Wednesday, January 28, 2009

எண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை



   
  
                



  
  எண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை

     குக்கரில் இவ்வளவு
     பெரிய விசில் சத்தம் 
     வந்தவுடன் அடுப்பை
     சிறியதாக்கி  இவ்வளவு
     சிறிய விசில் சத்தம் வந்தவுடன்
     அடுப்பை அணைக்க வேண்டும் 
     என்று ஒரு கணக்கைச் சொல்லி
     என்னிடமும் என் மகளிடமும்
     ஆணையிட்டு அவசரமாக
     பாத்ரூம் சென்றாள் 
     அன்பு மனைவி சீதா லஷ்மி
     சொல்லிக் கிளம்பியவுடன்
     சுயம்புவாக விசிலடிக்க ஆரம்பிக்க 
     இரண்டா அல்லது மூன்றா
     என்பதாக ஒரு குழப்பம்
     NDTV News ஐ ரீமோட்டில்
     ஊமையாக்கிவிட்டு   கேட்டேன் 
     விசிலடிக்க ஆரம்பித்து விட்டதா
     என்று  - திருப்பிக் கேட்டாள்
     கைப் பேசியை hold இல் போட்டு
     என் செல்ல மகள் நித்யா
     எத்தனை விசில் ஆயிற்று 
     கணக்குக்கு ஒரு தடயமும்
     கிடைக்கவில்லை     திரும்பினேன் 
     சமயலறையிலிருந்து ஏமாற்றத்தோடு 
     அரையும் குறையுமாக
     ஈரம் சொட்டச் சொட்ட
     சற்று கவர்ச்சியாகக் கூட 
     திடீரென்று வெளிப்பட்டு
     சமையலறைச் சென்று
     பொறுப்பாக அணைத்துச்
     சென்றவளைப் பாராட்டி விட்டு  -     மகள்   
     என் முகம் பார்த்துச் சொன்னாள்
     இவ்வளவு பொறுப்பாக
     இருக்க வேண்டும் 
     விசிலடித்துக் கொண்டே
     ஆங்கிலத்தில்
    



      

6 comments:

  1. ஒஹ்.. நல்லா வந்திருக்குங்க

    ReplyDelete
  2. நன்றி சுந்தர்.

    ReplyDelete
  3. நல்ல ஒரு எதார்த்தம் மீண்டும்..மகளும் தாயாகும் போதல்லவா தெரியும் எல்லாம்..

    ReplyDelete
  4. சிறுகதையை ஒரு கவிதை மாதிரி அழகா எழுதி இருக்கீங்க ரவிஷங்கர். கவிதையில் கதை சொல்லுவது அனைவர்க்கும் வாய்க்காது அழகா காட்சிபடுத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  5. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. ஹஹ்ஹா...சமயங்களில் நடப்பதுதான் எல்லோர் வீட்டிலும்..சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!