Tuesday, January 13, 2009

ஹைகூக்கள்...ஹைகூக்கள்...ஹைகூக்கள்

ஹைகூ என்பது ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற ஒரு 
குட்டி கவிதை வடிவம்.  மின்னல் அல்லது ஒரு snap shot
அல்லது ஒரு “சடக்” என்ற ஒரு நேரடி அனுபவத்தை மூன்று வரிகளில் பிடித்து நிறுத்தி “அட” என்று சொல்ல வைப்பதுதான்.

மனதில் ஏற்பட்ட நேரடி flash அனுபவம் என்று சொல்லலாம்.

கிழ் உள்ளது உண்மையான ஜப்பான் ஹைகூ ரகம் அல்ல. 


ஹைகூக்கள்...ஹைகூக்கள்...ஹைகூக்கள்


நமீதாவின் தொடையை
இழுத்துத் தின்றது மாடு
வால் போஸ்டர்


நீண்ட நேரம் தேடி தேர்வு செய்து
அணிகிறார் கறுப்பு கண்ணாடி
பார்வையற்றவர்


யார் மூடுகையில் இறந்தது 
கதவிடுக்கில் நசுங்கிய
பல்லி


தயவு செய்து கதவை முடவும்
தமிழ் ஆங்கிலம் மாறி மாறி கெஞ்சும்
லிப்ட்


உறையும் குளிரில் கம்பளியில்லாமல்
தூங்குகிறார் அப்பா
Freezer Box


பால்காரி பெண் தலையில்
என் வீட்டில் பூத்த முதல்
ரோஜா 


எங்கு போய் சிக்கப் போகிறது
வானத்தை பார்க்கிறார்கள்
அறுந்த பட்டம்


காலியான ரயில் கம்பார்ட்மெண்டில்
குதித்து ஆட்டம் போட்டன
கைப்பிடிகள்


நடைபாதையில் தூங்கும்
பிச்சைக்காரனுக்கு துணை 
நிலவு


இறக்கை இல்லாமல்
நீண்ட வாலுடன் பறக்கிறது
பட்டம்

9 comments:

  1. உங்களின் பதிவுக்கு ThamilBest இல் வாக்களியுங்கள்

    ReplyDelete
  2. //இறக்கை இல்லாமல்

    நீண்ட வாலுடன் பறக்கிறது
    பட்டம்//

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


    தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

    கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
    சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


    உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
    உழவன்

    ReplyDelete
  3. ரவிசங்கர், ஹைக்கூ எல்லாம் சூப்பர். லேபில்ல எதுக்கு நமீதா மற்றும் தொடை ? கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி ஆஸ்ட்ரோ/உழவன்.

    உழவன் சார் படிக்கிறேன். நன்றி.

    மணிகண்டன்,
    ஒரு "window dressing'தான்.குமுதம் டெக்னிக்தான்.நம்ம “சத்யம்” ராஜு balance sheet ல பண்ணல அது மாதிரிதான்.

    நன்றி கருத்துக்கு.என்னோட பழைய
    ஹைகூக்கள் படிச்சிங்களா? labelல்ல
    பாருங்க.

    ReplyDelete
  5. எல்லாமே நல்லாருக்கே! நமீதா முதல்ல பகீர்ன்னு ஆனது அப்றோம் மாடுன்னதும் மூச்சு வந்தது!!

    ReplyDelete
  6. நமீதா..கொஞ்சம் அதிர வைத்தது..

    ReplyDelete
  7. நல்ல முயற்சி ....தொடர்ந்து எழுதுங்கள் ...ஹைகூ இலக்கணம் பற்றி சுஜாதா கூட ஒரு கட்டுரை எழுதிய ஞாபகம் .

    ReplyDelete
  8. //உறையும் குளிரில் கம்பளியில்லாமல்
    தூங்குகிறார் அப்பா
    Freezer Box//

    Friend,

    I was reminded of my father, whom I lost in Dec 2007, at the age of 80.

    Regards,

    Cinema Virumbi

    ReplyDelete
  9. நன்றி சினிமா விரும்பி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!