Sunday, December 21, 2008

வைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்

                                    சிறுகதை
ஆபிஸிலிருந்து வரும் போது இரவு மணி பதினொன்று. எல்லாம் போட்டது போட்டபடி. கிச்சன் சிங்கில் பாத்திரங்கள் ரொம்ப நேரம் ஊறி ஒரு வாடை வந்துக்கொண்டிருந்தது. மோர் பாத்திரம் மூடாமல் திறந்திருந்தது.பாத்ரூம் லைட் அணைக்கப்படாமல்.

 சே! என்ன வாழ்க்கை.  தன்னை நொந்து கொண்டாள் வைஷ்ணவி. 


வைஷ்ணவி வீட்டைப் பார்த்தாள்.பிரிட்ஜ், போஸ்டர் போல் வால் டீவி. லேட்டஸ்ட் டிவிடி,ஹோம் தியேட்டர், கிச்சனில் மைக்ரோ வேவ் அவன்,டோஸ்டர்,கிரைண்டர்,கலை அம்சத்தோடு செய்யப்பட்ட டைனிங் டேபிள். பெட்ரூமில் டபிள் காட். உட்கார்ந்தால் மென்மையாக அமுங்கும். . மற்றும் பல விலை உயர்ந்த சாமான்கள். 
 
 

எதுக்கும் குறைச்சல் இல்லை. கட்டு கட்டாக சம்பளம். ஆனால் குடும்பம்?இதுகளோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.


குடும்பம் ஒன்றல்ல இரண்டு இருக்கிறது. கணவன் ஒரு தனி குடித்தனம் ஆயிரம் மைல் தள்ளி.  அவனும் இவள் மாதிரி எலக்ட்ரானிக்ஸ் சாமான்களோடு குடித்தனம் அங்கு. 

கல்யாணமாகி இரண்டாவது வருடத்தில் ஸ்ரீவத்சனுக்கு பதவி உயர்வு வந்து மாற்றலும் வந்து விட்டது.கனவிலும் எதிர்பார்க்காத நிகழ்வு. 

”போய்...ஆகனுமா? டியர்” குழந்தைத்தனமாக கேட்டாள் வைஷ்ணவி.

”என்ன பண்ணமுடியும்....பெருமாள்தான் ஏதாவது வழி சொல்லனும்” ஸ்ரீவத்சனுக்கு விழியில் மெலிதாக நீர் கோத்தது. வைஷ்ணவியை இறுக கட்டிக்கொண்டு தேற்றினான்.

இரண்டு பேருக்கும் இது ஒரு பெரிய அடிதான். எதிர்பார்க்கவில்லை.கனவுகள் உடைந்தது. பிரிவு தாங்காமல் இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளியில் இங்கொ அல்லது அங்கோ சந்திப்பார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள்.பெயில் கைதிகள் போல்.

ஊர் சுற்றல். சாப்பாடு.கண்டமேனிக்கு பொருள்கள் வாங்குதல். இரவில் திகட்ட திகட்ட காதல். திரும்பிப்பார்ப்பதற்க்குள் நாள் போய்விடும்.  துக்கம் தாங்கமல் பிரிவார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் சந்திப்பு ஆறு மாதம் அல்லது ஒன்பது மாதம் என்று இடைவெளிவிழ ஆரம்பித்தது. வேலை பளு, அயல் நாடு ப்ராஜ்கெட் என்று பல காரணங்கள்.குழந்தைப் பிறத்தலும் தள்ளிப் போயிற்று.

மாற்றல் என்பது சாத்தியாம என்று தெரியவில்லை. வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமல் விட்டேத்தியாகப் போய்க்கொண்டிருந்தது.

தன் அம்மா வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப்பார்த்தாள்.குடியும் குடித்தனமுமாக சந்தோஷமான வாழ்க்கை.பெரிய வீடு.வீடு நிறைய பாத்திரங்கள்.தென்னனமரம்,துளசி மாடம்.  குழந்தைகள் குட்டிகள்.தீபாவளி,பொங்கல், நவராத்திரி என வீடு அல்லோகலப்படும்.குடும்பத் தலைவர்,தலைவி மட்டுமில்லாமல் எல்லோருமே சந்தோஷமாத்தான் இருந்தோம். யாருக்கும் ஒரு குறையும் இல்லை.
 

அம்மா மேல் அன்பும் ஆசையுமுமாக இருந்தார் அப்பா. மரியாதையாகநடத்தினார் வேலைக்கு போக விட்டாலும் அம்மா தன் சுயத்தை இழக்கவில்லை.கெளரமாகவும் இருந்தாள்.கை தாழவில்லை.எந்த குழந்தைக்கும் எந்த குறையும் வைக்கவில்லை.ஒவ்வொருவரும் கண் பட்டுவிடும் அள்வு உயரத்தில் இருக்கிறார்கள்.Amma is s a hardcore   home maker. 

ஏன் படிக்க வைத்தாள்?கிச்சன் சிங்கில் பாத்திரங்கள் ஊறி கெட்ட வாடை அடிப்பதற்கா?



