Monday, June 1, 2009

மாதவனா?வித்யாபாலனா? - கவிதை



மெல்லிய தபலா 
மற்றும் சிதார்
இசைப் பின்னணி


மாதவன் வித்யாபாலன்
இளம் தம்பதிகளாய்
காதல் மூடில்


அவர்களயே
பார்த்துக்கொண்டிருக்கும்
கணவன் மனைவி
சோபாவில்


பாதியிலேயே
படக்கென்று சேனல் 
மாற்றப்படுகிறது


16 comments:

  1. கவிதை நின்றுவிட்டது!
    பாதியிலேயே படக்கென்று!

    ReplyDelete
  2. உண்மையில் இனிதான் கவிதையே ஆரம்பிக்கப்போகிறது அதை நீங்கள் எழுதாமல் வாசிப்பவரையே எழுத வச்சிட்டிங்க...

    ஆனால் நிறையப் பேருக்கு கவிதை புரியாது என நினைக்கிறேன்..
    பார்ப்பம் எத்தனை பேர் புரிஞ்சு எழுதுறாங்க என்று.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. எனக்கும் புரியலை ரவிசார்.
    நீங்களே எழுதிடுங்க!!!

    ReplyDelete
  4. மயாதி said...

    //mmm//

    “அதை” நினைத்திருந்தால் அது அல்ல.

    ReplyDelete
  5. ஆ.முத்துராமலிங்கம் said...

    நீங்க சொல்லுங்க சார். எனக்குத் தெரியல.

    ReplyDelete
  6. வித்யாமா தவறில்லாம எழுதிறீங்க போல..

    கலக்குங்க.

    ReplyDelete
  7. அருமை..

    எல்லோரும் உறவுகள் பற்றியே பதிவுகள், கவிதை எழுதறிங்க..??!!

    ReplyDelete
  8. ஆதவா said

    //வித்யாசமா தவறில்லாம எழுதிறீங்க போல//

    ம்யாதி “mmmm" னாரு.இப்படி கூட ஒரு மீனிங் வருதான்னு ஒரு மாதிரி ஆயிடிச்சி.

    //வித்யாசமா தவ//
    வார்த்தை விளையாட்டு?

    ReplyDelete
  9. பட்டிக்காட்டான்.. said...
    //அருமை..//

    நன்றி.

    ReplyDelete
  10. எனக்குப் புரிஞ்சவரைக்கும், டி.வி பார்த்த தம்பதிகளிடையே உறவு நல்ல நிலையில் இல்லை... டி.வியில் அன்னியோன்யத்தைப் பார்த்ததும், பழைய ஞாபகம் வந்து சேர்ந்து விடாமலிருக்க , வறட்டுப் பிடிவாதத்தில் சேனலைப் படக்கென மாற்றிவிட்டார்கள்...

    ReplyDelete
  11. தள வடிவமைப்பு அழகு. முகப்புப் படமும்தான்...

    ReplyDelete
  12. :-)) நடந்திருக்கிறது எங்கள் வீட்டில்,சண்டையில் இருக்கும் போது!

    ReplyDelete
  13. அவன் அவளை ரசித்தான், அவள் அவனை ரசித்தாள்.... ஆகவே சானெல் மாறியது...ரொம்ப நாளைக்கு முன் படித்தது... படுக்கையில் ரெண்டு பேர் ஆனால் நான்கு உடல்கள் , ரெண்டு உயிருள்ள , மற்ற இரண்டு அந்த இரண்டின் மனதில் இருந்து

    ReplyDelete
  14. //தமிழ்ப்பறவை said..//

    //எனக்குப் புரிஞ்சவரைக்கும்,//

    நான் எதுவும் சொல்லப்போவிதில்லை.
    படிப்பவர்களுக்கு பல பரிமாணங்கள் கவிதைக் கொடுக்கும்.(எழுதியவருக்கே கூட தெரியாது)

    ReplyDelete
  15. உங்க குரு அதிஷா ஒரு கவிதை எழுதியிருக்கார் பாருங்க

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!