Friday, November 13, 2009

இளையராஜா சாரே!.Soங்க்ஸ் மதுரமாயி!




Pazhassi Raja -Ilayaraja

பழசிராஜா என்கிற மலையாளத் திரைப்படம்  கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இது ஒரு period film.இசை Master Blaster மாஸ்ட்ரோ இளையராஜா.இது மாதிரி வித்தியாசமானப் படங்கள்தான் அவரின் திறமையை வெளிக்கொணடுவருகிறது.விடுவாரா? பின்னிவிட்டார் ஞானி.
இதெல்லாம் ஜுஜுபி இவருக்கு.


பாடல்களை பார்ப்போம்: (ஹெட்போனில் கேட்டால் துல்லியமாக கேட்கலாம்)



1.ஆதிஉஷஸ்சந்தியா  பூத்தது இவடே: 


பாடியவர் யேசுதாஸ் மற்றும் எம்.ஜி.ஸ்ரீகுமார்.வீரியமான உச்சரிப்பு.என்ன வீரியமான பாட்டு.அட்டகாசம்.தாய்மொழி ஆச்சே.பிச்சு உதறுகிறார்.இந்த வயதில் (65) என்ன பிச்சிங்.மெல்லிய ட்ரம்ஸ் தட்டல்களோடுஆரம்பித்து, யேசுதாஸ் சேர, பின்னணியில் “பச்சங்...பச்சங்..” ”திடும் திடும்”குருவாயூர்
கோவில் கேரள வாத்தியங்கள் மாதிரி ஒலிகள் விஸ்வரூபம் எடுத்து கவுண்ட் 1.22ல் குட்டி குட்டியாய் அங்குமிங்மாக டிரம்ஸ் “இடி” ஒசைகள் ஒத்த பாட்டு  70mm கணக்கா கிராண்டாக முன்னேறுகிறது.

பல்லவி முடிந்து முன்னேறிய பாட்டின் First interludeஐ மாஸ்ட்ரோவின் கைவரிசை முடிந்து 2.13இல் “ஆர் இவ்விடே” என்று யேசுதாஸ்ஆரம்பித்து அதை ஸ்ரீகுமாரனும் ரிப்பீட் செய்து ஆரம்பிக்கும் இடம் சூப்பர்.அடுத்தவரிகள் பாடி,பாட்டின் டெம்போ ஏறி மெட்டு மாறி ”காற்றோ காற்றருவிகளோ” என்று இவர்கள் மேலும் பாடாமல் நிறுத்த பின்னணியில் ஒரு இனிமையான பெண் குரல்(சித்ரா?) “ ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது இவ்டே”என்று முதல் சரணத்தை முடிக்கிறார்.இசைச்சாரல். 

அதே மாதிரி இரண்டாவது சரணத்திலும் பிச்சு உதறுகிறார் ராஜா. ஒரு இசைப் பிரளயம் முடிவுக்கு வருகிறது கேட்டு முடித்தவுடன்.

 

2.குன்னத்தே கொன்அச்சம் பொன்மோதிரம்:

பாடியவர் சித்ரா. இனிமையான காதல் பாட்டு. Preludeல் சாரங்கியின் இழைகள் இனிமையாக இழைந்து வந்து மெதுவாக மாறி அதே இழைகள்(இப்போது வயலின்?) துள்ளி துள்ளித் தெறித்து முடிய சித்ரா  பல்லவி பாட ஆரம்பிக்கிறார். கவுண்ட்0.49ல் ”வரவின் புகையால்” என்று அழகான மெட்டு மாறி 1.00 வரை தொடர்ந்து  ஒரு புல்லாங்குழல் finishing touch கொடுக்க மீண்டும் “குன்னத்தே”. அந்த 0.49  to 1.00 வரை “தும் தும்” ஒரு இசைக் கருவி கூடவே அணைவதும் மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ் இனிமையோ இனிமை.

