உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டக் கதை
நிறைய ஆர்டர்கள்.எதிர்பார்க்காத கடன் வசூல்கள்.நினைக்க நினைக்க மறுபடியும் அந்த கலவையான உணர்ச்சி.நடையில் கூட வேகம்.மனதிற்குள் சிரிப்பு.
மற்ற வீண் அலைச்சல் நாள்களில் மாலையில் ரிலாக்ஸ்சேஷன் அல்லது ஏமாற்றத்திற்கு சில்ட் பியர் குடித்துவிட்டுத்தான் மற்ற வேலை.பார்காரன் குடிப்பதற்கு பரபரப்பதை என் உடல் மொழியை வைத்து கண்டுபிடித்து விடுவான்.ஆர்டர் கொடுத்தவுடன் விறுவிறுவென மூடியை திறந்து கிளாசில் ஊற்றி விடுவான் சிரித்தபடி.அவனிடமே “சீயர்ஸ்” சொல்லி ஆரம்பிப்பேன்.
அவனும் “சீயர்ஸ்” எனபான் சிரித்தபடி.
இன்று லேட்டாகி விட்டது. நோ பியர். வெறும் சாப்பாடு மட்டும்தான்.சாப்பிட்டு விட்டு ரயிலில் ஏறிய உடன் கட்டையைச் சாய்க்க வேண்டியதுதான்.
ஒட்டலில் சாப்பாடும் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன்.ஒரு தம் பற்ற வைத்து இழுத்து இன்றைய அலைச்சலை ஒரு ஓட்டு ஓட்டினேன்.எப்படி இவ்வளவு கடன் வசூல் மற்றும் புது ஆர்டர்கள்.மீண்டும் அதே
கலந்துக்கட்டியாக உணர்ச்சி.சிரித்தபடி சிகரெட்டை முடித்து ஆட்டோவில் ஏறினேன்.ஆட்டோவிலேயே கண் சொருக ஆரம்பித்தது.
ரயில்வே ஸ்டேஷன்.கூட்டம் கம்மிதான்.பத்துமணிக்குக் கிளம்பிய ரயிலில் கண் சொருக படுத்தேன்.திடுக்கிட்டு எழுந்தேன்.குறட்டைச் சத்தம்.அரைமணி நேரம் தூங்கி இருப்பேனா?நான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த மாதிரிதான் தெரிந்தது. இந்த குறட்டைக்காரர்கள் கனவில் வந்து லேசரால் ஊடுருவது மாதிரி குறட்டையால் ஊடுருவி எழுப்பி விட்டார்களா?
பர்த்தில் எழுந்து உடகார்ந்து கொண்டுப் பார்த்தேன்.
மேல் பெர்த்திலிருந்து ஒரு குறட்டை. அந்த குறடடை கிழ் ஸ்தாயில் இறங்கும்போது அதற்கு எதிர்ப் பாட்டாக மேல் ஸ்தாயில் ஒரு குறட்டை கிழ் பெர்த்திலிருந்து .அடுத்து சைடுலிருந்து ஒரு குறட்டை.மூன்று குறட்டைகள்.
இந்த குறட்டைவாதிகள் ஒரே குடும்பமா? குறட்டையில் குடும்ப ஜாடை அடித்தது. ஒன்றுக்கு மூன்றாக வந்தால் எதிர்க்க முடியுமா?சே!இந்த .. குறட்டை விடும் பிணங்களால் தூக்கம் கலைந்து விட்டது.முட்டாக்குப் போட்டுக்கொண்டு பிணங்கள் மாதிரிதான் இருந்தார்கள்.
ஒரு குறட்டையின் பக்கத்தில் நின்றபடி பயணம் செய்யும் ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.என் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்டுவிட்டாரா?.குறட்டையைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.அவருக்கு பெர்த் அலாட் ஆகும் வரை குறட்டை கவலை இருக்காது.கம்பெர்மெண்டின் அடுத்த இரண்டு பிரிவுகளிலும் போய்ப் பார்த்தேன்.அங்கும் இவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது.பயணிகள் சட்டைச் செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
தப்பு செய்து விட்டேன்.பியர் குடித்துவிட்டு ஏறியிருக்கலாம்..ஆர்டர்,வசூல் போன்ற விஷயங்களைத்தான் வருமா வராதா என்று மனதில் கணக்குப் போட்டப்படி எதிர் நோக்க முடியும். குறட்டை விடுபவர்கள் ஒன்றுக்கு மூன்றாக இரவு வருவார்கள் என்று கணக்குப் போடடு ஏறமுடியுமா?எரிச்சல் தாங்க முடியவில்லை.தூக்கம் வேறு கலைந்து விட்டது.மறுபடியும் ஒரு மாதிரி மகுடி ஊதி சுருதி ஏற்றி தூக்கத்தை வரவழைக்க வேண்டும்.
