Monday, January 19, 2009

உள்ளங்கையில் மருதாணி - கவிதை

                                              
            மருதாணி
    
        இரவு தூங்கும் போது

        யார் மீதும் கைகள் 

        பட்டுச் சிதறாமல்
        
        கொசுக் கடிக்கும் 

        கை ஆட்டாமல்
        
        கலவிக்கு நெருங்கிய

        கணவனையும் ஒதுக்கி

         தூங்கி   விடிகாலை 

        எழுந்ததும்
                                                                
        முதல் வேலையாக
                                                                
உள்ளங்கைகளை
                                                              
தெரு ஓர குழாயில்
                                                                
லேசாகக் கழுவித் துடைத்து
                                                                
விரைந்தாள் -  தெரு 
                                                               
விளக்குக்கு கீழே 
                                                                
அழகாக வட்ட வடிவமாக
                                                               
  பிசிறில்லாமல்தான்
                                                                
கருஞ்சிவப்பு வர்ணத்தில்
                                                               
  மருதாணிப் பற்றியிருப்பது 
                                                              
மகிழ்ச்சிதான்
                                                                
        குஷ்டரோகிப் பெண்ணுக்கு                               
                                                           

10 comments:

  1. ரவிஷங்கர்,

    கடைசி வரி சஸ்பென்ஸ்.நல்லா பொயடிக்கா இருக்கு.

    ReplyDelete
  2. super...yeppidinga ippadiyelam....
    room pottu yosipeengalooo;-))

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க தலைவா ...

    ReplyDelete
  4. Aditya,இயற்கை,கார்த்திக்,
    இராஜலெட்சுமி பக்கிரிசாமி

    நன்றி பதிவர்களே.

    //super...yeppidinga ippadiyelam.//
    சொன்னால் நம்பமாட்டீர்கள்.சில வருடங்களுக்கு முன்பு எக்மோர் ரயில்வே மேம் பாலத்தில் இரவில் நடந்து வரும்போது குஷ்ட ரோகிக் குடும்பத்தினர்( வட்டமாக உட்கார்ந்து
    மருதாணி இட்டுக்கொண்டிருந்தார்கள்.

    இந்த குடும்பத்தில் குஷ்டம் இல்லாதவர்களும் இருந்தார்கள்.மறுநாள் வேணுமென்றே
    எல்லார் கைகளையும் நீட்டச் சொல்லி
    காசுப் போட்டேன்.அதில் இரண்டு பெண்களின் உள்ளங்கை மட்டும்.....
    நன்றாகப் பற்றியிருந்தது.

    So 60%கற்பனை + 40%உண்மை = கவிதை

    ReplyDelete
  5. அச்சச்சோ....எப்பவும் போல கடைசியிலெ punch...ம்ம்ம்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. அருணா மேடம்,

    உங்களுக்கு “அச்சச்சோ அருணா”ன்னு
    பேர் வைக்கலாமா?.அச்சச்சோ சித்ரான்னு ஒரு நடிகை இருந்தாங்க தெரியுமா?

    நன்றி

    ReplyDelete
  7. இறுதி வரியை எதிர்பார்க்கவில்லை.
    நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  8. ரவி,

    மன்னிக்கவும், உங்களுக்கு ஏற்பட்ட கவிதானுபவம் எனக்கு ஏற்படவில்லை...எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது! வீணாப்போனவன் என்ற வலைப்பூவில் நல்ல பல கவிதைகளைப் படித்தேன்! முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    //தெரு விளக்குக்கு கீழே
    அழகாக வட்ட வடிவமாக
    பிசிறில்லாமல்தான்
    கருஞ்சிவப்பு வர்ணத்தில்
    மருதாணிப் பற்றியிருப்பது
    மகிழ்ச்சிதான்
    குஷ்டரோகிப் பெண்ணுக்கு//

    "தெரு விளக்குக்கு கீழே" என்பது இந்த இடத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது! இதை இப்படி எழுதலாமா?

    வட்ட வடிவமாகவும் அழகாகவும்
    பிசிறில்லாமலும் கருஞ்சிவப்பு
    வண்ணத்தில் உள்ளங்கையில் மருதாணி
    பற்றியிருப்பது மகிழ்ச்சி தான்
    அந்த குஷ்டரோகி பெண்ணுக்கு!

    இது தான் சரியான கோர்வை என்றும் சொல்ல முடியாது! எனக்கு இது சரியாய் படுகிறது!

    ReplyDelete
  9. நன்றி,
    ரிஷபன் ஷெரிப், பிரதீப்.

    பிரதீப்:
    நன்றி நேர்மையான விமர்சனத்திற்கு.
    இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் மறுமொழியாளர்களிடம்.

    //தெரு விளக்குக்கு கீழே//
    அவள் தெரு வாசி என்பதால்.

    //இதை இப்படி எழுதலாமா?//
    நான் வேறு படுகிறேன்.
    ப்ரதீப் என்றும் எழுதலாம் பிரதீப் என்றும் எழுதலாம்.

    //வீணாப்போனவன்//
    முகுந்த் நாகராஜன் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். ஆனால் "surrealistic"ஆக இருக்கும்.
    பிடிக்கும்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!