்,

    ReplyDelete
  8. Hi Ravi, I want to suggest you one book. UPPUKANAKKU by Vidya subramaniam. It is about the salt sathyagraha by Rajaji, and india pakisthan partition. It is written very well. I think you will like it.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam).உங்கள் வலையில் என் பின்னூட்டம் போட்டுள்ளேன். ஆனால் “o"comments என்று காட்டுகிறது. ஆனால் post comment ஐ கிளிக் செய்தால் கமெண்ட் தெரிகிறது.புரியவில்லை?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!