நடிகை ஸ்ரீபிரியா
நடிகை ஸ்ரீப்ரியா.கன்னத்தில் குழி விழுந்த அழகான முகம். வசீகரமான கண்கள்.வட இந்திய முகம்.மூக்குத்திக்
காரணம்? என் சின்ன வயதில் என்னை மிகவும் பாதித்த
நடிகை.1970/80 களில் இளைஞர்களை கொள்ளைக்
கொண்டவர்.தமிழ் திரைப் பட உலகத்திற்கு கிடைத்த
அதிர்ஷ்டம்.திறமையான நடிகை.நடிப்பில் அசட்டுதனம்
இல்லாமல் ஒருபுத்திசாலித்தனம் இருக்கும்.முதல் படம்
“முருகன் காட்டிய வழி”. 1974.நூறாவதுப் படம்:நட்சித்திரம்.
300 படங்களுக்கு மேல் நடித்தவர்.
இவர் ஒரு unique நடிகை என்று சொல்லலாம். இவர் எல்லா வேடங்களுக்கும் பொருந்தி வருபவர்.துடுக்கான கிராமத்துப் பெண்/நகரத்துப் பெண்/வில்லி/பிக்பாக்கெட் அடிப்பவள்/விதவை/புராண கதாப் பாத்திரம்/நடிகைப் பாத்திரம்/காமெடி. “அவள் அப்படித்தான்” படத்தில் மஞ்சுவாகவே வாழ்ந்திருப்பார்.stylish walk.இவரின் சிறப்பு காதல் டுயட்களில் சிறந்து விளங்குவது. இவர் காலத்தில் இருந்த சுஜாதா திறமையான நடிகைதான்.
ஆனால் எல்லா ரோல்களுக்கும் பொருந்தி வர மாட்டார்.
”இளமை உஞ்சலாடுகிறது” படத்தில் ராஜாவின் ”ஒரே நாள் உன்னை நான்” பாட்டிற்க்கு காதல் உணர்வோடு நடித்திருப்பார்.Graceful and elegant. நம்ம கமல்தான் “பலராம் நாயுடு” சபாரிப் போட்டுக்கொண்டு ஸ்பிரிங்க் மாதிரி அபத்தமாக குதித்து காதலிப்பார்.நல்ல தமிழ் உச்சரிப்பு.வசனங்களை பேசும் முறை.அதே மாதிரி ஆங்கிலமும்.
இன்று வரையிலும் அவருக்கு இணையாக யாரும் இல்லை. ஒரு 20 சதவீதம் சிநேகாவைச் சொல்லலாம். எல்லாம் கிளாமர்தான்.
இவர் சர்ச் பார்க் கான்வெண்டில் படித்தவர்.கணவர் ராஜ்
குமார் ஒரு நடிகர்.கமல் மாதிரியே இருப்பார். இவர் நடிகை லதாவின் சகோதரர்.ஸ்ரீபிரியா சமஸ்கிருதம் படித்தவர்.
டீவி சிரியல்கள் நிறைய டைரக்ட் செய்துள்ளார்.
எனக்கும் இவரைப் பிடிக்கும்..ஒரு காலத்தில் இவர் கட்சி சில தோழியினர், ஸ்ரீ தேவி கட்சி நாங்கள் என்று வாதம் செய்த காலம் நினைவுக்கு வருகிறது இதைப் படிக்கும்போது..
ReplyDeleteநல்ல நடிகை.. இவர் நடித்தப்படங்களில் என்னால் மறக்க முடியாத படமாக நெஞ்சில் உள்ளது "சிம்லா ஸ்பெஷல்".
ReplyDeleteநகைச்சுவையில், வசன உச்சரிப்பில் கலக்கியிருப்பார்.
பதிவுக்கு நன்றி ரவி ஆதித்யா..
ஸ்ரீப்ரியா திறமையான நடிகை. 'அவள் அப்படித்தானில் 'உறவுகள் தொடர்கதை' பாடலில் முகத்தில் அவர் காட்டிய மிதமான பாவங்கள், simplicityயை மீறிய ஒரு ரிச்னெஸ் அவரிடம் இருக்கும். குரலும் அவருக்கு ப்ளஸ் பாயின்ட். எனக்கும் அவரைப் பிடிக்கும். அதன் பின் சுஹாசினி பிடிக்கும். அவரின் நடிப்பு வெகு இயல்பானது. மிகையில்லாமல் அற்புதமான முகபாவங்களால் காட்சியை மெருகேற்றிவிடுவார். நதியா, ரேவதி...அதன் பின் ராதா...அதன்பின் அதன்பின் யாரைச் சொல்ல....ஒருவரையும் சொல்ல முடியவில்லை...நந்திதா தாஸ் வெகு நாள் பிறகு பிடித்தது. ஆனால் அவர் தமிழில் அவ்வளவாக தலைகாட்டவில்லை. 'பூ'. பார்வதி நம்பிக்கை அளிக்கிறார்...பார்க்கலாம்...
ReplyDelete//'அவள் அப்படித்தானில் 'உறவுகள் தொடர்கதை' பாடலில் முகத்தில்//
ReplyDeleteகரெக்ட்.அட்டகாசமான உணர்ச்சிகள்.அடுத்து அந்த காட்சி, ஹிஸ்டீரியா மாதிரி வந்து கத்துவார்.
அடுத்து எனக்குப் பிடித்தவர் ராதாதான்.நல்ல முக பாவம்.
பாசமலர்,
ReplyDeleteஸ்ரீதேவியும் நல்ல நடிகை.ஆனால் ஒரு elegance missing.
சென்ஷி,
//மறக்க முடியாத படமாக நெஞ்சில் உள்ளது "சிம்லா ஸ்பெஷல்"//
கரெக்ட். ஒரு மாதிரி வெடுக் வெடுக் என்று பேசுவார்.நல்ல காமெடி.
எனக்குப் பிடித்த நடிகை.
ReplyDeleteமிக மிக பிடித்த படம் "அவள் அப்படித்தான்"
ஒவ்வொரு பெண்ணும் அப்படித் தான் இருக்கிறாள், சிலருக்கு அப்படியே தங்களை காட்டிக்கொள்ளும் தைரியம் இருக்கிறது. அற்புதமான பாத்திரம், உணர்ந்து நடித்திருப்பார்.
அவர் நடித்த நக்ஷத்திரம் படத்திலிருந்து "அவள் ஒரு மேனகை" என்ற ஷிவரஞ்சனி ராகப் பாடலுக்கு உயிரையே கொடுக்கலாம்.
ஸ்ரீபிரியா வின் (அலமேலு) திறமை, தெளிவான தமிழ் உச்சரிப்பு = பூர்வீகம் - தஞ்சை மண்.
ReplyDeleteசொந்த ஊர்: திருநள்ளாறு
அனானி,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.உங்கள் விபரத்திற்க்கும் நன்றி.
அவங்க அம்மா ஒரு பரத நாட்டியம் கலைஞர் என்று ஞாபகம். கிரிஜா பக்கிரிசாமி?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete