சைக்கிள் கடையின் உள்ளே
அப்பா வாங்கப் போகும்
சைக்கிள் இல்லை – இரண்டு
சக்கரங்களை உருட்டிக் கொண்டு வந்தான்
எலும்புக் கூடின் உள்ளே
நுழைத்து ஒட்டவைத்து முடிக்கினான்
இரண்டு கைகள் மாதிரி
ஏதோ இரண்டு தொங்கியது
அம்மா உட்காரப் போகும் தட்டில்
வைத்து இறுக்கி முடிக்கினான்
அப்பா விசிலடித்துக் கொண்டே
உட்கார்ந்து ஓட்டப் போகும்
பச்சைக் கலர் சீட்டை
இரும்பில் நுழைத்து சுத்தித் தட்டினான்
ஜிகினா குஞ்சலங்களோடு ரெடியாயிற்று
ஹேண்டில் பார் – நான் எதிர்பார்த்த
எனக்கான சின்ன சிம்மாசனமும் தயார்
மற்றும் சில உதிரி பாகங்களையும்
ஒட்ட வைத்துக் கடைசியில்
காற்றும் அடிக்க அடிக்க
உயிர் வந்து நிமிர்ந்துப் படைக்கப்ட்ட
சைக்கிளின் பள பள மணி
டிங் டிங் என்று அடிக்காமல்
கிர்ர்ர்ரிங் கிர்ர்ர்ரிங் அடித்துப்
பார்த்து மகிழ்ந்த போது – எங்களுக்கு
படைத்த சைக்கிளை யாரோ
அவசரமாக வந்த ஒரு சேல்ஸ் டாக்ஸ்
ஆபிசருக்கு அவசரமாக படைத்து
விட்டான் சைக்கிள்காரன்
சைக்கிள் கடையின் உள்ளே
அப்பா வாங்கப் போகும்
சைக்கிள் இல்லை
பிரமாதம், கண் முன்னே காட்சியை விரிகிறது ....
ReplyDeleteநல்லா கீதுபா...
ReplyDeleteநன்றி கிருஷ்ணன்.
ReplyDeleteநன்றி ஷாஜி என் அழைப்பை மதித்து
வந்ததற்கு.
Nanru Thoza....
ReplyDeletepoems with visuals..
Keep writing sorry shooting
Venkat
வெங்கட்,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.
காட்சிகளைக் கண் முன் கொண்டு தருகிறது மீண்டும் உங்கள் எழுத்து..நன்று.
ReplyDelete