Thursday, January 22, 2009

சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை


புது ஊர்.ஒரு வழியாக வீடு மாற்றியாகிவிட்டது.ப்ளாட் நன்றாக செட் ஆகி இருந்தது.தலையை உலுப்பியவாறு அவசரமாக முடி வெட்டிக்கொள்ள கிளம்பினேன்.சாந்தி பியூட்டி சலூன்.போர்டில் ரஜினி படம்.கண்,நெற்றியில் ரஜினி ஜாடை.ஆனால் கன்னங்கள் உப்பி போய் வேறு மாதிரி இருந்தார்.I say one time, but it is 100 times said என்று ரஜினியின் தலைக்கு மேல் எழுதியிருந்தது.

”வாங்க சார்....இப்ப முடிஞ்சுடும்”சலூன் ஓனர்.உள்ளே மூன்று நபர்கள் இருந்தார்கள்.சின்ன இடம்.ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கித்தான் உட்கார முடிந்தது.பிரில் கிரீம் சவரக்கட்டி நாற்றம் அடித்தது.அதற்குள் அடுத்த நபர் உள்ளே நுழைந்தார்.அவரையும் ”வாங்க சார்.. இப்ப முடிஞ்சுடும்“ என்று அழைத்தான்.சலூனை நோட்டம் விட்டேன்.சுவரெல்லாம் காரைப்படிந்து ஈரிச்சுப்போய் இருந்தது.

பக்கத்தில் இருந்தவர் என்னையே கால் முதல் தலை வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரை முறைத்துவிட்டு விலைப்பட்டியலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

“சார்... அது சொம்ம.. போட்டு வச்சுக்கறோம்.அந்த அமவுண்ட் வாங்கறதில்ல.சங்கம் கொடுத்தது”.

”நீங்க ஊருக்கு புச்ச சார்?’

தலையசைத்தேன்.

மறுபடியும் நோட்டம் விட ஆரம்பித்தேன்.அதிர்ஷ்டசக்கரத்தகடு பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.உள்ளே கரப்பான் பூச்சிகள்.என்னைப் பார் யோகம் வரும் கழுதைப் போட்டோ.ரேடியோ.சதுரவடிவமாக டெல்லி செட் போல் இருந்தது.நிறைய திருகு சுவிட்சுகள் இருந்தது.FMல் யாரோ ஒரு பெண் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
வாய் ஓய்ந்தவுடன் ”அடியே.. கொல்லுதே” பாட்டை யாருக்கோ டெடிகேட் செய்து பாட ஆரம்பித்தது.

என் முறை வந்த்து.ரெக்சின் சீட்டை தட்டி அழைத்தார்.உட்காரந்தவுடன் சுகமாக இருந்தது.பொன்னாடைப் போத்தினார்.

”கட்டிங்... மீடியமா?”

”எஸ்”

“ஆ பாத்தாவே தெரிது சார்.”

எப்போதும் மிடியம்தான்.க்ளோஸ் கட்டிங் புது மனவி கவிதாவிற்குப் பிடிப்பதில்லை.“லூசு” மாதிரி இருக்கு என்பாள்.‘கர்சிக் கர்சிக்” வெட்ட ஆரம்பித்து சீக்கிரமே முடித்து விட்டான்.அடுத்து ஷேவிங்.தலையை குனிய வைத்து அழுத்தியபடி ஷேவிங்கை ஆரம்பித்தான்.“என்னம்மா
உள்ள வாங்க”வாசலைப் பார்த்துக் கேட்டபடி வெளியே போனான்.

”பையனுக்கு முடிவெட்டனுமா?” 

”ஆமாம்” ஒரு பெண் குரல் கேட்டது.

“ஏரியாக்கு புச்சா இருக்கீங்க.அடுத்தது பாஸ்டா முடி வெட்டிடறேன்.”

என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் என்னைவிட்டு விட்டு வெளியே தலையை நீட்டிப்பார்க்க ஆரம்பித்தான்.