முடிந்ததும் ஆரம்பிக்கும் முதல் Interlude ல் ஒரு மெலிதாக பீரிடும் சாரங்கிஇசை அதைத் தொடர்ந்து சித்ரா மீண்டும் பாட ஆரம்பிக்கிறார்.2.28ல் ”துணையாய்”மெட்டு மாறி 2.40 வரை தொடர்ந்து, மீண்டும் பழைய மெட்டுக்கு வருவது என்ன அழகு!கேட்டோ சேட்டா! முன்னால் வந்த அதே “தும் தும்”
 கூடவே  அணைவதும் மற்றும்  மடக்கி மடக்கி அடிக்கப்பட்டு வரும் தபேலா/ட்ரம்ஸ்ஸும் இசைக்கப்படுகிறது.

இரண்டாவது  Interlude ல் இதைத் தொடரும் வீணை மற்றும்  இதற்கு எக்கோவாக வயலினின் இனிமையான இசை. முடிந்ததும் 3.07 to 3.15 இடையில் “ ஒரு காட்டு காட்டுதல்” புல்லாங்குழலும் மற்ற இசைக்கருவிகள் வைத்து.அம்மாடியோவ்!முடிந்ததும் சித்ரா தொடர்கிறார்.  மீண்டும் மெட்டு மாறி 4.00  to 4.11 வரை சூப்பர்.

ஆபேரி/பீம்பளாஸ் ராகம்?மேல் சொன்ன  Interlude ல் வீணையில் வாசிக்கப்படுகிறது.

No doubt....It is proved  again 100000000000000th time Raja is the king of Music.

இது தவிர, வழக்கமாக பாடல் இடையே குறுக்கும் நெடுக்கும் தலை காட்டும்இனிமையாக இசை ஒலிப்புகள்.இசை ஒலிப்புக்களுக்கும் ரேஷன் கார்டு உண்டு.அளவுதான்.ஒரு இடத்தில் வருவது இன்னோரு இடத்தில் வராது.




3.அம்பும் கொம்பும் கொம்பன் காட்டில்:

பாடியவர்கள் ராஜா,குட்டப்பன்,மஞ்சரி.காட்டுவாசிகள் பாட்டு மாதிரி இருக்கிறது.சூப்பர் மெட்டு. பின்னி பெடல் எடுக்கிறார்.

4.ஆலமதங்கள வைத்தவனல்லே:
குரூப் பாட்டு.வேகமான பாட்டு.அரேபியன் இசை.ட்ரம்ஸ் பொளுந்து கட்டுகிறார் ராஜா.”ஆயிலாக இல்லலாஹா” என்று வரும் தொழுகை வார்த்தைகள் அற்புதம்.பாட்டைப் பாடியவர்களும் (குரல்)சூப்பர்.

5.ஓடத்தண்ணில் தாளம் கொட்டும் கட்டில்:
பாடியவர்கள் சந்திரசேகர்,சங்கீதா.அருமையான மெட்டு.இதில் ஆண் பாடகர் உள்ளே வரும் இடம் அருமை.அவர் பாடலுக்கு வரும் இசையும் அருமை.
இரண்டாவது interludeல் இசைக்கோர்ப்புகள் அருமை.

6.மாதங்கானான: இது ஒரு சின்ன ஸ்லோகம்.

 பாடல்களின் இடையில் வரும் ”பூஞ்சால் கட்டும்” “ஒரு காணாச்சத்தம்” ”நாத கங்கை ஒழுகி வந்து”  “அசோகோடே..மசக்கோடே” மலையாள வார்த்தைகள் வசீகரமாக இருக்கிறது.

 இதன் லிங்க்:1. பழசிராஜா பாடல்கள்

                             2.பழசிராஜா

                              3.பழசிராஜா பாடல்கள்



டெயில் பீஸ்: ரொம்ப வருடத்திற்கு முன் பிளாக் & வொயிட்டில் ஒரு பழசி ராஜா(இதுவும் மலையாளம்) வந்தது. அதற்கு இசை ஆர்.கே. சேகர்.இவர் ஏ.ஆர்.ரஹமானின் தந்தை.முதல் லிங்கின் சைட்டில் இதுவும் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

30 comments:

  1. Hey Amazing, thanks for the information, Very much useful for me, no idea before !!

    ReplyDelete
  2. அருமை நண்பர் ரவிஷங்கர்,
    இப்போது தான் ஜெயமோகனின் கட்டுரையை படித்துவிட்டு உங்களின் கட்டுரையை படித்தென். மிக நல்ல பதிவு , ஓட்டு போட்டாச்சு.

