Thursday, January 22, 2009

சைக்கிள் கடையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்கிள் இல்லை

   
               கவிதை

சைக்கிள் கடையின் உள்ளே அப்பாவாங்கப் போகும்
சைக்கிள் இல்லை


சைக்கிள் கடையின் உள்ளே

அப்பா வாங்கப் போகும்

சைக்கிள் இல்லை இரண்டு

சக்கரங்களை உருட்டிக் கொண்டு வந்தான்

எலும்புக் கூடின் உள்ளே

நுழைத்து ஒட்டவைத்து முடிக்கினான்

இரண்டு கைகள் மாதிரி

ஏதோ இரண்டு தொங்கியது

அம்மா உட்காரப் போகும் தட்டில்

வைத்து இறுக்கி முடிக்கினான்

அப்பா விசிலடித்துக் கொண்டே

உட்கார்ந்து ஓட்டப் போகும்

பச்சைக் கலர் சீட்டை

இரும்பில் நுழைத்து சுத்தித் தட்டினான்

ஜிகினா குஞ்சலங்களோடு ரெடியாயிற்று

ஹேண்டில் பார் – நான் எதிர்பார்த்த

எனக்கான சின்ன சிம்மாசனமும் தயார்

மற்றும் சில உதிரி பாகங்களையும்

ஒட்ட வைத்துக் கடைசியில் 

காற்றும் அடிக்க அடிக்க

உயிர் வந்து நிமிர்ந்துப் படைக்கப்ட்ட 

சைக்கிளின் பள பள மணி

டிங் டிங் என்று அடிக்காமல்

கிர்ர்ர்ரிங் கிர்ர்ர்ரிங் அடித்துப்

பார்த்து மகிழ்ந்த போது எங்களுக்கு

படைத்த சைக்கிளை  யாரோ

அவசரமாக வந்த ஒரு சேல்ஸ் டாக்ஸ் 

ஆபிசருக்கு அவசரமாக படைத்து

விட்டான் சைக்கிள்காரன்

சைக்கிள் கடையின் உள்ளே

அப்பா வாங்கப் போகும்

சைக்கிள் இல்லை

6 comments:

  1. பிரமாதம், கண் முன்னே காட்சியை விரிகிறது ....

    ReplyDelete
  2. நல்லா கீதுபா...

    ReplyDelete
  3. நன்றி கிருஷ்ணன்.

    நன்றி ஷாஜி என் அழைப்பை மதித்து
    வந்ததற்கு.

    ReplyDelete
  4. Nanru Thoza....

    poems with visuals..

    Keep writing sorry shooting

    Venkat

    ReplyDelete
  5. வெங்கட்,
    முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. காட்சிகளைக் கண் முன் கொண்டு தருகிறது மீண்டும் உங்கள் எழுத்து..நன்று.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!