புகைப்படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/
எல்லா கவிதைகளும் கதைகளும்
எழுதி முடித்துப்
பொழுது போகாத
ஒரு நாளில்
சற்று களையான முகம்
சராசரி உயரம் மற்றும் மாநிறம்
உள்ள ஒரு பெண்ணாக
மாறினேன்
வளர வளர அழகு கூடியது
சூட்டிகையாக் இருந்தாள்
நன்றாகப் படித்தாள்
எல்லாப் படிப்பும் படித்தாள்
பட்டம் வாங்கினாள்
வேலைக்குப் போனாள்
திருமணம் செய்தாள்
குழந்தைக் குட்டிகளோடு
செட்டிலாகி எங்கோ
போய்விட்டாள்
தெரிந்திருந்தால்
திருமணத்திற்கு
அனுப்பியிருக்கலாம்
மலர்ச் செண்டு
நானும் மிஸ் பண்ணிட்டன் இல்லாட்டி லவ் பண்ணி இருக்கலாம் ...
ReplyDeleteஹா ஹா ஹா
நல்லருக்கு நண்பரே !
???
ReplyDeleteமயாதி said...
ReplyDelete//நானும் மிஸ் பண்ணிட்டன் இல்லாட்டி லவ் பண்ணி இருக்கலாம் ..ஹா ஹா ஹா
நல்லருக்கு நண்பரே !//
நன்றி மயாதி.ரசித்தேன் உங்கள் பதிலை.
சரவணகுமரன் said...
ReplyDelete//???//
வாஙகண்ணே.கேள்விக்குறி போட்டீங்க.கருத்துக்கு
நன்றி.
வணக்கம் ரவி ஆதித்யா,
ReplyDeleteஉங்கள் கவிதை அருமை. அதை விட மிகமிக அருமை நீங்கள் போட்டு இருக்கும் புகைப்படம். ஏனென்றால் அது நான் எடுத்த புகைப்படம்.
இங்கே இருந்து எடுத்தாளப்பட்டு இருக்கக் கூடும்.
http://anandvinay1.blogspot.com/2006/09/blog-post.html
எனது படங்களை நீங்கள் உபயோகிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எனது வலைப்பூவுக்கோ அல்லது இந்த படத்திற்கான உரலையோ நீங்கள் இந்த இடுகையில் அளித்து இருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். உங்களின் 60 followers களில் யாரேனும் இதன் மூலம் எனது பதிவுக்கும் வந்து Hit Counterயை எகிற வைத்து இருக்கக்கூடும்.
நீங்கள் உங்களின் சொந்த நேரத்தை செலவழித்து, உங்களின் சொந்த உழைப்பினால், எழுதும் கவிதைகளை நான் வெறும் Cut and Paste செய்து, உங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடாமல் எனது பதிவில் போட்டுக் கொண்டால் அது சரியாக இருக்குமா ?
உங்களின் இந்த இடுகையில் இதை சரி செய்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
An&
http://anandvinay1.blogspot.com
ரொம்ப அழகான படம்.............
ReplyDeleteஅழகாருக்குன்னே!!
ReplyDeleteரவி.. கவிதை அருமை!
ReplyDeleteவினய்.. உங்களின் புகைப்படம் மிக அழகு.. உங்கள் பதிவிலும் வந்து பின்னூட்டியுள்ளேன் :)
அழகான கவிதை ரவி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த பெண்மை எதற்கான குறியீடு ரவி சார்
ReplyDeleteகுழப்பமா இருக்கு கொஞ்சம் சொல்லுங்கோ
ஃபோட்டோ-வை பிட்-டில் பார்த்த ஞாபகம்...
ReplyDeleteநல்ல கவிதை!
ரவிஜி.. மெயில் மீ..!!
ReplyDeletesenshe.indian@gmail.com
An& said...
ReplyDelete//எனது படங்களை நீங்கள் உபயோகிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எனது வலைப்பூவுக்கோ அல்லது இந்த படத்திற்கான உரலையோ நீங்கள் இந்த இடுகையில் அளித்து இருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். உங்களின் 60 followers களில் யாரேனும் இதன் மூலம் எனது பதிவுக்கும் வந்து Hit Counterயை எகிற வைத்து இருக்கக்கூடும்//
என் இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறேன்.நான் செய்தது தவறுதான்.நன்றி என்று உங்கள் வலைப்பெயரைப் போட்டு இருக்க வேண்டும்.