    அம்பும் கொம்பும் பாடலும், ஆலமதங்கள வைத்தவனல்லே: பாடலும் படத்தின் நீளம் கருதி வெட்டி விட்டதை அறிந்தேன்.
    ஆனால் இப்படம் 2009 ஆண்டின் அசல் இசை முழக்கம் எனபதில் ஐயமேஇல்லை

    ReplyDelete
  3. தல

    கலக்கிட்டிங்க...இப்போ இங்க படம் வந்திர்ருக்கு (ஷார்ஜாவுல)நாளைக்கு போறேன்

    தமிழ்நாட்டுல 13ம்தேதி வருது போல தமிழில்.

    பாட்டை ஒன்னும் சொல்ல முடியல தலைவருக்கு இடம் கிடைத்தால் விடுவாரா புகுந்து விளையாடிட்டாரு.

    இங்க துபாய்ல இந்த வருடம் வருடம் விருது கொடுப்பாங்க மலையாள படங்களுக்கு இந்த வருஷம் தெய்வத்துக்கு தான் விருது கொடுத்தாங்க ;)))))

    தல அடுத்து PAA வருது....கண்டிப்பாக உங்க விமர்சனம் வர வேண்டும் ;)))

    ReplyDelete
  4. \\Sowmya said...
    Hey Amazing, thanks for the information, Very much useful for me, no idea before !!
    \\

    ஆகா...இப்படி சொல்லிட்டிங்களே...அடுத்த இந்தியில அமிதாப் நடித்த படம் PAAன்னு வருது. தலைவர் தான் இசை.

    www.paathefilm.com

    கண்டிப்பாக கேளுங்கள்

    ReplyDelete
  5. //2.குன்னத்தே கொன்அச்சம் பொன்மோதிரம்://

    இதில் ஓலிப்பது வயலின் அல்ல, சாரங்கி என்று நினைக்கிறேன்.

    //3.அம்பும் கொம்பும் கொம்பன் காட்டில்://

    இந்தத் தொகுப்பிலேயே என்னைக் கவர்ந்த பாடல் இதுதான். இது போன்ற பழங்குடியினர் இசையில் ஒலிக்கும் ஒரு பாடல் இதுவரை திரையிசையில் வந்ததில்லை என்று கூறலாம் ('ஜானி' படத்தில் வரும் 'ஆசையக் காத்துல தூது விட்டு' பாடல் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு)

    ReplyDelete
  6. திருத்தம் - வயலின், சாரங்கி இரண்டும் ஒலிக்கின்றன (ஆனால் கவனத்தைக் கவர்வது சாரங்கியின் ஒலியே). தவறுக்கு மன்னிக்கவும் :)

    ReplyDelete
  7. இசைஞானி இசை மிக நன்றாக உள்ளது

    ReplyDelete
  8. ரசிகனின் உச்ச பட்ச ரசனையின் வெளிப்பாடு பதிவில் தெரிகின்றது, நன்றி நண்பா

    ReplyDelete
  9. நன்றி செளமியா.

    ReplyDelete
  10. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

    //அருமை நண்பர் ரவிஷங்கர்,
    இப்போது தான் ஜெயமோகனின் கட்டுரையை படித்துவிட்டு உங்களின் கட்டுரையை படித்தென். மிக நல்ல பதிவு , ஓட்டு போட்டாச்சு//

    நன்றி நண்பா.கொஞ்ச நாளாக அவர் இசையமைக்கும்
    படங்களின் பாடல்கள் அவர் திறமைக்கு தீனி போடவில்லை.இந்தப் படம் சரி தீனி.அந்த ஆதங்கத்தில் எழுதினேன்.