மணி பார்த்தேன்.11.30 என்ன செய்வது? அகால வேளையில்குறுக்கும் நெடுக்கும் நடந்து போகும் ஆர்பிஃப்யையும் இன்றுகாணவில்லை.ஒன்றும்புரியவில்லை.
எழுப்பி சொல்லலாமா? எழுப்பினால் மூன்று பேரையும் எழுப்ப வேண்டுமே.டிடிஆரிடம் சொல்லலாமா?இருக்கும் கோபத்தில் அபாயச் செயினை இழுக்கலாமா என்று கூட இருந்தது.பதில் குறட்டை விட்டு தூங்குவதற்கும் வக்கில்லை.என் தூக்கத்தில் குறட்டைக் கிடையாது.வெறும் தூக்கம்தான். வன்முறை கிடையாது.போலித்தனமாகவும் விடமுடியாது.
எழுப்பி சொல்லலாமா? எழுப்பினால் மூன்று பேரையும் எழுப்ப வேண்டுமே.டிடிஆரிடம் சொல்லலாமா?இருக்கும் கோபத்தில் அபாயச் செயினை இழுக்கலாமா என்று கூட இருந்தது.பதில் குறட்டை விட்டு தூங்குவதற்கும் வக்கில்லை.என் தூக்கத்தில் குறட்டைக் கிடையாது.வெறும் தூக்கம்தான். வன்முறை கிடையாது.போலித்தனமாகவும் விடமுடியாது.
நினைத்ததில் ஒன்று கூடச் செய்யவில்லை.தண்ணீர்தான் குடித்தேன்.என்னென்னவோ எண்ணங்கள் அடுக்கடுக்காக சம்பந்தமில்லாமல்.தலை வலிக்க ஆரம்பித்தது.
கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “எக்ஸ்கியூஸ் மீ” என்று பெர்த்தைத் தட்டினேன்.பதில் இல்லை. இரண்டாவது தரம் தட்டியவுடன் வேறு பக்கம் திரும்பி இருமி விட்டு குறட்டையை தொடர்ந்தார் ஒருவர். மற்ற இரண்டுபேர் பர்த்தையும் தட்டினேன்.பதில் இல்லை.
செல் போனில் எனக்குப் பிடித்த பாட்டை பெரிதாக வைத்து ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன்.ஒரு அசைவும் இல்லை..”பளீஸ்...டோண்ட் மைண்ட் பாட்ட ஆஃப் பண்ணிடுங்க...குழந்த முழுச்சுக்கிடும்” ஒரு இருபது சீட் தள்ளி ஒரு பெண் குரல். “ஓகே...ஓகே...” என்று சொல்லி அணைத்தேன்.யாரென்றும் பார்க்கவில்லை.
தலை கவிழ்ந்து கண் மூடி யோசிக்கையில் என் அம்மா வந்தாள். முன் ஜென்ம பாவம் என்றாள். போன ஜென்மத்தில் இதே மாதிரி யாரையாவது படுத்தியிருப்பாய்.அதன் விளைவுதான் என்பாள்.இப்படியே கண் மூடி யோசனைப் போய்க்கொண்டிருக்கும்போது என் தோளை யாரோ தொட்டார்கள். திடுக்கிட்டு கண்ணைத்திறந்துப் பார்த்தேன்.
குட்டியாக ஒரு பெண் குழந்தை சிரித்தப்படி. குட்டியாக ஹவுஸ் கோட் அணிந்து.
”நீ எங்கிருந்து வந்த. உங்க அம்மா எங்க?” மெதுவான குரலில் கேட்டேன்.
உள்ளே கைக் காட்டியது.”அம்மாட்டப் போ.. போ...” என்று மீண்டும் ரகசிய குரலில் அதட்டினேன். குழந்தை என்னை முறைத்தது.என் பாக்கெட்டில் இருந்த செல் போனைக் காட்டியது. “ஓ” பாட்டு கேட்கணுமா.
”சாரி கண்ணு! இவங்கெல்லாம் தூங்கறாங்க.நீ அம்மாகிட்டப் போய்டு”குழந்தைப் போகவில்லை.என்னையே பார்த்தவாறு நின்றிருந்தது.என்னை மாதிரிஅதற்கும் குறட்டை சத்தத்தில் தூக்கம் கலைந்து விட்டதோ.பாவமாக இருந்தது.
