Monday, January 17, 2011

பொன்னியின் செல்வன் படம் ஓடுமா?

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி பத்திரிக்கையில் தொடர்கதையாக எழுதப்பட்ட பெரிய நாவல் “பொன்னியின் செல்வன்”.தொடர் வெளிவந்த காலம் 1950-55.(இது ஒரு சரித்திர வரலாற்றுப் புனைவு)அதற்கு பிறகு பல்வேறு காலக் கட்டங்களில் மீண்டும் மறு பிரசுரம் செய்யப்பட்டது. இது மற்ற தலைமுறைகள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது.

இதைப் படித்த முதல் தலைமுறை படித்ததை ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பலர் வீடுகளில் பழுப்பு நிற பைண்ட் புத்தகம் இருக்கும். புதுசை விட இதற்கு மதிப்பு அதிகம்.அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சென்றார்கள். அடுத்த தலைமுறையில் இதை 25% படித்திருப்பார்கள்.மீதி 75%முதல் தலைமுறை படித்ததாக சொல்லிக்கொண்டார்கள்.

இந்த நாவலுக்கு ரசிகப் பேரவைகள் இருப்பதாக கேள்வி.

பின்னர் தலைமுறைகள் மாறவும் சுற்றுச்சுழல்களும் மாறவும் படிப்பது குறைய ஆரம்பித்தது.ஆங்கில மீடியம் படித்த தலைமுறை அதிகமாயிற்று.

பைண்ட் புக்குகள் மக்கிப்போய் கடைக்குப்போயின.போகாமல் வீட்டில் இருந்தாலும் அதை தான் படிக்காமல் தாத்தா படித்தது, பாட்டி படித்தது என்று பில்ட் அப் கொடுத்துக்கொள்கிறது ஒரு தலைமுறை.புத்தகக் கண்காட்சியிலும் சில பேர் ஆர்வமாக வாங்கியபடி இருந்தார்கள்.வயது 45க்கு மேல்

சாதாரண இருபது பக்கம் படிப்பதற்கே இந்த தலைமுறைக்கு நேரமில்லை.இருக்கும் நேரத்தில் கைப்பேசியில் வரும் குறும்செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆசை இருந்தாலும் மூத்தத் தலைமுறைக்கும் பொறுமை இல்லை.இருக்கும் நேரத்தில் தொலைக்காட்சிதான்.

நானும் இரண்டாவது தடவைப் படிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறேன். முக்கிய காரணம் முதல் தடவை இருந்த அதி உத்வேகம் இப்போது இல்லை. காரணம் மாறிவிட்ட சூழ்நிலைகளும் பெருகிவிட்ட ஊடகங்களும்.

ஆனால் அப்போது எப்பேர்பட்ட ஆர்வம்!ரொம்ப அருமையாக இருக்கும்.அதில் வரையப்பட்ட சித்திரங்களுடன் வாழ்ந்ததுண்டு.நினைத்தால் பெருமையாக இருக்கிறது.பல பேர் இன்னும் விடாமல் ஆர்வத்துடன் ரிவைஸ் செய்கிறார்கள்.

அரசியல்வாதி வைகோ பேச ஆரம்பித்தால் நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்.


சில பேருக்கு ஆசை இருக்கிறது.ஆனால் நேரம் இல்லை.தொலைதூர பஸ்ஸிலோ,ரயிலிலோ, காரிலோ பைண்ட் புக் நாவல் படிக்கும் மனிதர்கள் ரொம்ப ரொம்ப அரிதாகிவிட்டார்கள்.

இப்போது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கப்போவதாக ஊடகங்கள் சொல்கிறது.எம்ஜியாரும் கமலும் கூட எடுப்பதாக பேச்சு இருந்தது ஒரு காலத்தில். எடுத்தால் ஓடுமா?ஓடுமா என்று கேட்பது கூட அபத்தமாக இருக்கிறது.இது 100/250/300 நாள் ஓடும் படங்கள் காலம் அல்ல.நாற்பது நாள் ஓடுவதற்கு 400 கோடி.வலிந்து 100 நாளும் ஓட்டலாம் சன் குழுமம்.

மணிரத்னத்தின் தனிமனித ரசிப்புக்காக எடுக்கப்படுகிறதோ?சரியாக இல்லாவிட்டால் தொலைந்தார்.

சரித்திர/புராண/மாயஜாலப் படங்களின் கெ(செ)த்து போய் பல பல வருடம் ஆகிவிட்டது.சமீபத்தில் வெளி வந்த உளியின் ஓசைப் பற்றிக் கேட்டால் கழகக் கண்மணிகளே அலறுகிறார்கள்.

