Sunday, January 9, 2011

சாரு நிவேதிதா நாவல் "தேகம்" -விமர்சனம்

சாரு எழுதிய “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்” தான் முதலில் வாங்கிய நாவல்.பின்நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்?(இது அவரே சொல்லிக்கொண்டது)மற்றபடி அவரின் பத்தி
எழுத்துக்கள்தான் அறிமுகம்.

பேன்சி பனியனை முப்பது பக்கத்திற்கு மேல் படிக்க முடியாமல்
மூடி வைத்ததுதான். ஆயிரத்தோரு அரபிய இரவுகள் கணக்காக சுவராசியமில்லாத அதே சுயபுராணம்.சம்பாஷணைகள் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும் அலுப்பூட்டும் நான்லீனியர் டைப் விவரிப்புகள்.

கடைசிவரை அதைப் படிக்க முடியவில்லை.நேற்று அவரின் புது நாவலான  “தேகம்”(ரூ 90) புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.

மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன்.ஒரு வழியாக (”வதை”க்கப்பட்டேன்)முடித்தேன்.ஏன் வாங்கினோம் என்று ஆயிற்று.சுவராஸ்யமே இல்லை.

கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.காரணம் ஆழம் இல்லை. வதையில் அதிர்வு இல்லை.காமா சோமாவென்று அசட்டுத்தனமான நாவல்.கோர்வை இல்லை.கதைச்சொல்லி  விவரித்ததைவிட நேரலையாக வதை சம்பவங்களை விட்டிருக்கலாம். Action Packed இருந்திருக்கும். சாதாரண ஒரு குறும்படத்தில் கூட ரத்தமும் சதையுமாக சாதாரண டார்ச்சரைக் காட்டி அசத்துகிறார்கள்.

கோணங்கியின் “கழுதையாவரிகள்” கதையில் வரும் கழுதைகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.இதில் வரும் பன்றிகள்??????

இந்த மாதிரி நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம்(?) எழுதுவதைகூட ஒரு திறமையுடன் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.இதில் அது இல்லை.

இவர் ஜீனியர் விகடனில் வரும் கிரைம் சம்பவங்கள் மற்றும் ஆபாச இணைய தளங்களில்  காட்டப்படும் bizzare/weird sexual actக்களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்,தோற்றங்கள் இரண்டையும் சேர்த்து இவற்றுடன் இலக்கியத்தை கலந்து மிக்ஸியில் அடித்து கொடுத்து அசட்டுத்தனமாக ஆகிவிட்டது.எழுத்து தொளதொளவென்று இருக்கிறது.

பொதுவாகவே இவர் தான் தெரிந்துக்கொண்ட sexual slang சொற்களை அடிக்கடி விளக்கம் கொடுத்து எழுத்துக்களில் ”காட்டிக்”கொள்வார்.


அடுத்த எரிச்சல் மீண்டும் சுயபுராணம்.இந்த நான்லீனியர் டைப்பில் வசதியாக எதை வேண்டுமானால எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்.முடிக்கலாம்.வசதியானது.
மனதில்தான் ஒட்டமாட்டேன் என்கிறது.நானும் பின் நவீனத்துவமாக டியூன் பண்ணிக்கொண்டு படித்தும் பார்த்தேன்.ஒட்டவில்லை. காரணம் எழுத்தில் சத்தியம் இல்லை.

தி.ராஜேந்தர் படங்களில் காணப்படும் அச்சுபிச்சுத்தனம் தெரிகிறது.

அதற்கடுத்து பாசாங்குத்தனமான சம்பந்தமே இல்லாத உபநிஷத்/ஜென்/ஹாம்லெட்/ராமாயணம்/ஹடயோகம் என்று  மேற்கோள் கொடுத்து பிலிம் காட்டுகிறார்.
எரிச்சல் ஊட்டுகிறது.

கலவி விஷயங்களில் யதார்த்த வசனங்கள் வைத்தவருக்கு இதில் வரும் ரெளடிகள் சென்னைத் தமிழின் மிக முக்கிய கெட்டவார்த்தைகளான ”...தா” ”..ளா” உபயோகிக்காமல் எப்படி பேசுகிறார்கள் ?

.

20 comments:

  1. \\எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!\\
    :)

    ReplyDelete
  2. எல்லாரும் வெறுக்கிறாங்களே, நல்லாயில்லைங்கிறாங்களே, உண்மையிலேயே ஏதாவது இவரிடம்/இவர்கதைகளில் இருக்கோ என்று முயன்று தோற்றவர்களில் நீங்களும், திரு. மாதவராஜும் அடங்கும்னு நெனைக்கிறேன்.

    உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. அதுவும் ஒரு அனுபவம்தான்...:)

    ReplyDelete
  4. மிகச் சரியாக்ச் சொன்னீர்கள். இந்த பதர் எழுதும் எழுத்துகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன் (ஜீரோ டிகிரி). எந்த ஆழமுமில்லாத பைத்தியக்கார உளறல். மேலும் எழுதியதையே மறுமடியும் எழுதுவது. இவன் நான் லீனியர் மட்டும்தான் எழுத்ட முடியும். அதுதான் ஒரு பக்கத்தில் அடங்கும். வேறு எதையும் எழுத முடியாது. சம்பந்தம் இல்லாமல் எழு(ரு)துவதை பின் நவீனத்துவம் என்று சொல்லும் ஒரு அறிவிலி. இந்த வருடம் எழுதிய 7 புத்தகங்களையும் பிய்த்து கலக்கிப் போட்டு அடுத்த வருடம் மூன்று புத்தகங்கள் எழுதி விடுவான். பிறகு எப்படி லீனியர் எழுத முடியும். ஒரு நாவல் எழுத தேவையான குறைந்த பட்ச உழைப்பு கூட இந்த சோம்பேறியால் முடியாது.

