Friday, July 17, 2009

”அஜித்”கெட்டப்பில் எங்கள் கவுன்சிலர்

























கவிதை


பிறந்த நாள் காண்கிறார்
எங்கள் வார்டு கவுன்சிலர்


”தல” அஜித் ஸ்டைலில்
சோபாவில் கோட்சூட்டோடு
ஒரு போஸ்டரில்


இருந்தாலும் ஒரு மனக்குறை


மற்றொன்றில்
சட்டை காலரின் நுனியைக்
கடித்துக்கொண்டு
இளய தளபதி விஜய்யாக


இருந்தாலும் ஒரு மனக்குறை


இன்னொன்றில்
வேகவேகமாக நடந்தபடி்
கும்பிட்டுக்கொண்டே
தூய வெண்ணிற ஜிப்பா குர்தாவில்
சூப்பர் ஸ்டாராக


இருந்தாலும் ஒரு மனக்குறை


இடைப்பட்ட போஸ்டரில்
ஒரு கையில் பேட்டும்
மற்றொன்றில்
மறக்காமல் பெப்சி
20-20 IPL கிரிக்கெட் வீரராக


இருந்தாலும் ஒரு மனக்குறை


கடைசியாக....
பழனி மலை அடிவாரத்தில்
அவரும் அவர் மனைவியும்
கைகள் கூப்பியபடி
தமிழ் பண்பாடு கெட்டப்பில்


இருந்தாலும் ஒரு மனக்குறை


அன்றிரவு கொண்டாட்டத்தி்ல்
போதையில் அழுது புலம்பிவிட்டார்
தன் மனக்குறையை
”வாழ்த்த வயதில்லைத் தலைவா
வணங்குகிறோம் “ தொண்டர்களிடம்


உலகநாயகன் கமலின்
கெட்டப் போட முடியாமல்
கமல் ரசிகர்களின் ஆதரவை
இழந்தவிட்டதாக
குமுறி குமுறி அழுகிறார்

23 comments:

  1. //உலகநாயகன் கமலின்
    கெட்டப் போட முடியாமல்
    கமல் ரசிகர்களின் ஆதரவை
    இழந்தவிட்டதாக
    குமுறி குமுறி அழுகிறார் //

    :) வழக்கமான அசத்தல் ரகம்!

    (விருதுப் பதிவு என்னாச்சு தலைவா?!)

    ReplyDelete
  2. ஹா ஹா.. தலைவர் கெட்டப் போட்றதுனா சும்மாவா..? கவிதை நல்லாருக்குங்க..

    நாடோடிகள் படத்துல கூட இதே மாதிரி ஒரு Publicity கதாபாத்திரம் இருக்கு..

    ReplyDelete
  3. சென்ஷி said...
    //வழக்கமான அசத்தல் ரகம்//

    நன்றி சென்ஷி.

    //விருதுப் பதிவு என்னாச்சு தலைவா//
    தல மன்னிக்கனும்.எனக்கு எல்லா பதிவும் பிடிக்கும்.
    (?????????????)

    ReplyDelete
  4. July 17, 2009 5:58 AM
    மதன் said...

    //ஹா ஹா.. தலைவர் கெட்டப் போட்றதுனா சும்மாவா..? கவிதை நல்லாருக்குங்க.//
    நன்றி மதன்.

    //நாடோடிகள் படத்துல கூட இதே மாதிரி ஒரு Publicity கதாபாத்திரம் இருக்கு//

    அழகிரிய கிண்டல்?

    ReplyDelete
  5. திருச்செந்தூர்ல மலை இல்லை. பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, இப்படி எத்தனையோ இருக்கிறது. ஆனால் செந்தூரில் கடல்தான்.

    ReplyDelete
  6. Raj Chandirasekaran said...

    //திருச்செந்தூர்ல மலை இல்லை. பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, இப்படி எத்தனையோ இருக்கிறது. ஆனால் செந்தூரில் கடல்தான்//
    தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பா!
    மாற்றிவிடுகிறேன். கவிதை எப்படி?

    ReplyDelete
  7. ஒலக்க நாயகன் கெட்-அப் நா சும்மாவா??

    "உன்னை போல் ஒருவன்"ல ஆஸ்கர் கெட்-அப் ஏதாவது இருக்கா?

    //உலகநாயகன் கமலின்
    கெட்டப் போட முடியாமல்
    கமல் ரசிகர்களின் ஆதரவை
    இழந்தவிட்டதாக
    குமுறி குமுறி அழுகிறார் //

    இது நெசம்தாங்கோ..... கெட்டப் இல்லாத "உலக நாயகன்" ஏது? கேப்டன் சண்டைக்காட்சிகளுக்கா படம் எடுப்பது போல், "உலக நாயகன்" கெட்டப்-க்காக தானே படமே எடுக்கிறார்?

    ReplyDelete
  8. கோபி,

    கமலுக்கு standardஆ கெட்டப் ஒன்னும் இல்லையே.
    மாறிட்டே இருப்பாருல்லா!

    நன்றி

    ReplyDelete
  9. கவிதை ஸ்டைல் நல்லா இருக்குதுங்க.....

    ReplyDelete
  10. சப்ராஸ் அபூ பக்கர் said...
    //கவிதை ஸ்டைல் நல்லா இருக்குதுங்க//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. //ஆதிமூலகிருஷ்ணன் said//

    நன்றி.

    ReplyDelete
  12. கவிஜ கருத்தோடதான் இருக்குது.

    ஆனா நீங்க, எப்படிங்க இந்த மாதிரி குட்டி குட்ட படத்தையெல்லாம் ஒண்ணா சேர்த்து அத இடுகையில் இடுறீங்க.

    ரொம்ப பொறுமைசாலிங்க நீங்க. :)

    ReplyDelete
  13. ஊர்சுற்றி said...

    //கவிஜ கருத்தோடதான் இருக்குது//

    நன்றி.

    //ஆனா நீங்க, எப்படிங்க இந்த மாதிரி குட்டி குட்ட படத்தையெல்லாம் ஒண்ணா சேர்த்து அத இடுகையில் இடுறீங்க//

    ஏதோ ஒரு சைட்ல சுட்டதுதாங்க.நான் ரூம் போட்டு ஒட்டலீங்க.

    ReplyDelete
  14. நல்லாருக்கு...எத்தனை தலைகள் மக்களைக் கவுக்கறதுக்கு..எப்படி எப்படில்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க..

    ReplyDelete
  15. பாச மலர் said...
    //நல்லாருக்கு...//

    நன்றி.

    ReplyDelete
  16. கானா பிரபா said...
    // சூப்பர் //

    நன்றி.

    ReplyDelete
  17. நல்லா இருக்கு!

    ReplyDelete
  18. ஸ்ரீதர்/Veera

    நன்றி.

    ReplyDelete
  19. கவிதை சூப்பர் தல

    ReplyDelete
  20. நன்றி சுரேஷ் குமார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!