Sunday, January 4, 2009

பார்க்கில் பதிவர்கள் அடித்த கொசு

  
கொசுக்களுடன் ஒரு நீண்ட கால
முடிவு இல்லாத யுத்தம்
ஒரு கொசு(வலை பதிவர்) ஆராய்ச்சி

பதிவர்கள் சமீப சந்திப்பில் பேசுவதை விட கொசு நிறைய 
அடித்தாகஒரு பதிவு படித்தேன்.விடியோவும் பார்த்தேன். 
பார்க்க பாவமாக இருந்தது. 
 
அடுத்து   வில்லன்கள் பல படங்களில் “நீயெல்லாம் எனக்குஒரு கொசு “என்று ஒரு வசனம் பேசுவார்கள். காமெடி நடிகர் க.மணி “இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா..நாராயண..” என்பார் ஒரு படத்தில் .

வசனம் மட்டும் அல்ல பாட்டிலும் கொசு அடிக்கும் பாட்டு உண்டு.புதுமைப் பெண் படத்தில் “கஸ்தூரி மானே” என்ற பாட்டு கொசு அடிக்கும் கைத்தட்டலோடுதான் ஆரம்பிக்கும்.

அந்த ஒரு கொசுவை ஒழிப்பதற்கு பரிணாம வளர்ச்சியில் என்னென்ன சாதனங்களை கடந்து வந்திருக்கிறோம். என்று ஒரு ஆராய்ச்சி, கொசு அடித்துக் கொண்டே.
 
அவரவர் வசதி/உடல் நலம்/வீடு அமைப்பு ஏற்ப சாதனங்கள் மாறும்.

1.கைகள்( ஆதி மனிதனின் முதல் ஆயுதம்)
(பதிவர்கள் ச்ந்த்ப்பில், பார்க்கில் அடித்துக்கொண்டிருந்தார்கள்)  

2.கத்தாழை மற்றும் சில இலைகள் (படுக்கை தலை மாட்டில் வைத்துக் கொண்டு படுக்க)

3.கண்களை மட்டும் விட்டு விட்டு உடம்பு முழுவதும் துணி
(மெல்லிய)சுற்றிக் கொள்ளுதல் (கிட்டத்தட்ட dead body)

4. வீட்டில் பொழுது சாயும் வேளையில் புகை போடுவது

5.கொசு வலை (தரை/கட்டில்)

(இருவர் கொசு வலை pack:இதிலும் உள்ளே வெளியே என்று போய் வருவ்தால் கொசுக்கள் உள்ளே எப்படியோ வந்து விடும். அதை தேடிப்பிடித்து அடித்து விட்டுதான் ”அடுத்த ”வேலையை தொடங்க வேண்டும்.சில சமயங்களில் காலை கண் முழிக்கும் போது எல்லாம் அறுந்து கொசு வலை தம்பதிகள்  மீது போத்தியபடி நைட் ட்ரஸ் போல் இருக்கும் அல்லது மீன் வலையில் மாட்டின இரண்டு திமிங்கலம் போல் இருக்கும்)

(அடுத்து பெரிய family pack கொசு வலை: 
ஐந்து அல்லதுஆறு பேர் படுக்கலாம். இதில் தொல்லைகள் ஜாஸ்தி.உள்ளே போய்ப் படுத்தவுடந்தான் கொசு வலை குடித்தனகாரர்களுக்கு நிறைய சந்தேகங்கள்வரும்.
லைட்டை அணைத்தோமா,காஸ் சுவிட்ச்சை முடினோமா,மாத்திரை எடுத்துக்கொண்டோமா என்று. இவர்கள் அடிக்கடி வெளியே போய் வரும்போதுகொசுக்களோடு உள்ளே வருவார்கள்.கொசுக்களோடு இவர்களையும் அடிக்க வேண்டும்)

6.பேகான் ஸ்ப்ரே பம்பு (Bagon Spray pump)
(புஸ்க்...புஸ்க்.. என்று ஸ்ப்ரே செய்யலாம்)

7.ஓடோமாஸ்(கிரீம்)

8.நெட்லான்

9.Mosquito Machine (இதில் நிறைய பிராண்ட் உள்ளது)

10.மஸ்கிட்டோ காயில்

11.மஸ்கிட்டோ காயில் ஆயில் 
(யூஸ்டு காயில்கள் மேல் தெளித்து உபயோகப் படுத்தலாம்) 

12.மஸ்கிட்டோ மேட்

13.மஸ்கிட்டோ பேட் 
(Tennis bat போல் இருக்கும்.இதில் மைல்டாக கரண்ட் வரும்.
கைக்குப் பதிலாக இதை ஆட்டி கொசு அடிக்க வேண்டும்)

14. நமக்காக அரசு ரோடுகளில் புகை போடுதல்(fogging) செய்வார்கள்.

ஒவ்வொறு சாதனத்திற்க்கும் கொசு வலைப் போல் குறிப்பு 
எழுதலாம்.ஆனால்பெரிய கட்டுரை ஆகி விடும்.

                                      முற்றும்

1 comment:

  1. ஹா! ஹா!

    //கொசு வலை தம்பதிகள் மீது போத்தியபடி நைட் ட்ரஸ் போல் இருக்கும் அல்லது மீன் வலையில் மாட்டின இரண்டு திமிங்கலம் போல் இருக்கும்)//

    //கொசுக்களோடு இவர்களையும் அடிக்க வேண்டும்)//

    ரசித்தேன்.

    வடகரை வேலன் கூட ஒரு பதிவு இதைப்பற்றி எழுதியிருந்தார்.

    அனுஜன்யா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!