Monday, June 8, 2009

சினிமாவில் “டைரக்‌ஷன்” காட்டுதல்

டைரக்‌ஷன் காட்டுதல்

சின்ன வயதில் "ரயில் பயணங்களில்" (T.ராஜேந்தர்) என் அக்கா ராஜலக்ஷ்மியுடன் பார்த்திருக்கிறேன். அக்கா சில சீன்கள் பார்த்து கண் கலங்கியிருக்கிறாள்.

ரொம்ப நாள் கழித்து மறுபடியும் "ரயில் பயணங்களில்" படம் (T.ராஜேந்தர்) TV யில் பார்த்தேன்..


நான் பரிணாம வளர்ச்சி அடைந்தது நல்லதாக போயிற்று அக்கா பரிணாம வளர்ச்சி அடைந்தாளா? கடைசியில் பார்ககலாம்


முக்கோண காதல் கதை. கதைநாயகி சாந்தி (ஜோதி), வசந்தை(ஸ்ரீநாத்) லவ் செய்கிறாள். விதி வசத்தால் சாந்தி ராஜீவை மணக்கிறாள். ராஜீவ் சாந்திக்கு திருமணத்திற்கு முன் ஒரு காதல் உண்டு என்பதை தெரிந்து கொள்கிறான் . ராஜீவ் சாந்தியை கம்பெல்சரியாக கொடுமை படுத்துகிறான் .


கதைநாயகி, இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டதால் , "ஒரு வார்த்தை எதிர்த்து பேசாமல் " எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள் .படத்தின் கடைசிவரை புடவை தலைப்பை போர்த்திக்கொண்டு கண்களில் சோகத்தோடு "நடை பிணமாக " உலா வருகிறாள். வசந்த் தாடி வளர்கிறான். ( வசந்த், ராஜேந்தர் ஜாடையில் இருக்கிறான்.)


டைரெக்டர் ராஜேந்தருக்கும் இதெல்லாம் ரொம்ப பிடித்து போய்


நெறைய டைரக்‌ஷ்ன் காட்டுகிறார்.


அது என்ன ”டைரக்‌ஷன்” காட்டுவது?


அந்த கால படங்களில் …………..


உதாரணம் 1.

சி.கே.சரஸ்வதி (அம்மா) ம்கனிடம்(எஸ்.எஸ்.ஆர்) மருமகளைப்பற்றி (விஜய குமாரி) கோள் மூட்டுகிறார்

டைரக்‌ஷன்

அப்பொழுது பட்டாசு திரி பற்ற வைக்கப்படும் காட்சி

.உதாரணம்-2

கதா பாத்திரம் யோசித்துகொண்டிருக்கிறார்.

டைரக்‌ஷன்

சைக்கிள் வீல் (ஸ்டாண்ட் போட்ட ) சுற்ற ஆரம்பிக்கும். யோசிக்கிறார்.

சிறுது நேரம் கழித்து நின்று விடும் . யோசித்து முடித்துவிட்டார்.

உதாரணம் 3

வீட்டின் பெரிய மனிதர் இறந்து விட்டார் .

டைரக்‌ஷன்

அவர் வீட்டு சுவர் கடிகாரம் நின்று விடும் .(blood related கடிகாரம்?)

உதாரணம் 4

கற்ப்பழிப்பு காட்சி. வில்லன் கதா நாயகியை துரத்துகிரான்

டைரக்‌ஷன்

புலி மானை துரத்தும்.

இந்த டைரகஷன் காட்டுதலை தி.ராஜேந்தர் உலக திரை படங்களை மிஞ்சும் வகையில் காட்டியிருக்கிறார்"ரயில் பயணங்களில்"

பார்க்கலாம் கிழே. சிலவற்றை சற்று சரியாக கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.


