Wednesday, June 10, 2009

காதலியை ஆர்டர் கொடுத்து செய்! - கவிதை!













உன் தோழிகளிடம்
இருக்கும் ஆரவாரம்
உன்னிடம் இல்லை


தோழிகள் பேச்சுக்கு
கவிதையாக தலையசைத்தல்
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டி மெளனம்
அமைதி முகம்
இதழ் ஓரத்தில்
எப்போதும் கசியும்
புன்னகை


இது போதும் எனக்கு
உன்னைக் காதலிப்பதற்கு


நீயும் ஏற்றுக்கொண்டாய்
என் காதலை

அதே
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டிமெளனம்
அமைதி முகம் கொண்டு
இதழ் ஓரத்தில்
புன்னகையும் புரிந்து
கவிதையாக தலையசைத்து


பல நாட்கள் ஆகிவிட்டது
காதலிக்க ஆரம்பித்து


அதே
அமைதி முகம்
இதழ் ஓரத்தில்
எப்போதும் கசியும் புன்னகை
கவிதையாக தலையசைத்தல்
அர்த்தபுஷ்டி பார்வை
அர்த்தபுஷ்டிமெளனம்

இப்போது தோன்றுகிறது

உன் தோழிகளிடம்
இருக்கும் ஆரவாரம்
குறைந்த பட்சம் முப்பது சதவீதம்
கலந்திருந்தால்
சூப்பர் காம்பினேஷன்

குறைதான்

22 comments:

  1. மொடல் நம்பர சொல்லுங்க செய்து அனுப்பிறோம்...(தமாசு)

    நல்லாருக்கு

    ReplyDelete
  2. நல்லா இருக்கு....ஆமா அந்த பொண்ணும் இப்படி ஏதாவது நினைக்கும் இல்ல??

    ReplyDelete
  3. மயாதி said...

    //மொடல் நம்பர சொல்லுங்க செய்து அனுப்பிறோம்...(தமாசு)//

    குறையிருந்தால் திருப்பி அனுப்பலாமா?(தமாசு)

    ReplyDelete
  4. ஸ்ரீதர் said...

    //very nice//

    நன்றி.

    ReplyDelete
  5. கயல்விழி நடனம் said...

    //நல்லா இருக்கு....ஆமா அந்த பொண்ணும் இப்படி ஏதாவது நினைக்கும் இல்ல??//

    இந்த கவிதைக்கு பல பரிமாணங்கள் உண்டு.
    அதில் ஒன்றுதான் நீங்கள் சொல்வது.

    ReplyDelete
  6. ஒரு பரிமானம் நல்லாவே தெரியுது நீங்க குறும்புகார கண்ணன்

    ReplyDelete
  7. மொபைலயும்,காதலியையும் அவசரப்பட்டு ஆர்டர் கொடுக்காதீங்க..வாராவாரம் மாடல் மாறிகிட்டே இருக்கும்.

    ReplyDelete
  8. கவிதை ஸ்டேட்மெண்டாகிவிட்டதோ :(

    ReplyDelete
  9. அது ஒரு கனாக் காலம் said...

    //ஒரு பரிமானம் நல்லாவே தெரியுது நீங்க குறும்புகார கண்ணன்//

    தல! கவிதையில் வரும் சம்பவங்கள்,
    கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.பரிமாணம்
    உண்மையே.

    ReplyDelete
  10. தண்டோரா said...
    //மொபைலயும்,காதலியையும் அவசரப்பட்டு ஆர்டர் கொடுக்காதீங்க..வாராவாரம் மாடல் மாறிகிட்டே இருக்கும்.//

    வேறு ஒன்று சொல்லுவார்கள்.காதலியையும்
    பேருந்தையும் தவறவிட்டால் கவலை வேண்டாம்.
    அடுத்தது வரும்.

    ReplyDelete
  11. ஓ.கே..ரகம்தான் சார் ஈவன் சினேகா படமும் கூடத்தான்...

    ReplyDelete
  12. தமிழ்ப்பறவை said...

    //ஓ.கே..ரகம்தான் சார் ஈவன் சினேகா படமும் கூடத்தான்..//

    நன்றி.படிப்பவர்களுக்குத்தான் நிறைய தெரியும்.

    ReplyDelete
  13. கே.ரவிஷங்கர் said..

    மயாதி said...

    //மொடல் நம்பர சொல்லுங்க செய்து அனுப்பிறோம்...(தமாசு)//

    குறையிருந்தால் திருப்பி அனுப்பலாமா?(தமாசு)//

    வேணாம் அண்ணே நிறைய பொம்பிள புள்ளைகள் இங்க இருக்குதுகள், நம்மள கொண்டு போட்டுருங்கள்....

    ReplyDelete
  14. இயற்கையின் நியதி !!பழையன கழிதலும் புதிய எதிர் பார்ப்புகளும்,இக்கரைக்கு அக்கரை பச்சையே! மிக நன்று :)

    ReplyDelete
  15. தலவிதிய இன்னா பண்ணமுடியும்.!

    ReplyDelete
  16. மயாதி said...


    //வேணாம் அண்ணே நிறைய பொம்பிள புள்ளைகள் இங்க இருக்குதுகள், நம்மள கொண்டு போட்டுருங்கள்//

    செய்து விடலாம்.

    ReplyDelete
  17. Sowmya said...

    //இயற்கையின் நியதி !!பழையன கழிதலும் புதிய எதிர் பார்ப்புகளும்,இக்கரைக்கு அக்கரை பச்சையே! மிக நன்று :)//

    மேடம் பொளந்து கட்டிறீங்க.நன்றி.யாராவது காதலனை நாலு கேள்வி கேட்க மாட்டீங்களான்னு
    பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //தலவிதிய இன்னா பண்ணமுடியும்.//

    ஒன்னும் பண்ண முடியாது தல.நன்றி.

    ReplyDelete
  19. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    //கவிதை ஸ்டேட்மெண்டாகிவிட்டதோ //

    இருக்கலாம்.வாசிப்பவர்கள்தான் நீதிபதி.

    ReplyDelete
  20. கவிதைய படிக்கும் போது என்னமோ குறையுரமாதிரி இருக்கு..
    என்னனு தான் தெரியல..

    ReplyDelete
  21. பட்டிக்காட்டான்.. said...

    //கவிதைய படிக்கும் போது என்னமோ குறையுரமாதிரி இருக்கு..
    என்னனு தான் தெரியல.//

    இருக்கலாம்.நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!