Friday, December 19, 2008

ஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை

ஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி

ஒவ்வொறு முறையும்
வீடு மாற்றும் போது
புழக்கத்தில் இல்லாமல் போன
அம்மிக்கல்லையும் 
ஆட்டுக்கல்லையும் 
அதன் ஜோடியான குழவிகளையும்
பெரிய அரிசி ட்ரம்மையும் - தாத்தாவின்
குட்டிக் காம்புடைய பெரிய
கலர் விசிறியையும்
லாரி பக்கத்தில் நின்று - தன்
மேற்ப்பார்வையில் ஏற்றும்
பாட்டியை புரிந்துக் கொள்ள 
முடிந்த என்னால்
முதலிரவு முடிந்து
வெளியே வந்தவளை மடக்கி
“சேர்ந்தாச்சா” என்று கேட்டு
உச்சி முகர்ந்து 
திருஷ்டி கழித்தது
ஏன் என்று புரியாமல்
ஒவ்வொறு முறையும்
வீடு மாற்றும் போது
ஞாபகம் வருகிறது
அம்மிக்கல் ஆட்டுக்கல்லோடு


6 comments:

  1. //உச்சி முகர்ந்து
    திருஷ்டி கழித்தது
    ஏன் என்று புரியாமல்..//
    எனக்குக்கூட புரியவில்லை...
    உங்களுக்கு ஏன் புரியவில்லை என்று...

    ReplyDelete
  2. சந்தர்,
    நன்றி. நீங்கரெண்டு(வலை)வச்சிருக்கிங்களோ?
    //உங்களுக்கு ஏன் புரியவில்லை என்று//

    எனக்கு எதுக்கு புரியனம்.ஜெயந்திக்கித்தான் புரியனம்

    ReplyDelete
  3. ஆமாம். ஆணால் எதனாவது ஒன்றில் தான் எழுதமுடிகிறது...

    ReplyDelete
  4. நல்லாருக்கு.மேட்டர் ஒரு மாதிரின்னாலும் இதுதான் நிஜத்தில் நடப்பது.

    அதைவிட வீடு மாற்றும் வைபவம் சூப்பர்.வேண்டாத பொருள் என்றாலும் வீட்டுக்கு வீடு நாங்க [பெண்கள்]எடுத்துச் செல்வோம்

    ReplyDelete
  5. //ஒவ்வொறு முறையும்
    வீடு மாற்றும் போது
    ஞாபகம் வருகிறது
    அம்மிக்கல் ஆட்டுக்கல்லோடு//

    என்ன புரியலயா உங்களுக்கு?
    சொல்லாமல் புரிவது...

    தேவா..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!