(இந்த டைரக்‌ஷன் பாலசந்தர்,பாக்கியராஜ்,பாரதிராஜா என்று பலரும்

காட்டியிருக்கிறார்கள்.அது அடுத்த பதிவில்)


சீன் - 1

கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக நிற்கிறாள் . வேறுங்கோ காதலன்

கேமரா ஸூம் ஆகிறது : அங்கே ........ இங்கே என்ற புத்தகம் ரயில்வே புத்தக ஸ்டாலில் .வேறு ஒரு எல்.ஐ.சி வாசகமும் காட்டப்படுகிறது.

விளக்கம்

அங்கே ........ இங்கே என்ற புத்தகம் = இவள் இங்கே, அவன் அங்கே


சீன் - 2

மறுபடியும் கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக படபடப்புடன்

கேமரா ஸூம் ஆகிறது : பிளாட்பாரத்தில் கிரிக் கிரிக் பொறிகள் யாரோ "வெல்ட்" செய்துகொண்டிருக்கிறார்கள் .

விளக்கம்

கிரிக் கிரிக் பொறிகள் = கதாநாயகியின் பட பட பட பட பட பட படப்பு


சீன் - 3

கதைநாயகி (திருமணம் ஆன சில நாள் பிறகு ) காரில் வரும்போது , எதிர் சைடில் பழைய காதலன் காரில் வருகிறான் கண்கள் நோக்குகின்றன .கலங்குகின்றன

கேமரா ஸூம் ஆகிறது :: "நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் மாட்டுக்காரன் வாசிக்கிறான் நட்ட நடு ரோட்டில்.

(,கதைநாயகி, பழைய காதலன் ,பூம் பூம் மாடு, பூம் பூம் மாடு உரிமையாளர் ,

அவர் பையன், அசிஸ் டென்ட், நலந்தானா பாட்டு, பட படக்கும் வெயிலில்,

பெசன்ட் நகரில் எல்லாம் எப்படிஒரே நேரத்தில்.

(இதுதான் butter fly effect ஆ? ) அய்யோ...தாஙக முடியலடா சாமி!

விளக்கம்:

"நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் =

1. இருவ்ர் உள்ளமும்(வாய் பேச

முடியாத சிட்ச்சுவேஷன்) பேசுகிறது.

2. தில்லானா மோகனாம்பாள் சிச்சுவேஷன் வந்து விடுகிறது


சீன் - 4

கல்யாண ஏற்பாடு நடக்க ஆரம்பித்துவிடுகிறது

அவசரமாக காதலனோடு பேச போனில் அழைக்கிறாள். . வேலைக்காரன்தான் பேசுகிறான் .ஏமாற்றம் அடைகிறாள் .

கேமரா ஸூம் ஆகிறது:

அந்த வீட்டில் டைனிங் டேபிளில் , ஒரு பையன் ஒரு சாசெரை (டீ) விரிசில் விட்டு உடைக்கிறான்

விளக்கம்:

சாசெரை (டீ) விரிசில் = அவர்கள் காதலில் விரிசல்.

சீன் - 5

கதைநாயகி திருமண பத்திரிக்கை கொடுக்க, பழைய காதலன் வீட்டிற்கு வருகிறாள்

க.நா.: "உங்க பேரு N..வசந்த் ?

ப.கா. "ஆமாம் N..வசந்த் .........என் வசந்த்

க.நா: என் வசந்த் ஆ ?” சோகமாகிறாள்.

க.நா: என் பேரு கவருக்குள் உள்ள பத்திரிகையில் இருக்க வேண்டும் .ஆனால் கவரில் இருக்கிறது

க.நா: மௌனம் . கண்ணீர் வருகிறது .

கேமரா ஸூம் ஆகிறது ::

ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் வசந்துக்கும் உள்ள புள்ளியில் விழுந்து புள்ளி அழிகிறது . Nன்னும் வசந்தும் சேர்க்கிறது

விளக்கம்:

ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் = (துக்கம் நெஞ்சை அடைப்பதால் விளக்கம் எழுதமுடியவில்லை.)


சீன் - 6

. கடைசியில் பழைய காதலன், அவள். இருவரும் இறந்துவிடுகிறார்கள் .பிணங்கள் அருகருகே சற்று இடைவெளி விட்டு PARALELL ஆக .

