Monday, January 24, 2011

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்- கவிதை

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்

இரண்டாவது குறுக்குத் தெரு
தினமும்  எதிர்படும் நித்ய கல்யாணி
என்றுமில்லாமல் வித்தியாசமாக
புன்னகைத்தாள் இன்று

23-05-1974 ல் கொடுத்த
காதல் கடிதத்தை
இன்றுதான் படித்திருப்பாளோ

தயவு செய்து கதவை மூடவும்

ஊதுவத்தியா
பெர்ஃப்யூமா
மேல் வீட்டு கணேசனின்
தலைமுடி எண்ணெய்யா
மேல் நாட்டு பழமா
பவுடரா
ஆரெம்கேவியின் புதுப் புடவையா
வாசனைக் கட்டியா
விபூதியா

பிராணயாமம் செய்தபடி 
ஐந்தாவதில் இருந்து
ஒன்றுக்கு வந்து
கதவைத் திறந்து யோசிக்கையில்

தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
 
உன் வாசனையாகவே
இருந்துத் தொலையட்டும்
கதவை மூடினேன்

காக்க காக்க மாவு காக்க
பூட்டிய வீட்டில்
பாத்திரத்திலிருந்து
பொங்கி வழிந்துக்கொண்டிருக்கிறது
இட்லிமாவு
காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு
இன்று வேலை அதிகம்
தூங்கிவிட்டார்

 .

8 comments:

  1. முதலாவது பிடித்திருந்தது.
    இரண்டாவது ம்ஹூம்....
    மூன்றாவது பரவாயில்லை...

    //இரண்டாவது குறுக்குத்
    தினமும் எதிர்படும் நித்ய கல்யாணி//
    குறுக்குத் அப்புறம் ‘தெரு’ வந்தாகணுமே....

    ReplyDelete
  2. வித்தியாசமான தொகுப்புங்க....

    ReplyDelete
  3. wow...ரெண்டுமே எனக்கு பிடிச்சது...என்னவோ சுஜாதா ஸ்டைல் இல் இருந்தது எனக்கு படிக்க...அதான் ரொம்ப பிடிச்சதா னு தெரில..:)))

    ReplyDelete
  4. நன்றி தமிழ்ப்பறவை. சுட்டிக் காட்டியதற்கு நன்றி திருத்திவிட்டேன்.இரண்டாவது கவிதையில் இப்போது இருக்கும் கடைசி மூன்று வரிகளுக்கு பதிலாக வேறு இருந்தது.அது சம்பிரதாயமாக இருப்பதால் விட்டு
    விட்டேன்.

    நன்றி.

    ReplyDelete
  5. நன்றி சித்ரா.

    ReplyDelete
  6. நன்றி ஆனந்தி.

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  8. நன்றி பத்மா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!