ராமாயணம் மகாபாரதம் சீரியலுக்கு இருந்த மவுசு கூடபோய் விட்டது. தொலைக்காட்சியிலும் சரித்திரக் கதைகள் வருவதில்லை.சமூகப்படத்திலேயே ராஜா ராணி வேடத்தில் வரும் டூயட்டுகள் போய்விட்டது.

டிரெண்ட் வேறு அடிக்கடி மாறுகிறது.நாம் எங்கோ வந்துவிட்டோம்.உளவியலாகப் பார்த்தால் சரித்திரபட கதா நாயகர்கள்/வசனங்கள் நமக்கு அன்னியமாவதால் நம்மால ஒட்ட முடிவதில்லை. வீணாப்போன மசாலா படத்தில் லயக்கிறோம்.

இம்சை அரசன் கூட நகைச்சுவையினால் ரசிக்க முடிந்தது.

அடுத்து நிச்சியமாக படம் மூணு மணி நேரம் ஓடும்.பொறுமை இருக்குமா?

O.A.K.தேவர்,சிவாஜி,அசோகன்,ரங்கராவ்,மனோகர்,ராமதாஸ், பகவதி,செந்தாமரை,எஸ்.ஏ.கண்ணன்,மேஜர்,,வீரப்பா இன்னும் பிற போன்றவர்களின் கம்பீரம் இப்போது இருக்கும் நடிகர்களிடம் இருக்குமா?வசனத்தை சரியாக உச்சரிப்பார்களா?பரட்டைத் தலையுடன் மதுரை பாஷை பேசி
நடிக்க நிறைய பேர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.டாட்டா சுமோவில் இறங்கி “சங்க அறுத்துடுவோம்ல” என்று பேசும் வில்லன்கள் இதில் பொருந்தி வருவார்களா?

சாதாரணமாக  சமூகப்படத்திலேயே நம்  பிரபல கதாநாயகர்களை  வேட்டி சட்டையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்புவதில்லை.அப்படி இருந்தால் இரட்டை வேடம் கொடுத்துவிடுவார்கள்.ஒருவர் கிராமத்தான் இன்னொருவன் நகரத்தான்.

நிறைய ஹோம்வொர்க் செய்து சுவராஸ்யமாக எடுக்க வேண்டும்.எடுத்தால் யார்தான் ரசிக்க மாட்டார்கள்.

.

14 comments:

  1. “சங்க அறுத்துடுவோம்ல” ....ரவி ஸார் இந்த மதுரை படங்கள் பற்றி கேள்விப்பட்டவுடன் நான் மனநோயாளி அலற அரம்பித்துவிடுகிறேன்... சத்தியமா இதுக்கு மேல தமிழ்சினிமா ரசிகர்கள் தாங்கமாட்டார்கள்.

    ReplyDelete
  2. ஏற்கனவே மோகமுள்ளை ஒருவர் குதறிப் போட்டாச்சு.
    சில படைப்புகளுக்கு ஒவ்வொரு வாசகர் மனதிலும் அவரவர் கற்பனைக்கேற்ற காட்சிகள் விரியும். பொன்னியின் செல்வனும் அப்படித்தான். படித்தவர்கள் அத்தனை பேரும் படிக்கும்போதே அதைத் தனக்குள் திரைப்படமாக்கி கண்டு ரசித்திருப்பார்கள். பலபெருக்குள் இருக்கும் திரைப்படத்தோடு இந்த ஒரிஜினல் திரைப்படம் ஒத்துப் போகாவிட்டால் நிச்சயம் எரிச்சல்தான் வரும். அதுவும் இயக்கம் மணிரத்தினம். எதற்கு விஷப் பரீட்சை என்று பயமாகவே இருக்கிறது. நாவல் சிதையாமல் தில்லானா மோகனாம்பாள் எடுத்தாற்போல் இது முடியுமா?

    ReplyDelete
  3. வாங்க ராஜா. இப்போ மதுரை படம் டிரெண்ட்.அதான் நிறைய வருது. நல்ல படங்களும்(கத்தி ரத்தம் இல்லாத) வருது.

    நன்றி.

    ReplyDelete
  4. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

    // ஏற்கனவே மோகமுள்ளை ஒருவர் குதறிப் போட்டாச்சு.//

    ஏங்க இப்படிச் சொல்றீங்க. நல்லா எடுத்திருந்தார் ஞானராஜசேகரன்.நாவலின் ஜீவனைக் கெடுக்க்வில்லை.