குழந்தையை மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டேன்.செல்லில் பாட்டு வைத்தேன். “வாழ்க்கை ஓடம் சொல்ல..ஆற்றில் நீரோட்டம் இல்லை..” அவள் அப்படித்தான் படத்தின் பாடலை தபலா பின்னணியில் ஜானகி சோகத்தில் உருகியபடிப்பாடிக்கொண்டிருந்தார்.நடுநீசி உருக்கத்தில் ரெயில் பெட்டிகளும் ஒரு பக்கம் காதால் கேட்டுக்கொண்டே தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
குழந்தையை மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டேன்.செல்லில் பாட்டு வைத்தேன். “வாழ்க்கை ஓடம் சொல்ல..ஆற்றில் நீரோட்டம் இல்லை..” அவள் அப்படித்தான் படத்தின் பாடலை தபலா பின்னணியில் ஜானகி சோகத்தில் உருகியபடிப்பாடிக்கொண்டிருந்தார்.நடுநீசி உருக்கத்தில் ரெயில் பெட்டிகளும் ஒரு பக்கம் காதால் கேட்டுக்கொண்டே தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
இப்படியே குழந்தையுடன் பல பாட்டுக்கள் கேட்டப்படி நேரம் ஓட குழந்தை மடியில் தூங்கி விட்டது.அட.. கடவுளே.என்ன செய்வது?எந்த சீட்டிலிருந்து வந்த குழந்தை?குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டேன்.
ஒவ்வொரு பெர்த்தாக உற்றுப் பார்த்தப்படி ரயிலின் ஆட்டத்திற்க்கு ஈடு கொடுத்து ஆடியபடி நடந்து சென்றேன்.
முற்றும்
கதை நல்லா இருக்குங்க...தலைப்பையும் சீக்கிரம் சொல்லிடுங்க...
ReplyDeleteகயல்விழி நடனம் said...
ReplyDelete//கதை நல்லா இருக்குங்க...தலைப்பையும் சீக்கிரம் சொல்லிடுங்க..//
நன்றி கயல்விழி.
thala thalathaan.ethartthamaana karpanai.
ReplyDeleteஎனக்கு புரியலையே , நான் ஒரு மாறியா புரிஞ்சுகிட்டேன். ஆனா சின்னப்புள்ளத்தனமா இருக்கும் , விடுங்க நல்லாத்தான் இருக்கு !
ReplyDeleteவாங்க பிரகாஷ்,
ReplyDelete//எனக்கு புரியலையே , நான் ஒரு மாறியா
புரிஞ்சுகிட்டேன்.//
சும்மா ஒரு நிகழ்ச்சி.அத சுவையா சிறுகதையா சொல்லனும்.புரிவதற்கு ஒன்றும் இல்லை.பின்நவீனத்துவமும் இல்லை.
//ஆனா சின்னப்புள்ளத்தனமா இருக்கும் , விடுங்க நல்லாத்தான் இருக்கு //
கருத்துக்கு நன்றி.
சொல்றேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இப்ப தான் கோடு தெரியது... ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல கற்பனை..
ReplyDeleteதலைப்பையும் சொல்லிடுங்க..
எவனோ ஒருவன் said...
ReplyDelete//வாழ்த்துக்கள்//
ந்ன்றி.
அது ஒரு கனாக் காலம் said...
ReplyDelete//இப்ப தான் கோடு தெரியது... ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்//
கருத்துக்கு நன்றி.
கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete//.நடுநீசி // நடுநிசி -- எழுத்துப்பிழை நன்பா..
//கலந்துக்கட்டியாக.// இந்த வார்த்தையை முதன்முதலாக இன்றுதான் அறிந்தேன்.. நன்றி..
உங்கள் கதையில் இரண்டு இடங்களில் வந்துள்ளது.. :)
கோகுலன் said...
ReplyDelete//கதை நன்றாக உள்ளது.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்//
நன்றி கோகுலன்.வருகைக்கு நன்றி.
//.நடுநீசி // நடுநிசி -- எழுத்துப்பிழை நன்பா..
திருத்திக்கொள்கிறேன் “நண்(ன்)பா”.
//கலந்துக்கட்டியாக.// இந்த வார்த்தையை முதன்முதலாக இன்றுதான் அறிந்தேன்.. நன்றி//
நன்றி.
ரவி சார்... என்னை அந்த ரயில்ல ஒரு ஓரத்துல உட்கார வச்சிட்டீங்க... கண்முன் விரியும் காட்சிகளாய் கதை நிகழ்வுகள்.. சிறு பயணத்துண்டுதான் கதைக்களமாக இருந்தது அருமை...
ReplyDeleteரயில் பயணம்,செல்ஃபோன் பாடல், அறியாத குழந்தையின் சினேகம்,மடியில் குழந்தை, வசூலான கடன்,புது ஆர்டர்கள் இவை எல்லாம் எல்லாருக்கும் பிடித்தவை.. அதனால் எளிதில் ரசிக்கும் வகையான கதையாகிவிட்டது..
வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு ரவி ஸார்.
ReplyDeleteபடிக்கும்போது கொரட்டை சத்தம் காதில் கேட்பது போல் இருந்துச்சு.