கேமரா ஸூம் ஆகிறது ::

அவர்கள் பிணத்தின் மேல் , தண்டவாளம் ,அவர்கள் --இருவர் ,

அவர்கள் இருவர்-- தண்டவாளம் , என்று மாறி மாறி .தண்டவாளம் சீன் ஓவர் லேப் செய்யப்படுகிறது.....

"தண்டவாளம் இணைந்து செல்லுமே தவிர சேராது

அது மாதிரி இவர்கள் காதலும் ".((பின்னணியில் குரல்)

விளக்கம்:

தண்டவாளம் = அவர்கள் காதல்

_______________XXXX___________________


என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு போன் செய்து கேட்டேன் , படம் பார்த்தியா என்று?

'ம்... பார்த்தேன் . சூப்பர் டைரக்‌ஷ்ன் டா !

_______________XXXX___________________

கேமரா ஸூம் ஆகிறது :

Arnold Schwarzenegger (Terminator XI) டெலிபோன் பூத்தில் .டெலிபோன் புக்கை புரட்டுகிறார் . O….P…….Q……R… பிறகு RA……...கண்கள் சிவக்க உற்று பார்க்கிறார் .மிலிடரி பைக்கில் விர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் பறந்து ஒரு வீட்டின் முன் நிற்கிறார் .காலிங் பெல் அடிக்கிறார் . மிஷன் கன்னை கைகளில் ஏந்தி படக் கிரிசிக் என்று trigger சரி செய்து கொள்கிறார் . கதவு திறக்கிறது .

..பட பட பட பட பட பட பட பட பட ..... பட பட பட பட பட பட பட

Rajalakshmi ? Ravishankar ? Rajender ?

முற்றும்


17 comments:

  1. ஓ.. இதுக்குப்பேருதான் டைரக்‌ஷனா?!

    ReplyDelete
  2. சென்ஷி said...

    //ஓ.. இதுக்குப்பேருதான் டைரக்‌ஷனா?!//

    அப்படின்னு நம்மள நம்ப வச்சாங்க.

    ReplyDelete
  3. ரவி..மைதிலி என்னை காதலி படம் பார்த்துட்டு ஒருவர் சொன்னது..உயிருள்ள வரை உஷா மாதிரி ஆறு தடவை பார்க்க முடியாது.ஒரு மூணு வாட்டி பார்க்கலாம்??

    ReplyDelete
  4. டைரக்க்ஷன் சூப்பரு :)

    ReplyDelete
  5. //விளக்கம்:

    ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் = (துக்கம் நெஞ்சை அடைப்பதால் விளக்கம் எழுதமுடியவில்லை.)//

    :))))

    மிகவும் ரசித்தேன்..!!

    ReplyDelete
  6. தண்டோரா said...

    //ரவி..மைதிலி என்னை காதலி படம் பார்த்துட்டு ஒருவர் சொன்னது..உயிருள்ள வரை உஷா மாதிரி ஆறு தடவை பார்க்க முடியாது.ஒரு மூணு வாட்டி பார்க்கலாம்??//

    சூப்பர்.அப்போ டிரெண்ட் வேற.இது மாதிரி மிகை இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  7. கானா பிரபா said...
    //டைரக்க்ஷன் சூப்பரு ://

    தல அதே டைரக்க்ஷன் வச்சு நம்மள கலாய்க்கிறீங்க.
    நன்றி.

    ReplyDelete
  8. சென்ஷி said...
    //விளக்கம்:

    ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் = (துக்கம் நெஞ்சை அடைப்பதால் விளக்கம் எழுதமுடியவில்லை.)//


    //மிகவும் ரசித்தேன்..!!//

    அந்த சின்ன வயசில இதெல்லாம் ரசித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. பால் பொங்கறது, பறவை பட படன்னு இறக்கையை அடிக்கிறது, .... கால சக்கரம் சுழல்வதற்கு , தள்ளு வண்டி இல்லாட்டி ரிக்க்ஷாவின் சக்கரங்கள் சுழல்வது. .... சும்மா பூந்து விளையாடுவாங்க நம்ம ஆளுங்க.... நன்றாக இருந்தது பதிவு

