Sunday, January 25, 2009

மகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை

      
      
     வீட்டில் அடைந்து
     கதவு அடைத்து
     பார்க்கும் தொலைக்காட்சிச்
     சத்தத்தையும் மீறிக் கேட்கிறது
     காலனி விழாவில்
     பரிசு வாங்கும் 
     குழந்தைகளுக்கான
     கைத்தட்டல்கள்
     எனக்கு மட்டும் இல்லாமல்
     என் பத்து வயது 
     மகனுக்கும் கூட
  

4 comments:

  1. நன்றி இயற்கை,பாச மலர்,ஆ.முத்துராமலிங்கம்

    ReplyDelete
  2. அழகான கவிதை. ரசித்தேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!