Thursday, November 12, 2009

டீக்கடையில் கடவுள் - கவிதை





அந்த டீக்கடையில்தான்
அவரைப் பார்த்தேன்
மரபெஞ்சில் உட்கார்ந்திருந்தார்
கடவுள்
அந்தப் பித்தளை பாய்லர்
ரொம்ப பிடித்துப்போய்
அதையேப் பார்த்துக்கொண்டிருந்தார்

கவனத்தைத் திருப்பி
சட்டெனக் கேட்டு விட்டேன்
ரொம்ப நாளாக மனதில்
அசைப்போட்டிருந்த  கேள்வி
பிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்
எப்படி இருக்கும் சுவாமிஜி

சொன்ன பதில் புரியவில்லை
அழைத்துக் கொண்டுபோய்
அந்த முதல் கணத்தைக் காண்பித்தார்
மீண்டும் கொண்டுவந்தும் விட்டார்

அவ்வளவு சுவாரஸியம் இல்லை
நான் எதிர்பார்த்ததுபோல்
அவரும் அவ்வளவு ஈர்க்கவில்லை
நான் எதிர்பார்த்ததுபோல்

உப்புசப்பில்லாத முதல் கணம்
என்றபடி பெஞ்சில் அமர்ந்து
அந்தப் பித்தளை பாய்லர்
ரொம்ப பிடித்துப்போய்
ரசித்திருந்த நேரத்தில்
பிரபஞ்ச தோற்றத்தின் முதல் கணம்
எப்படி சுவாமிஜி என்று
சட்டெனக் கேட்டுவிட்டார்
 புதிதாக வந்தவர்


16 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க

    ReplyDelete
  2. நல்லாயிருக்குதுங்க:)!

    ReplyDelete
  3. நன்றி டிவிஆர்

    நன்றி ஜ்யோவ்ராம்சுந்தர்

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு சாரே..

    ReplyDelete
  5. /// எதுவும் சொல்லாத போகாதீங்க! ///

    பொய்ட்டு வர்றேன் !

    ReplyDelete
  6. நன்றி ராமலஷ்மி(உங்கள்”ஷ்”font என்னிடம் இல்லை)

    நன்றி மண்குதிரை

    நன்றி வெங்கிராஜா

    ReplyDelete
  7. நன்றி தண்டோரா.

    //பொய்ட்டு வர்றேன் !/

    அது எப்படிங்க ”பொய்ட்டு” வருவீங்க.

    நன்றி கேசவன்.

    ReplyDelete
  8. இரண்டு மூன்று முறை படித்தபின் ஒருவாறு அர்த்தம் புரிந்ததில் எனக்குப் பிடித்துப் போயிற்று சார்...

    ReplyDelete
  9. //(உங்கள்”ஷ்”font என்னிடம் இல்லை)//

    இ-கலப்பையில் ksh.
    NHM writer எனில் ரொம்ப சிம்பிள். x-ஐத் தட்டினால் க்ஷ் :)!

    ReplyDelete
  10. நல்லா இருக்கு

    ReplyDelete
  11. நன்றி ஸ்ரீ

    நன்றி விநாயகமுருகன்

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  12. நன்றி ராமலக்ஷ்மி.பகிர்ந்தமைக்கு நன்றி.என்னிடம்
    NHMதான்.

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!