    ReplyDelete
  10. அப்போ இருந்த‌ ச‌மூக‌ அமைப்பிற்க்கு அது ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருந்திருக்கும்

    ReplyDelete
  11. அது ஒரு கனாக் காலம் said...
    //பால் பொங்கறது, பறவை பட படன்னு இறக்கையை அடிக்கிறது, .... கால சக்கரம் சுழல்வதற்கு , தள்ளு வண்டி இல்லாட்டி ரிக்க்ஷாவின் சக்கரங்கள் சுழல்வது. .... சும்மா பூந்து விளையாடுவாங்க நம்ம ஆளுங்க.... நன்றாக இருந்தது பதிவு//

    நன்றி.அவ்வளவு அறியாமையிலா இருந்தோம்?

    ReplyDelete
  12. இய‌ற்கை said...

    //அப்போ இருந்த‌ ச‌மூக‌ அமைப்பிற்க்கு அது ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருந்திருக்கும்//

    காட்சியில் இருக்கும் ‘mood"ஐ இப்படி வேறு பொருள்களின் மேல் ஏற்றி காட்டுவது செயற்கை
    இயற்கை.It is pathetically artificial.

    //ச‌மூக‌ அமைப்பிற்க்கு அது ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருந்திருக்கும்//
    அதே வருடத்தில் வந்த நல்ல படங்கள்:-

    பாலைவனச் சோலை,ராஜா பார்வை,பன்னீர் புஷ்பங்கள்,தண்ணீர் தண்ணீர்,டிக்..டிக்...டிக்..,
    விடியும் வ்ரை காத்திரு,மெளன கீதங்கள்.

    ReplyDelete
  13. பழைய படங்களைப் பார்க்கும் போது இந்த மாதிரி நிறைய அபத்தங்கள் இருக்கும்..

    ஆனால் இப்போ கூட இது போல சில(பல) படங்களில் மொக்கத்தனமான காட்சிகள் உள்ளதே..

    இப்போ நாம் ரசிக்கும் படங்கள் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காதோ என்னமோ.

    ஒருவேளை இதுதான் தலைமுறை இடைவெளியோ..

    ReplyDelete
  14. பட்டிக்காட்டான்.. said.

    //இப்போ நாம் ரசிக்கும் படங்கள் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காதோ என்னமோ//

    சூப்பர்.

    கவனித்துப்பாருங்க ரொம்ப மக்குத்தனமா இருக்கும்.அந்தந்த வயதுக்கு ஏற்ற அறிவில்தான்
    படம் பார்க்கிறோம்.

    ReplyDelete
  15. //.. அந்தந்த வயதுக்கு ஏற்ற அறிவில்தான் படம் பார்க்கிறோம். ..//

    உண்மைதான்..

    சிறுவயதில் நான் ரசித்து கைகொட்டி பார்த்த படங்கள் இப்போ காமெடியா தெரியுது..
    அப்போ மொக்கத்தனமா தெரிஞ்ச படங்கள் இப்போ காவியமா இருக்கு..

    "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி.." என்கிற கருத்தை போல நாம் வளர வளர நம் அறிவும் வளர்ந்து, நல்லது கெட்டது பிரித்துப் பார்க்க தெரிகிறது..

    ஆனாலும் சிலர் உடல் வளர்ச்சியோடு நின்று விடுகின்றனர்.. வயதுக்கு தகுந்த முதிர்ச்சி இருப்பதில்லை..

    ReplyDelete
  16. Idhellaam onnume illa Thala.

    TR master piece is VEERASAMY.

    Adha pathi, aedhaavadhu ezhudhunga.......

    ReplyDelete
  17. R.Gopi said...
    //Idhellaam onnume illa Thala.
    TR master piece is VEERASAMY.
    Adha pathi, aedhaavadhu ezhudhunga//

    அய்யோ...அய்யோ...அம்மா...என்ன விடுங்க..
    எஸ்கேப்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!