Thursday, December 11, 2008

ஹைகூக்கள்.. ஹைகூக்கள்... ஹைகூக்கள்....



ஹைகூக்கள்...ஹைகூக்கள்...ஹைகூக்கள்...

வாங்காமல் திரும்பினாலும்

கைக்கூப்பி புன்னகைக்கிறாள்

ஷோ ரூம் பொம்மை

 

குளிக்கையில் எட்டிப்பார்த்து

வெட்கப்பட்டு ஒடும்

அணில்

 

பிடிப்பதற்க்குள்

விழுந்து விட்டது

நட்சத்திரம்

 

வீட்டில் இறையும் பொம்மைகள்

விளையாடுகிறார்கள்

 எதிர் வீட்டு குழந்தைகள்

 

பேண்ட் சிப்பும் பிரா ஹுக்கும்

சிக்கிக் கொண்டது

வாஷிங் மிஷின்

 

மைனாரிட்டி திமுக அரசு

ஒழிக்குமா

ஸ்பேம் மெயில்

 

இவர்கள் திருமணம்

சொர்க்க்த்தில் நிச்சியக்கப்பட்டதா

மணமக்கள்  போஸ்டர்

 

தூங்கும் ATM செக்யூரிட்டி

அமுக்கி பிடித்த விரல்களுக்குள்

லத்தி                            

 

குழந்தை தேடியது

மேகத்தில் ஒளிந்த

நிலவு

 

கோர சாலை விபத்து

ரத்தத்துடன் கலந்த

தயிர் சாதம்

 

டியூஷன் செல்லும்

அபார்ட்மென்ட் குழந்தைகள்

மௌன ஊஞ்சல்

 

ரயிலை தவற விட்டவருக்கு

கடைசிப்பெட்டியிலிருந்து

ஒரு கையசைப்பு

 

லஷ்மிகரமான் முக பாடகி

பாட ஆரம்பித்தாள்

பிகரப் பார்த்து ரவசு வுடாத

 

எப்படி விழுந்தது

யோசிக்கும் குழந்தை

கிணற்றில் நிலவு


ஒரு முறை கூட வந்ததில்லை    

வானவில் எஸ்கலேட்டரில்

நாரதர்       



14 comments:

  1. //வீட்டில் இறையும் பொம்மைகள்

    விளையாடுகிறார்கள்

    எதிர் வீட்டு குழந்தைகள்
    //

    Another good one. i feel this is the haikoo.

    few of them posted here doesn't belong to this category, i felt.

    sorry for the english. :)

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை நண்பரே.....s

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை நண்பரே.....

    ReplyDelete
  4. அருமை ரவி சார்...
    'ஷோரூம் பொம்மை', அணில், கிணற்றில் நிலவு, எதிர் வீட்டுக் குழந்தைகள்(சூப்பர்), வாஷிங் மெஷின்(அடல்ஸ் ஒன்லின்னு நினைச்சேன்), தயிர் சாதம்,மௌன ஊஞ்சல்(அழகு), கையசைப்பு...
    வாழ்த்துக்கள்..இதற்கும், உயிரோசையில் பிரசுரமானதற்கும்.....

    ReplyDelete
  5. different levels of அருமை ... some were ... சூப்பர்...

    ReplyDelete
  6. தயிர்சாதம் - கொஞ்சம் புரியலை. விளக்க முடியுமா?

    ReplyDelete
  7. அம்பி,

    கோர சாலை விபத்தில் இறந்தவன்/ள்
    இன் டிபன் பாக்ஸ் உடைந்து தயிர் சாதம் சிதறி..............

    ReplyDelete
  8. Thanks ravi, i thought some other minute meaning is hiding behind those lines. :)

    ReplyDelete
  9. //வீட்டில் இறையும் பொம்மைகள்

    விளையாடுகிறார்கள்

    எதிர் வீட்டு குழந்தைகள்
    //
    அருமை.

    ReplyDelete
  10. //எப்படி விழுந்தது

    யோசிக்கும் குழந்தை

    கிணற்றில் நிலவு//

    ஹைக்கூ என்பது ஒரு இயற்கைக் காட்சியையும் அதையொட்டிய மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தின்படி, இது எனக்கு நல்ல ஹைக்கூவாகப் படுகிறது.

    நகை முரண்களைக் ஹைக்கூவாகப் பார்க்கும் அபாயத்திலிருந்து விலக் தெரிய வேண்டும்.

    ReplyDelete
  11. வடகரை வேலன்,
    எனக்கு மதிப்புக் கொடுத்து வந்த வருகைக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது 100% சதவீதம் சரி.

    நான் படித்தவரையில் "season" சம்பந்தப்பட்டதுதான். இதெல்லாம் பொய்கூ.

    நன்றி.

    ReplyDelete
  12. என்ஜாய் பண்ணும்படியா ரொம்ப நல்லா இருந்தது ரவிசங்கர்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. எல்லாமே நல்லாயிருக்கு.

    வாழ்த்துக்கள்

    நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  14. சுமஜ்லாApril 10, 2009 at 7:45 PM

    ///கோர சாலை விபத்து
    ரத்தத்துடன் கலந்த
    தயிர் சாதம்///

    மனதை அதிர வைத்த ஹைக்கூ. எல்லாமே மிகவும் ரசித்தேன். நான் எழுதியது ஹைக்கூ அல்ல, மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!