கவிதை
கோதை நாச்சியாராக மாற நினைத்த ராம்குமார்
புது மொசைக் சறுக்கி விழுந்தேன் - சொன்னேன்
எதிர்பட்ட பக்கத்து வீட்டு மைக்கேலிடம்
பின் மண்டையை அழுத்திப் பிடித்தபடி
அவசரமாக ஆட்டோப் பிடித்துத்தான்
அந்த மருத்துவ மனைக்கு விரைந்தேன்
எதுவும் கேட்கவில்லை ஆட்டோக்காரன்
வீதியில் ஒரு கண் வைத்தும் - ரியர் வியூ
கண்ணாடியில் பின் மண்டையை அழுத்திப்
பிடித்தபடி அமர்ந்த என்னைப் பார்ப்பதுமாக
வண்டி ஓட்டினான விசிலடித்துக்கொண்டே
அவனும் தெரிந்துக்கொண்டு விட்டான்
வீட்டில் புது மொசைக் சறுக்கி விழுந்ததாக
கைப்பேசியில் நண்பனிடம் பேசியதைக் கேட்டு
பின் மண்டை பிடித்தபடிக் கொடுத்தப் பணத்தை
”பாத்து சார்” சொல்லி வாங்கிக் கொண்டான்
வீட்டில் புது மொசைக் சறுக்கி விழுந்தேன்
முதல் உதவி செய்த மலையாளி நர்ஸ்ஸிடம்
மறுபடியும் சொன்னேன் MRI scan எடுப்பவரிடம்
மருத்துவ மனனயில் சென்ற எல்லா இடங்களிலும்
பின் மண்டையில் வைத்த கை எடுக்காமல்-சொன்னேன்
வீட்டில் புது மொசைக் சறுக்கி விழுந்ததாக
தலையில் கட்டும் கையில் எக்ஸ்ரே பேப்பர்களும்
மருந்து பாட்டில்களும் மாத்திரைப் பொட்டலங்களும்
இருந்தாலும் மீட்டருக்கு மேல்தான் பணம் கொடுத்தேன்
திரும்ப பிரயாணம் செய்த ஆட்டோகாரனுக்கு
வாங்கிக் கொண்டு அவனும் கேடடான் “எப்படி”
அவனுக்கும் வீ.பு.மொ.ச.வி பதில்தான்
மாலையில் பின் மண்டையில் கைவைத்தபடி
கதவைத் திறந்தவுடன் பதறிய மனனவிக்கு
மட்டும்தான் சொன்னேன் உண்மையை
அலுவலகத்தில் நடக்கப் போகும்
மாறு வேடப் போட்டியில் சூடிக்கொடுத்த
சுடர்கொடி கோதை நாச்சியாக ஜொலிக்க
பிரா ப்ளவுஸ் உள்பாவாடை சிக்கென்று அணிந்து
நைலக்ஸ் புடவை கைமடித்து - இடுப்பில்
கொசுவம் சொருகிய நேரத்தில்
வீட்டு அழைப்பு மணி அடிக்க - கொசுவம்
அவிழந்து போய் அதைப் பிடிக்க
கால் இடறி விழுந்து பின் மண்டை அடி பட
கொரியர் கொடுத்த லெட்டரை வாங்கும்போது
பிளவுஸ் பெட்டிகோட்தான் அணிந்திருந்தேன்
ரவி,
ReplyDeleteஒரு கதய கவிதயா எழுதியுஇருக்கிங்களோ? நல்லா இருக்கு.
அட..!
ReplyDeleteக(வி)தை ரொம்ப நல்லாருந்துச்சு... இரண்டுவாட்டி படிச்சதும்தான் புரிஞ்சுது..
romba nalla irunthathu ... :)
ReplyDelete