    // படித்தவர்கள் அத்தனை பேரும் படிக்கும்போதே அதைத் தனக்குள் திரைப்படமாக்கி கண்டு ரசித்திருப்பார்கள். //

    ஆமாம்.

    //நாவல் சிதையாமல் தில்லானா மோகனாம்பாள் எடுத்தாற்போல் இது முடியுமா?//

    கஷ்டம்தான்.ஏ.பி.நாகராஜன் ரொம்ப அறிவுஜீவித்தனம் இல்லாமல் பாரமத்தனத்துடன் எடுத்திருந்து பெரிய வெற்றி பெற்ற்து.

    நன்றி.

    ReplyDelete
  5. பொன்னியின் செல்வன் படமாக எடுக்கப்பட்டால் ஓடுமா என்பது திரைக்கதையில் தான் உள்ளது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாது, ஈகோ இல்லாத நடிகர்களான கார்த்தி, சூர்யா, ஜீவா, ஆர்யா, பரத் போன்றவர்களை உபயோகிக்கலாம்.

    ப்ரகாஷ்ராஜ், நாசர், ஷண்முகராஜன், விஜயகுமார், பசுபதி போன்ற கேரக்டர் ஆர்டிஸ்டுகளும் இருக்கிறார்கள். இவர்களை அழகாக உபயோகித்து படமாக எடுக்கலாம்.

    பொன்னியின் செல்வனை சன் பிக்சர்ஸ் எடுத்தால் அதை அட்டகாசமாக மார்க்கெட் செய்யலாம். உதாரணத்திற்கு தங்கள் நாளிதழில் ஒரு பக்கம் ஒதுக்கி தினமொரு அத்தியாயம் வீதம் வெளியிடலாம்.

    இதனால் இதற்கு முன் படிக்காதவர்கள் கூட படித்து, கதையை புரிந்து கொள்வார்கள். அப்புறமென்ன ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை 'சன் பிக்சர்ஸ் வழங்கும்' என்று ட்ரெய்லர் போட்டு படத்தை ஓட்டி விடலாம்.

    ReplyDelete
  6. SUREஷ் (பழனியிலிருந்து) said...

    //நேரமிருந்தால் பாருங்களேன் //

    படித்து அங்கேயே பின்னூட்டம் இட்டுவிட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  7. //இதனால் இதற்கு முன் படிக்காதவர்கள் கூட படித்து, கதையை புரிந்து கொள்வார்கள். அப்புறமென்ன ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை 'சன் பிக்சர்ஸ் வழங்கும்' என்று ட்ரெய்லர் போட்டு படத்தை ஓட்டி விடலாம். //

    கடைசியில் இதுதான் நடக்கப்போகிறது பிரசன்னா ராஜன்.

    ReplyDelete
  8. எடுக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. அந்த கதைகேற்ற தமிழ் அறிந்த நடிக நடிகையர் எவரும் இல்லை. எல்லோரும் சமிக்கி வைத்து தைக்கப்பட்ட ஜிகினா உடையிலும் பித்தளை கிரீடங்களிலும் வந்தால் மட்டும் போதுமா? கேவலமாக வசனம் பேசும் நடிகர்கள்தான் இன்று நிறைய உண்டு கார்த்தி, சூர்யா, ஆர்யா என்று.

    ReplyDelete
  9. // கேவலமாக வசனம் பேசும் நடிகர்கள்தான் இன்று நிறைய உண்டு கார்த்தி, சூர்யா, ஆர்யா என்று//

    ஏங்க..இவங்க நல்லா பேசுவாங்க கக்கு மாணிக்கம்.

    எடுத்து கெடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லதுதான்.

    ReplyDelete
  10. //நிறைய ஹோம்வொர்க் செய்து சுவராஸ்யமாக எடுக்க வேண்டும்.எடுத்தால் யார்தான் ரசிக்க மாட்டார்கள்//

    இத நான் ஆமோதிக்கிறேன்...:)

    ReplyDelete
  11. நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  12. eathanai murai padithaalum meendum padikka thoondum naan 20 muraiku mele padithuvittan nambuvadhu ungal estam pdam edupadhu endru nall nadigarglum graphics.m irukiradu nambikkaiyum aarvamum irundal ellam satthyam. mahenthiran.bsnl

    ReplyDelete
  13. நன்றி மகேந்திரன்.நீங்கள் சொல்வது சத்தியம்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!