    ஒரு உதாரணத்துக்கு உலகின் மிகச் சிறந்த புகைப்படம் என்று ஒரு குண்டு வீச்சு பின்னனியில் ஒரு குழந்தை ஓடி வருவதை சொல்வார்கள். அது கறுப்பு வெள்ளை. இவர் உடனே அது கறுப்பு வெள்ளை என்பதை மட்டும் புரிந்து கொண்டு ஸ்டுடியோவுக்ப் போய் இவனுடைய கறுப்பு வெள்ளை பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்க் கொண்டு இதுதான் உலகின் மிக சிறந்த புகைப்படம் என்று சொல்லுவான். அந்த அளவு தான் சிந்திக்கும் திறன், அறிவு மற்றும் உழைப்பு.

    இந்த லட்சனத்தில் 40000 ரூபாய் கண்ணாடி, 1000 ரூபாய் பேனா. எந்த இளிசவாயன் வாங்கிக் கொடுத்தானோ? வாங்கிக் கொடுத்ததவனை செருப்பால் அடித்த மாதிரி இருந்திருக்கும். ஜெய மோகனின் உழைப்பில் 2% கூட முடியாத இவர் அவரை எதிரியாக அறிவித்துக் கொள்வதின் மூலம் இவனும் அதே அளவு என்று காட்ட முயல்கிறான், அதுவே உண்மை. இவனுக்கு பண உதவி செய்பவர்கள் அனைவரையும் இதுவரை செருப்பால் அடித்திருக்கிறன், ஆனாலும் புதுப் புது ஆட்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. //எல்லாரும் வெறுக்கிறாங்களே, நல்லாயில்லைங்கிறாங்களே, உண்மையிலேயே ஏதாவது இவரிடம்/இவர்கதைகளில் இருக்கோ என்று முயன்று தோற்றவர்களில் நீங்களும், திரு. மாதவராஜும் அடங்கும்னு நெனைக்கிறேன்.

    உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்!
    //

    :) :) :)

    ReplyDelete
  6. நல்ல வேளை. நான் சாரு நாவல்கள் எதுவும் படித்ததில்லை. ஏதாவது ஒன்று வாங்கி படிக்கலாம் என்று நினைத்தேன். இனி அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன். நன்றி ரவி.

    ReplyDelete
  7. இன்னுமா இந்த உலகம் சாருவை நம்புது.....

    ReplyDelete
  8. ///எல்லாரும் வெறுக்கிறாங்களே, நல்லாயில்லைங்கிறாங்களே, உண்மையிலேயே ஏதாவது இவரிடம்/இவர்கதைகளில் இருக்கோ என்று முயன்று தோற்றவர்களில் நீங்களும், திரு. மாதவராஜும் அடங்கும்னு நெனைக்கிறேன்.

    உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்! ///

    நச் commented!!,,,:)) ரவி!!...better luck next time..:))))))

    ReplyDelete
  9. நன்றி கோபி ராமமூர்த்தி.புள்ளிதான் வச்சுருக்கீங்க இன்னும் எதுவும் சொல்லல.

    ReplyDelete
  10. வாங்க அருண்.ஆமாம் தோற்றுப்போய்விட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  11. தமிழ்ப்பறவை said...

    // அதுவும் ஒரு அனுபவம்தான்...:)//
    படிக்காமல் எதையுமே வெறுத்து ஒதுக்குவதில்லை.
    அது தவறும் கூட.படித்துப்பார்ப்பது ஒரு அனுபவம்.
    நன்றி.

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி அனானி.கருத்து தனிமனித தாக்குதல் இல்லாமல் இருப்பது நலம்ங்க.அவரின் எழுத்தை மற்றும் விமர்சிப்போம். நன்றி.

    ReplyDelete
  13. நன்றி புருனோ. நீங்கள் படித்தீர்களா?

    ReplyDelete
  14. நன்றி பாஸ்கர்.

    ReplyDelete
  15. ஆனந்தி.. said...



    // நச் commented!!,,,:)) ரவி!!...better luck next time..:))))))//

    நல்லா இருந்தா படிக்கலாம்.

    ReplyDelete
  16. இன்னமும் உங்களுக்கு பட்டம் எதுவும் கிடைக்கலியா..? இனிமே கிடைச்சிரும்... இலக்கிய அறிவிலி.. அரை வேக்காடு. பத்தாம்பசலி.. எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம். தயாரா இருங்க..1

    ReplyDelete
  17. //நன்றி புருனோ. நீங்கள் படித்தீர்களா?//
    இல்லை சார்

    ReplyDelete
  18. ஏன் இந்த தற்கொலை முயற்சி?

    ReplyDelete
  19. ராசலீலா முடிந்தால் படித்து பாருங்கள். சாருவின் ஓரளவு தேறும் படைப்பு என்று சாருவை படித்தவர்களே கூறுகின்றனர். கல்லூரி படித்த போது 'ஜீரோ டிகிரி' படிக்க முயன்று தோற்று போனேன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!