அவள் தயங்கிய மாதிரி தெரிந்தது.கண்ணாடியில் சின்னப் பையன் உருவம்தான் தெரிந்தது.அவள் உருவம் தெரியவில்லை.வெளியே போய் ஏதோ பேசிவிட்டு வந்தான்.துண்டுப் பேப்பரில் ஒரு செல் நம்பர் எழுதி இருந்தது.அவள் போய்விட்டாள்.

ஒரு வழியாக எனக்கு முடித்தான்.கண்ணாடியில் பார்த்தேன்.அவன் மேல் கடுப்பு ஏற்பட்டது.சின்னப்பையனை அழைத்தான்.சலூன்காரனைப் பார்த்து மிரண்டுப் போய்“அம்மா”என்று அழ ஆரம்பித்தான்.எல்லோரும்
சமாதனப் படுத்தமுயன்று தோற்றுப்போனார்கள்.

”பாவம்.. இந்த லேடிஸ்ஸூ...வூட்ல ஜெண்ட்ஸ்..என்ன வெட்டி முறிக்கிற வேல”என்னை முறைத்துப்பார்த்தவன்.இவன் என்ன வெட்டி முறிக்கிறான்?

நானும் அந்தக் குட்டிப்பையனைப் பார்த்தேன்.அழகாக துறுதுறுவென இருந்தான்.என் அப்செட் மூட் சர்ர்ரென்று இறங்கி காணாமல்போனது.சந்தோஷம் படர்ந்தது.

”வாட்  இஸ் யுவர் நேம்?”

“அபிலாஷ்”

“வாட்ஸ் யுவர் ஸ்கூல் நேம்?’

“சின்மயா”

”டாடி ஆபிஸ் போயிட்டாரா?

“தெரியாது”

”டாடி பேர் என்ன?”

“தெரியாது”. 

எல்லோரும் சிரித்தார்கள்.எனக்குக் கோபம் வந்தது.அவனுடன் கெஞ்சலாகப் பேசிப் பேசிஒரு வழியாக சமாதானமானான்.அவனுக்கு மிரண்டா பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்.

“இங்க சாப்பிடக் கூடாது.ம்ம்மிக் கிட்ட கேட்டுத்தான் இத சாப்பிடனும். என்ன ஒகேயா?”முகத்தில் பிரகாசத்தோடு பாட்டிலை அணைத்துக்கொண்டான்.சீட்டில் உட்கார வைத்து முத்தம் கொடுத்து “பை” சொல்லி கிளம்பினேன்.

மீண்டும் அழ ஆரம்பித்தான்.தயங்கினேன்.

“சார்... முடி வெட்டற வரைக்கும் இருங்க ..அவங்க அம்மா வந்துருவாங்க.”

சம்மதித்தேன்.

”உங்க தோலு சிவப்பு தோலு சார்.குழந்த டிரிக் வேற தெரிஞ்சு வச்சுக்கினுக்குறீங்க”

“அதெல்லாம் இல்லீங்க ..மிரண்டா பண்ற வேலதான்..”

அபிலாஷூக்கும் கட்டிங் முடிந்தது.முடிவெட்டியவுடன் ரொம்ப குட்டியாகத் தெரிந்தான்.முடித்துகள்களை தட்டிவிட்டு முத்தமிட்டேன்.அபிலாஷ் முகம் சிவந்து வெட்கப்பட்டான்.திரும்பி

வாசலைப் பார்த்து “அம்மா” என்று ஓடினான்.வாசலைப்பார்த்து
அதிர்த்தேன்.மகேஸ்வரி.அவள் முகம் சிவந்து கோபமாக சிறுவனைப் பார்த்தாள்.

”உனக்குத் தெரியாத ஆளுங்கக்கிட்ட போக கூடாதுன்னு..எவ்வளவு தடவச் சொல்லியிருக்கேன்... இடியட்..”குழந்தையை இழுத்தாள்.
மிரண்டா பாட்டில் கிழே விழுந்தது.

மகேஸ்வரியுடன் திருமணமாகி நான்காவது மாதத்திலேயே கருத்து வேற்றுமை வந்து அபத்தமாக தினமும் சண்டைப் போட்டோம்.சில மாதங்கள் பிரிந்தோம்.அடுத்த வருடம் விவாகரத்து.அப்போது அவள் கருவுற்றிருந்தாள்.ஐந்து வருடம் ஒடி விட்டது.

