Saturday, January 17, 2009

கலைஞர்,தயாளு,ராஜாத்தி,கனிமொழி,ஸ்டாலின்

                           துணைவி -  மனைவி

ஒரு நாள் மனைவி, நான்,  என் பத்து வயது மகனும் கலைஞர் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அது தி.மு.க பற்றிய ஒரு விழா நிகழ்ச்சி.மேடையில் கலைஞரும் அவர் மனைவி தயாளு அம்மா,ஸ்டாலின் அமர்ந்திருந்தார்கள். மேடைக்குக் கிழே ராஜாத்தியும் அவர் மகள் கனிமொழியும் அமர்ந்திருந்தார்கள்.

நான் “கனிமொழி அம்மா இவங்கதான் ”என்று ராஜாத்தி அம்மாவைக்காட்டிச் சொன்னேன். “அப்போ அவங்க யாரு” என்று தயாளு அம்மாவை காட்டிக் கேட்டான்.

”அவங்க ஸ்டாலின் அம்மா” என்று சொன்னேன்.

“ஒரு பேமிலில ரெண்டு அம்மாவா...எப்படி?” என்றான்.

நானும் என் மனைவியும் சில கணங்கள் ”திரு திரு” என விழித்து விட்டு,

“மேடைல இருப்பவங்க ம்னைவி.கீழ இருப்பவங்க துணைவி என்றேன். இது கலைஞர் எப்பவோ சொன்ன பதிலைத்தான் அவனுக்குச் சொன்னேன்.

“புரியலப்பா..” என்றான்.

அவருக்கு ரெண்டு மனைவி என்றும் தயாளு முதல் என்றும் ராஜாத்தி இரண்டாவது என்றும் சொன்னேன்.

“அய்யய்யோ...கவர்மெண்டல இவரப் பத்தித் தப்பா ...நெனைக்கமாட்டாங்க?” 
என்று ஒரு போடுப் போட்டான்.

நல்ல வேளை மேடையில் மு.க.முத்து இல்லை.

 

12 comments:

  1. இப்படியே பையன் கேட்டான்,பொண்ணு கேட்டுதென போட்டு மொக்குங்க...
    அவங்களுக்கோ எருமைத் தோல்.

    ReplyDelete
  2. கலைஞரை பற்றி தானே தாராளமாக நீங்கள் எழுதலாம். மற்றைய பதிவர்கள் விரும்பி ரசிப்பார்கள்.ஆனால் நடிகர் கமலகாசனின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி மட்டும் நீங்கள் எழுத முடியாது. ஏனெனில் அது நாகரிகம் அற்ற செயல் என்று மற்றைய பதிவர்கள் சண்டைக்கு வருவார்கள்.

    ReplyDelete
  3. hmm..enna kodumai CM and his marital status !!

    ReplyDelete
  4. //கலைஞரை பற்றி தானே தாராளமாக நீங்கள் எழுதலாம். மற்றைய பதிவர்கள் விரும்பி ரசிப்பார்கள்.ஆனால் நடிகர் கமலகாசனின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி மட்டும் நீங்கள் எழுத முடியாது. ஏனெனில் அது நாகரிகம் அற்ற செயல் என்று மற்றைய பதிவர்கள் சண்டைக்கு வருவார்கள்.//

    கமலஹாசன் ஒரு தலைவர் அல்ல.அவரைப் பற்றி நாளை ஸ்கூல் புத்தகத்தில் எழுதமாட்டார்கள்.

    அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.இதனாலேயே அரசன் நல்வழி காட்டுதல் அவசியம்!

    ReplyDelete
  5. \\ baleno said...
    கலைஞரை பற்றி தானே தாராளமாக நீங்கள் எழுதலாம். மற்றைய பதிவர்கள் விரும்பி ரசிப்பார்கள்.ஆனால் நடிகர் கமலகாசனின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி மட்டும் நீங்கள் எழுத முடியாது. ஏனெனில் அது நாகரிகம் அற்ற செயல் என்று மற்றைய பதிவர்கள் சண்டைக்கு வருவார்கள்.\\

    ஆமா கலைஞர் பத்தி சொன்னா உடன்பிறப்பு குழுமத்திலே இருந்தும் யாரும் வருவதில்லை! எல்லாரும் லீவ்ல இருக்காங்க!

    ReplyDelete
  6. ரவிஷங்கர் அண்ணா, உங்கள் 85 வயதில் அல்லது உங்கள் பேரன் கொள்ளுப் பேரன் காலத்தில் உங்களைப் பற்றி என்ன பேசுவார்கள் தெரியுமா?
    "பாருடா இவர் கல்யாணத்திற்கு அப்புறம் தான் புள்ளயே பெத்துக்கிட்டாராம். இத விட பெரிய ஜோக் இவர் அவங்க அப்பா அம்மா பாத்து வச்ச பொண்ண கட்டிக்கிட்டாராம். கல்யாணத்திற்கு முன்னாடி அந்த பொண்ண பாத்ததோ பழகினதோ கிடையாதாம். அதுவும் இல்லாம புடிச்சிருக்கோ இல்லாயோ, டேஸ்ட் ஒத்து போச்சோ இல்லயோ அந்த ஒரே பொண்ணோட தான்டா கடைசிவர வாழ்ந்திருக்கார். அந்த காலம் கொடுமைடா.."


    ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை. ஏனெனில் இது வரலாறு மற்றும் சமூகவியல் மாற்றங்கள் பற்றி தெரியாத சிறுவர்கள் பேசப்போவதுதான்.

    ReplyDelete
  7. எங்கள் பையன் கோவிலிலே இருக்கும் சாமிகளின் பெண்டாட்டிகள் பற்றிக் கேட்ட கேள்விகளும்,பல அவதாரங்கள் அவை எதற்கு நேர்ந்தன் எப்படி என்ன என்று சொல்லி முடிப்பதற்குள் .. ஏ! அப்பா! இந்தக் காலத்து அரசியல் வாதியே பரவாயில்லே!
    ஆமாம் தலையிலே உட்கார்ந்திருக்கே அந்த அம்மா சாமி அது எங்கே...
    போகும்?

    ReplyDelete
  8. யோகன்,Karthik,baleno,Vijayalakshmi,MayVee,நந்தவனத்தான்,அபிஅப்பா,
    ச்சின்னப் பையன்,Xavier,Thamizhan
    எல்லோருக்கும் என் நன்றி.

    நான் என் வீட்டில் நடந்த ஒரு ருசியான சம்பவமாகத்தான் இதை எழுதினேன்.இதில் உள்ள நியாய அநியாங்களை விவாதிக்க அல்ல.இதில் ஆளாளுக்கு கருத்து வேறு படும்.

    என்னைப் பொறுத்தவரையில் காதல்/கல்யாணம்/சேர்ந்து வாழ்தல் என்பது அவரவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்து ஒருத்தரை ஒருவர் ஏமாற்றாமல் வாழவது நலம்.அதில் ஏற்படும் நன்மை தீமைகளை அவர்கள்தான் எதிர் கொள்ள வேண்டும்.


    அபி அப்பா,
    என் அழைப்பை மதித்து என் வலைக்கு வந்து look விட்டதற்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!