செய்து விடுகிறேன்.
இப்போதுதான் என் வலைக்கு வருகிறேன்.இங்கு பவர் இல்லாததால் எந்த பின்னூட்டத்திற்கும் பதில் போட முடியவில்லை.UPSல் போடுகிறேன் உஙகளுக்கு.நன்றி.
ரவி
ReplyDeleteமன்னிப்பெல்லாம் தேவையில்லை..அது அவசியமும் இல்லை.
உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.
சென்ஷி said...
ReplyDelete//ரவிஜி.. மெயில் மீ..!!//
senshe.indian@gmail.com
தல போட்டுவிட்டேன்.பவர் இல்லாம கஷ்டமா இருக்கு.
பாலா said...
ReplyDelete//இந்த பெண்மை எதற்கான குறியீடு ரவி சார்
குழப்பமா இருக்கு கொஞ்சம் சொல்லுங்கோ//
வருகைக்கு நன்றி.நான் எதையும் குறியீடாக வைத்து எழுதவில்லை.ஒரு வேளை காமம்/காதல் அடிப்படையாக இருக்கலாம்.
நன்றி.
June 16, 2009 12:02 PM
அன்புடன் அருணா said...
ReplyDelete//ரொம்ப அழகான படம்....//
நன்றி அருணா. கவிதையைப பற்றி?
ஆ.முத்துராமலிங்கம் said...
//அழகாருக்குன்னே!!//
நன்றி.
June 16, 2009 10:0
பாஸ்கர் said...
ReplyDelete//அழகான கவிதை ரவி. வாழ்த்துக்கள்.//
கருத்துக்கு நன்றி.
வெங்கிராஜா said...
//ஃபோட்டோ-வை பிட்-டில் பார்த்த ஞாபகம்...
நல்ல கவிதை!//
வாங்க. கருத்துக்கு நன்றி.
புரியல தல....விளக்கினா நாளா இருக்கும் .
ReplyDeleteஆனால் அந்த படம் மிக அருமை, .... கீஸா பிரமீடுகளில் படிகட்டுகள் இப்படிதான் இருக்கும், என்ன இந்த விளச்சம் கூட வராது
//ஒரு பெண்ணாக
ReplyDeleteமாறினேன்
சூட்டிகையாக இருந்தாள்//
புரியல ரவி ... நான் இன்னும் வளரனுமோ?தப்பா நெனச்சுக்காதீங்க .உண்மையிலேயே புரியலை.
அது ஒரு கனாக் காலம் said...
ReplyDelete//புரியல தல....விளக்கினா நாளா இருக்கும் //
அவரு பெண்ணா மாறினாலும்,தன்னோட IDயை
தக்க வச்சுக்கிறாரு.ஆனா அந்தம்மா வளர்ந்து,கல்யாணம் ஆகி காணாமாப் போயிடராங்க.ஒரு வேளை காதல் கீதல் பண்ணாலாம்னு ஐடியா இருந்திருக்கலாம்.
கடைசில எங்கிருந்தாலும் வாழ்க!
Just a fantasy!
ஸ்ரீதர் said...
//உண்மையிலேயே புரியலை//
ஸ்ரீதர் மேல பாருங்க.
ரவி சார்... என் மரமண்டைக்கு ஏதோ புரிஞ்சது போலவும் புரியாதது போலவும் இருக்கு.. ஃபாண்டஸின்னா அப்படித்தான் இருக்கும் போல...
ReplyDeleteபுகைப்படம் அருமை. அன்பருக்கு வாழ்த்துக்கள்...
கவிதை அழகு...
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//ரவி சார்... என் மரமண்டைக்கு ஏதோ புரிஞ்சது போலவும் புரியாதது போலவும் இருக்கு.. ஃபாண்டஸின்னா அப்படித்தான் இருக்கும் போல...
புகைப்படம் அருமை. அன்பருக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி.
கயல்விழி நடனம் said...
ReplyDelete//கவிதை அழகு//
நன்றி.
ரசித்தேன்..
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//ரசித்தேன்.//
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
என்ன ஒரு அழகான hallucination
ReplyDeleteNundhaa said...
ReplyDelete//என்ன ஒரு அழகான hallucination//
நன்றி நந்தா.