Wednesday, December 10, 2008

நந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்

வி.தக்‌ஷிணமூர்த்தி என்ற ஒரு திரை இசை மாமேதைக்கு "Swaralaya Kairali-Yesudas Award 2007."என்ற ஒரு விருது கொடுக்கப்பட்டது. இதை மலையாள திரை உலகம் இவருக்கு கொடுத்தது. இவருக்கு வயது 93. கேரளாவில் வசிக்கிறார்.


இதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.முக்கால் வாசி மலையாளம். இவர் மூன்று தலைமுறையாக இசை அமைக்கிறார். இவரை "சுவாமி" என்று அங்கு அழைக்கிறார்கள்


இவரின் கிழ் இசை பயின்றவர்கள் பட்டியல் எம்.எல்.வீ முதல் மின்மினி வரை.

மிக முக்கியமாக நமது மேஸ்ட்ரோ இளைய ராஜா இவரிடம் இசை பயின்றார்.

தமிழில் இவர் இசை அமைத்த சில முக்கியமான படங்கள் :-

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (நல்ல மனம் வாழ்க)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (அழகான பொண்ணுதான்/மாசிலா உன்னை காதலி)
நந்தா என் நிலா (நந்தா என் நிலா) 
அதிசிய திருடன் (முருகா என்றதும் மனம் உருகாதா)  


 என்னை மிகவும் பாதித்து பாடாய் படுத்திய பாடல்.  

படம்:நந்தா என் நிலா (1977)(விஜய குமார்,சுமித்ரா திரை கதை வசனம்: புஷ்பா தங்கதுரை)

இதில் "நந்தா நீ என் நிலா" ஒரு இனிமையான பாட்டு உள்ளது. அந்த பாட்டை SPB தன்னுடைய இளம் வெல்வெட் குரலில் குழைந்து பாடிக் கொ(கெ)ஞ்சுவார். 

இது மது வந்தி ராகத்தில் போடப்பட்ட பாடல். காதல் உணர்வுகளுக்கு ஏற்ற ராகம்.

(இதே மது வந்தி ராகத்தில் ராஜா போட்ட பாட்டு "என்னுளில் எங்கோ ஏங்கும் தீபம்". மனதை உருக்கும் பாடல். அடுத்து சுதா ரகுநாதன் பாடிய “கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி”)  

சற்று உன்னிப்பாக கேளுங்கள்.

இந்த பாட்டின் பின்னணியில் ஒரு இடத்தில் புல்லாங்குழலும் வீனணயும் குழைந்து கொஞ்சிக்கொண்டு வரும்.

internet explorer அல்லது Fire Fox


internet explorer/Fire Fox/google chrome


                                            

10 comments:

  1. மது வந்தி அழகான ராகம்.

    ஒய்.ஜி மகேந்திரன் மகள் பெயர் கூட மதுவந்தி தான். :)

    உங்க ஹைக்கூஸ் படிச்சேன். கடைசி ஹைக்கூ எனக்கு பிடிச்சு இருந்தது. :)

    ReplyDelete
  2. அம்பி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. //மூன்று நிமிட

    மௌன அஞ்சலியில்

    யாருக்கோ வாயு தொல்லை

    //

    Ha haaaa, Another Good one.

    ReplyDelete
  4. அம்பி,

    நன்றி.ஆனா இது பொய்கூ.

    ReplyDelete
  5. நந்தா என் நிலா - எம்.எஸ்.வின்னு போட்டிருக்கு musicpluginல்.

    அருமையான பாட்டு. ஆனா, பாடல் தொடக்கத்தில் ஒரு மாதிரி 'மொட்டையா' இசையில்லாமல் ஆரம்பிக்கர மாதிரி இரூக்கு :)

    ReplyDelete
  6. சர்வேசன்,
    முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    //பாடல் தொடக்கத்தில் ஒரு மாதிரி மொட்டையா//

    அந்த காலத்து கம்போசிங்.

    ReplyDelete
  7. நிலா சிலாகித்து உமிழ்ந்த நிலா !
    பலா சுவை போல வந்ததோ உலா..

    பக்தனை பித்தன் ஆக்கிய புத்தன் !
    எத்தனிலும் எத்தன், தக்க்ஷிணாமூர்த்தி சித்தன் !

    :)

    ReplyDelete
  8. நன்றி செளமியா.

    பாடல் பிடிச்சப் பிடில கவிதையே எழுதிட்டீங்க.

    ReplyDelete
  9. Albibabavum 40 thieves is by S.Dakshinamoorthy also known as Telugu dakshinamoorthy.

    V. Dakshinamoorthy has done some movies in 50 /60, primarily malayalam / tamil bilinguals.

    ReplyDelete
  10. Blogger Muthuswamy said...

    // Albibabavum 40 thieves is by S.Dakshinamoorthy also known as Telugu dakshinamoorthy.//

    You are right sir.

    // V. Dakshinamoorthy has done some movies in 50 /60, primarily malayalam / tamil bilinguals.//

    Yes.

    Thanks for your comment and visit.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!