    ReplyDelete
  11. நன்றி கோபிநாத்.படம் பாருங்க.என்ஜாய் பண்ணுங்க.
    தமிழ் பாட்டுக் கேட்டேன் அதே மலையாள வாசனை.
    இதுதான் மதுரமாக இருக்கிறது.படம் வந்தால் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  12. Voice on Wings said...

    //இதில் ஓலிப்பது வயலின் அல்ல, சாரங்கி என்று நினைக்கிறேன்//

    நீங்கள் சொல்லுவது சரிதான்.மாற்றிவிட்டேன்.ராஜா நிறைய வாத்தியங்களை யூஸ் பண்ணுவார்.உற்று கேட்டால்தான் முடியும்.

    அட வயலினும் வருகிறதா?

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. நன்றி பாலாஜி.

    ReplyDelete
  14. கானா பிரபா said...

    //ரசிகனின் உச்ச பட்ச ரசனையின் வெளிப்பாடு பதிவில் தெரிகின்றது, நன்றி நண்பா//

    ராஜாவின் இசை எவ்வளவு வருடமாக ஊறி இருக்கிறது என்னுள்.ரசனைக்கு கேட்கவா வேண்டும்.எவ்வளவு விதமான இசை.

    நண்பா அந்த ”ஆதிஉஷஸ்சந்தியா” ஒரு வித்தியாசமான பாட்டு இசை.

    ReplyDelete
  15. நன்றி ஸ்ரீ.கேட்டுவிட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  16. அய்யய்யோ... உடனே கேட்கணும்போல இருக்கே. தோ போறேன்.

    ReplyDelete
  17. சித்ரன் said...

    // அய்யய்யோ... உடனே கேட்கணும்போல இருக்கே. தோ போறேன்//

    நன்றி சித்ரன்.ஒரு வேண்டுகோள். கேட்டுவிட்டு feedback கொடுங்க.ஏன் என்றால் நான் குறிப்பிடும் இடங்கள் எல்லோரும் ரசிக்கிறார்களா என்பதுதான்.

    ReplyDelete
  18. நல்ல ரசனையான அறிமுகம்

    ReplyDelete
  19. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. ரசனையான பதிவு சார்...
    //ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது இவடே//
    பாடல் இப்போதுதான் கேட்டு அதிர்ந்து நிற்கிறேன்...
    மற்ற பாடல்களில் ‘குன்னத்தே’,’ஓடத்தண்ணீல்’ இரண்டும் அருமையான மெலடிஸ்... இரு வாரங்கள் முன்பு கேட்டது.தரவிறக்கிக் கேட்கவேண்டும்...
    கேட்டதும் பிடித்து(பைத்தியம்)ப் போன பாட்டு ‘அம்பும் கொம்பும்’ தான்... நானாடாவிட்டாலும் நரம்பாடிவிட்டது...
    மறுபடியும் கேட்டுச் சொல்கிறேன்...

    ReplyDelete
  21. படம் வந்தா கண்டிப்பா பாக்கறேன். அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete
  22. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  23. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  24. மலையாளம்தான் நல்லா இருக்கு.தமிழ்ல கொண்டுவந்தாங்க நல்லா இல்லை.

    ReplyDelete
  25. நன்றி சாம்ராஜ்ய ப்ரியன். “:D"அப்படின்னா
    சந்தோ்ஷம்? நண்பா.! நாலு வரர்த்தை தமிழ்ல
    சொல்லக்கூடாதா?

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  26. ஏனோ தானோ என்றில்லாமல்.. தீர பகுத்தாய்ந்து எழுதப்பட்ட ஒரு பதிவினை படித்த திருப்தி. அதன் அறிகுறியாய் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தேன்.

    :-)

    ReplyDelete
  27. நன்றி சாம்ராஜ்ய ப்ரியன. பாட்டு கேட்டீங்களா? அது சொல்லலியே?

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!