அபிலாஷ் என் பையனா?

“அங்கிள்... டாட்டா..”திரும்பிப் பார்த்து கையசைத்தான் அபிலாஷ்.

                         முற்றும்
 

21 comments:

 1. சூழலின் வர்ணனை அபாரம் தல.. லேபிள்ல ஃபுல் கதையே போட்டீங்களே தலைவா..

  ReplyDelete
 2. ரவிஷங்கர்,
  நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. நல்லா இருந்துச்சி.....

  ReplyDelete
 4. சமூகத்தின் மீதான உமது வித்தியாசமான பார்வை மிக அழகு!

  வாழ்த்துக்கள் ரவி,

  ReplyDelete
 5. நரசிம்/ரமேஷ் வைத்யா/நையாண்டி நைனா/கவாஸ்
  எல்லோருக்கும் நன்றி.சந்தோஷமா இருக்கு.

  நரசிம்(வலுக்கட்டாயமா வர சொன்னேன்) வாராத மாமணிப் போல் வந்தீங்க பாஸ்.

  நன்றி கவாஸ் பின்பற்றுபவர் ஆனதிற்க்கு

  ReplyDelete
 6. கடைசி திருப்பம் நல்லா இருக்கு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்ல கதை, எழுத்து நடை.. அருமை.. எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கிறது..

  ReplyDelete
 8. கர்சிக் கர்சிக்” வெட்ட ஆரம்பித்து .....


  ketkkum pothellam, ini

  raviyin
  ninaivikaul
  endrenrum ennulll

  nanri nanba

  vaazga umathu kalaiththoundu...

  venkat

  ReplyDelete
 9. மனுஷம்,
  முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. கதை முதல் தரம். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சின்ன அம்மிணி,

  நன்றி கருத்துக்கு.

  ReplyDelete
 12. கதை நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 13. அருமையான கதை..சலூன் விளக்கம் நன்று..முடிவு..இப்படியும் நடக்கக்கூடிய சாத்தியம் உள்ள காலத்துக்கு நாம் வந்து விட்டோமே என்று வருத்தம் வருகிறது..

  ReplyDelete
 14. ரவி ஆதித்யா சார், கதை அருமை. ஒரே மூச்சில் படிக்க வைத்தது. தலைப்பிலேயே ஒரு யுகம் இருந்தாலும் இந்த முடிவுவை யுகிக்க முடியவில்லை. நல்லா வந்திருக்கு.

  பொருமையா உங்க வலை முழுதும் மேயணும் கொஞ்சம் டைம் பீளிஸ்

  ReplyDelete
 15. Hi Ravi,

  Thanks for your invite to read your short stories.

  I have just finished reading this one, and the first thought is, the narration is gripping and readable:-). I liked the END piece!

  Keep up ur creativity:-).

  Cheers....Viji

  ReplyDelete
 16. Viji,
  Thanks a lot for honouring my invite and wrote your honest review.
  Please visit now and then
  throw your comments so that I can improve on.
  Thanks once again!

  ReplyDelete
 17. வெட்டற இடத்தில வெட்டிப் போட்ட உறவு ஒட்டிச்சா..இல்லையா?

  ReplyDelete
 18. Blogger ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி.முதல் வருகைக்கு நன்றி.

  //வெட்டற இடத்தில வெட்டிப் போட்ட உறவு ட்டிச்சா..இல்லையா?//

  தெரியாதுங்க.வெட்டற இடத்தில்தான் நான் முற்றும்போட்டுவிட்டேனே.
  ஆனா அவங்கதான் ஆல்ரெடி வெட்டின உறவாச்சே சார்.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 19. முடிவு எப்படியோ யூகித்து விட்டேன்!

  ReplyDelete
 20. Blogger அன்புடன் அருணா said...

  // முடிவு எப்படியோ யூகித்து விட்டேன்!//

  வாங்க அன்புடன் அருணா.ரொம்ப நாளாச்சு.ஆச்சர்யம்.யூகித்துவிட்டீர்களா.

  நன்றி

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!