போட்டிக்கான எனது சிறுகதைக்கு உங்கள் விமர்சனம் இன்னும் வரவில்லையே.
தமிழ்ப்பறவை said...
ReplyDelete//அதனால் எளிதில் ரசிக்கும் வகையான கதையாகிவிட்டது..
வாழ்த்துக்கள்..//
நன்றி தமிழ் பறவை.ஆமா.. நீங்க ஏன் கதை எழுதவில்லை?உங்கள் வலையில் எதிர்பார்த்து
ஏமாந்தேன்.நீங்கள் எழுதிய அருமையான பயணக்கட்டுரை டைப்பில் ஒன்று எழுதலாம்.
நாடோடி இலக்கியன் said...
ReplyDelete//நல்லாயிருக்கு ரவி ஸார்//
நன்றி.
//போட்டிக்கான எனது சிறுகதைக்கு உங்கள் விமர்சனம் இன்னும் வரவில்லையே//
சில கதைகளை ராண்டம் ஆகப் படித்தேன்.படித்து
விமர்சனம் செய்கிறேன்.
விசாரித்தமைக்கு நன்றி சார்...
ReplyDeleteகதை எழுதும் எண்ணம் உள்ளது. ஏனோ எழுதத் தோன்ற்வில்லை...சரியோ தவறோ ஒரு கதை போட்டுவிடும் முடிவிலுள்ளேன்.. பார்க்கலாம் சார்...
எழுதலாம் என்பது என் யோசனை.ஆனால் டெட் லைன் ஒரு நாள்தான்.நன்றி.
ReplyDeleteஅய்யா பெரிசு...பெரிசா எதிர்பார்த்து வந்துட்டேன்.
ReplyDeleteபடா கைங்கள்ளாம் இப்படி லைட் சப்ஜெக்ட் பண்ணலாமா?
நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான்.
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
கும்க்கி said...
ReplyDelete//அய்யா பெரிசு...பெரிசா எதிர்பார்த்து வந்துட்டேன்.படா கைங்கள்ளாம் இப்படி லைட் சப்ஜெக்ட் பண்ணலாமா//
வாங்க குமுக்கி.கருத்துக்கு நன்றி.பெரிசோ சிரிசோ
லைட்டோ ஸ்டராங்கோ சொல்ற விஷயத்த சுவையா சொல்லணும்.அவ்வளவுதான்.
ஸ்ட்ராங்கா ஒன்னு உயிரோடை போட்டிக்கு வரும். படிங்க.கருத்துச்சொல்லுங்க.
அக்பர் said...
ReplyDelete//நல்ல அனுபவக்கதை. குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சிதான்.வெற்றி பெற வாழ்த்துக்கள்//
வாங்க அக்பர்.கருத்துக்கு நன்றி.
//எதுவும் சொல்லாத போகாதீங்க!//
ReplyDeleteசொல்லிடறேன்
முடிவை நோக்கி போகும் சிறுகதை எழுதக் கூடாது என்னும் ஒரே நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு போகிற போக்கில் எழுதியது போல உள்ளது. சிறுகதை என்பதை விட அனுபவம் என்னும் லேபிள் பொருந்தும். களம் நன்றாக இருந்தாலும்.. அழகாக காட்சிகளை விவரித்திருந்தாலும்.. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
இவை எல்லாம் என் "தாழ்மையான" கருத்துகள்தான்.. சீரியஸா எல்லாம் எடுக்க வேண்டாம்.
PPattian : புபட்டியன் said...
ReplyDelete//அழகாக காட்சிகளை விவரித்திருந்தாலும்.. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்//
வருகைக்கு நன்றி.குறைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
அடுத்த முறை கவனம் அதிகமாகும்.
//இவை எல்லாம் என் "தாழ்மையான" கருத்துகள்தான்.. சீரியஸா எல்லாம் எடுக்க வேண்டாம்//
என்னோட வலையில் யாரும் வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம்.சீரியஸ்ஸா எடுத்ததான் அடுத்த கட்டம் போக முடியும்.குறைகளைத் தைரியமாகச் சொல்லலாம்.
நன்றி சார்.
எனக்கு கதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து போட தெரியாது. இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்லிவிடுகிறேன். இந்த கதை(அனுபவம்?) பெரிதாக கவரவில்லை. ஏன் என்று கேட்டால் சொல்ல தெரியவில்லை. இதை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னும் விவரிப்பு கொஞ்சம் இருந்திருக்கலாமோ?
ReplyDeleteஅவன் குறட்டையால் அவதிப்படுவது மனதை எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை :(
வெட்டிப்பயல் said...
ReplyDelete//அவன் குறட்டையால் அவதிப்படுவது மனதை எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை :(//
நன்றி.