Wednesday, January 28, 2009
இரண்டு வார்த்தை கதைகள் - சுஜாதா - நான்
எண்ணப் படாத குக்கர் விசில்கள் - கவிதை
Sunday, January 25, 2009
மகன் தந்தைக்காற்றும் உதவி - கவிதை
நான் - நடிகை ஸ்ரீப்ரியா - அவள் அப்படித்தான்
Thursday, January 22, 2009
சைக்கிள் கடையின் உள்ளே அப்பா வாங்கப் போகும் சைக்கிள் இல்லை
சைக்கிள் கடையின் உள்ளே
அப்பா வாங்கப் போகும்
சைக்கிள் இல்லை – இரண்டு
சக்கரங்களை உருட்டிக் கொண்டு வந்தான்
எலும்புக் கூடின் உள்ளே
நுழைத்து ஒட்டவைத்து முடிக்கினான்
இரண்டு கைகள் மாதிரி
ஏதோ இரண்டு தொங்கியது
அம்மா உட்காரப் போகும் தட்டில்
வைத்து இறுக்கி முடிக்கினான்
அப்பா விசிலடித்துக் கொண்டே
உட்கார்ந்து ஓட்டப் போகும்
பச்சைக் கலர் சீட்டை
இரும்பில் நுழைத்து சுத்தித் தட்டினான்
ஜிகினா குஞ்சலங்களோடு ரெடியாயிற்று
ஹேண்டில் பார் – நான் எதிர்பார்த்த
எனக்கான சின்ன சிம்மாசனமும் தயார்
மற்றும் சில உதிரி பாகங்களையும்
ஒட்ட வைத்துக் கடைசியில்
காற்றும் அடிக்க அடிக்க
உயிர் வந்து நிமிர்ந்துப் படைக்கப்ட்ட
சைக்கிளின் பள பள மணி
டிங் டிங் என்று அடிக்காமல்
கிர்ர்ர்ரிங் கிர்ர்ர்ரிங் அடித்துப்
பார்த்து மகிழ்ந்த போது – எங்களுக்கு
படைத்த சைக்கிளை யாரோ
அவசரமாக வந்த ஒரு சேல்ஸ் டாக்ஸ்
ஆபிசருக்கு அவசரமாக படைத்து
விட்டான் சைக்கிள்காரன்
சைக்கிள் கடையின் உள்ளே
அப்பா வாங்கப் போகும்
சைக்கிள் இல்லை
சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி - சிறுகதை
பக்கத்தில் இருந்தவர் என்னையே கால் முதல் தலை வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரை முறைத்துவிட்டு விலைப்பட்டியலைப் பார்க்க ஆரம்பித்தேன்.
மறுபடியும் நோட்டம் விட ஆரம்பித்தேன்.அதிர்ஷ்டசக்கரத்தகடு பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.உள்ளே கரப்பான் பூச்சிகள்.என்னைப் பார் யோகம் வரும் கழுதைப் போட்டோ.ரேடியோ.சதுரவடிவமாக டெல்லி செட் போல் இருந்தது.நிறைய திருகு சுவிட்சுகள் இருந்தது.FMல் யாரோ ஒரு பெண் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
வாய் ஓய்ந்தவுடன் ”அடியே.. கொல்லுதே” பாட்டை யாருக்கோ டெடிகேட் செய்து பாட ஆரம்பித்தது.
உள்ள வாங்க”வாசலைப் பார்த்துக் கேட்டபடி வெளியே போனான்.
என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் என்னைவிட்டு விட்டு வெளியே தலையை நீட்டிப்பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு வழியாக எனக்கு முடித்தான்.கண்ணாடியில் பார்த்தேன்.அவன் மேல் கடுப்பு ஏற்பட்டது.சின்னப்பையனை அழைத்தான்.சலூன்காரனைப் பார்த்து மிரண்டுப் போய்“அம்மா”என்று அழ ஆரம்பித்தான்.எல்லோரும்
சமாதனப் படுத்தமுயன்று தோற்றுப்போனார்கள்.
அபிலாஷூக்கும் கட்டிங் முடிந்தது.முடிவெட்டியவுடன் ரொம்ப குட்டியாகத் தெரிந்தான்.முடித்துகள்களை தட்டிவிட்டு முத்தமிட்டேன்.அபிலாஷ் முகம் சிவந்து வெட்கப்பட்டான்.திரும்பி
வாசலைப் பார்த்து “அம்மா” என்று ஓடினான்.வாசலைப்பார்த்து
அதிர்த்தேன்.மகேஸ்வரி.அவள் முகம் சிவந்து கோபமாக சிறுவனைப் பார்த்தாள்.
மிரண்டா பாட்டில் கிழே விழுந்தது.
அபிலாஷ் என் பையனா?