ரொம்ப நேரம் யோசித்து ஒரு முடிவு எடுத்தாள். வேலையை விட வேண்டும். அதே அம்மா பாட்டி மாதிரி கணவனுடன் சேர்ந்து குடியும் குடித்தனமுமாக வாழ வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம். யாருக்கும் எந்த குறையும் வைக்கக் கூடாது. 

நினைக்க நினைக்க நெஞ்சத்தில் இனம் ப்ரியாத சந்தோஷம் அப்பிக்கொண்டது. முன்னர் இருந்த விரக்தி மன நிலை போனது. கணவனின் வெளியூ மாற்றல்தான் இந்த முடிவை எடுக்கத்தூண்டியதா?கணவன் தன்னுடன் சேர்ந்திருந்தாலும் இதே முடிவுக்குதான் வந்திருப்போம். 

இந்த சந்தோஷத்தை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

மறு நாள் காலை காப்பிக் குடித்தவுடன் முதல் காரியமாக போன் செய்தாள்.அம்மாதான் எடுத்தாள். விஷயத்தைச்சொன்னாள்.

“வைஷணவி! கேட்க்றத்துக்கு சந்தோஷமா இருக்கு. இது இப்ப உனக்கு ஒத்து வருமா? நிறைய விட்டுக்கொடுத்துப் போகனும். அட்ஜஸ்ட் பண்ணிக்கனும். நிறையப் படிச்சு வேலப்பாத்து கை நெறைய சம்பளம் அது இதுன்னு அனுபச்சுண்டுருக்க. அதெல்லம் குறையும்.அத தாங்கிக்கனும்.”

”அம்மா ..... நா சொல்ல வந்தது...”

வைஷணவியை பேச விடாமல் அம்மா தொடர்ந்தாள். 

”அந்த காலம் வேற.  நாங்க அப்ப அடிமையாக இருந்தாலும் அதெல்லாம் பெருமையாக எடுத்துக்கற மைண்ட் செட் இருந்தது.அப்ப இருந்த மைண்ட் செட் இப்ப இருக்குமா? .  பர்ஸ்ட்டு உன்னோடு டெம்பரமெண்டுக்கு ஒத்துப்போனம்” 
நல்ல வேலய உட்டுடாத....... நாளக்கி ஒன்னு கிடக்க ஒன்னு ஆயி......”அம்மா முடிப்பதற்குள்


“சரி... சரி... எது ஆனாலும் உன் பக்கம் தல வைச்சு படுக்க மாட்டேன்.”

தாங்க முடியாத கோபத்துடன் பொட்டென்று போனை வைத்தாள்.


                                             முற்றும்




13 comments:

  1. நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி.

    அது என்ன சங்கேத குறியீடு. என்ன சொல்ல வரீங்க

    ReplyDelete
  2. எதார்த்தம்..எதார்த்தம்...

    //ஏன் படிக்க வைத்தாள்?கிச்சன் சிங்கில் பாத்திரங்கள் ஊறி கெட்ட வாடை அடிப்பதற்கா//

    ஆஹா..எவ்வளவு உண்மை...

    ReplyDelete
  3. :) இக்கரைக்கு அக்கரை பச்சை.

    ReplyDelete
  4. நல்ல கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. nalla kathai...indraya thinathill ippadithaan nadakirathu....naan ippoluthu thaan vellaikku sella arambithiruken- ippothu thaan ennaku ovoru rupaayin arumaiyum purigirathu...

    ReplyDelete
  6. நன்றி இளைய பல்லவன்,
    நன்றி Lancelot,
    உங்கள் முதல் வருகைக்கு.

    ReplyDelete
  7. யதார்த்தம் சொல்லும் அழகிய கதை ரவிஷங்கர்... கருத்துக்களின் முரண்பாடுகள் காலத்தின் வேகத்தில் மாறும் விதத்தை அழகாய் விளக்குகிறது இந்த கதை

    ReplyDelete
  8. Amma is s a hardcore home maker.
    ஏன் படிக்க வைத்தாள்?கிச்சன் சிங்கில் பாத்திரங்கள் ஊறி கெட்ட வாடை அடிப்பதற்கா?

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இவ்வரிகள்
    நல்ல கதை.

    ReplyDelete
  9. ரீனா,
    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    அமிர்தவர்ஷினி அம்மா,

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. realistic story:))

    Very well written Ravi, Hats off!!

    ReplyDelete
  11. கதை எதார்த்தமா இருக்கு!

    ReplyDelete
  12. நன்றி திவ்யா,

    நீங்கள் எல்லாம் கதையை படித்து நேர்மையாக விமர்சனம்
    செய்வதால் ஒரு தெம்பு வருகிறது.

    Feedback கிடைக்கிறது.இல்லாவிட்டால் சோர்வு வருகிறது.

    நன்றி கபிஷ்,
    என் கதைகளில் தவிர்ப்பது
    “மிகை ,பிரச்சாரம், அசட்டுத்தனம் ,ஓவர் மெலோடிராமா”

    ReplyDelete
  13. எல்லோரும் சொன்னது போல் யதார்த்தமாக் இருக்கிறது. எந்த படைப்பிலும் மெல்லிய இழையோடும் உண்மை இருக்குமென்றால் வாசகனை கவரும். இதில் இருக்கிறது. வாழ்த்துகள்.. (தாமதத்திற்கு மன்னிக்கனும்)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!