Tuesday, July 28, 2009

விடை பெறுகிறேன்..பிரிவோம்காணவில்லை!சென்னையில் சின்ன வயதில் என் கண்ணில்
பட்டு“விடை பெறுகிறேன்” என்று சொல்லாமல் காணாமல்
போனவர்கள்.
 • காதில் பென்சில் சொருகிய ஹோட்டல் சர்வர்
 • மஞ்சள் துணி உடுத்தி”கோவிந்தோ கோவிந்தோ”என்று சொல்லி புழுதியோடு ரோடில் உருண்டு கொண்டே பிச்சை எடுத்தவர்
 • ”பேமிலி ரூம்” உள்ள ஹோட்டல்
 • பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டு் சென்ற நாலு பேர்
 • டெய்லர் கடையில் ”காஜா" எடுத்தப் பையன் (ஸ்டூலில் உட்கார்ந்து)
 • "கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும் " சினிமா
 • ம.எ. தர்மலிங்கம் .பி.ஏ.எம்.ஏ. லிட் (retd) (In - Out) போர்ட்
 • மாரியாத்தாவுக்கு ”மடி” பிச்சை
 • ஆபிஸ் ஆபிஸாக படியேறி டெலிபோன் துடைத்து ”செண்ட்” போட்டுவிட்டு கையெழுத்து வாங்கிச் சென்ற பெண்கள்
 • ”கொசுறு” கொடுத்த பால்காரர்/பழக்காரர்/மற்றும் பலர்
 • "தலை வார" இருபது பைசா - பார்பர் ஷாப்
 • ”.டிங்.. டாங்...” நேரம் இப்போது ஒன்பது மணி பத்து நிமிடம்.(ரேடியோ-தேன் கிண்ணம்-விவித பாரதி)
 • பத்து நாள் தொடர்ந்து சைக்கிள் விடுபவர்
 • "மஞ்சள் காமாலைக்கு கட்டு கட்டப்படும்" மரத்தடி போர்டு
 • ”.நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது”
 • கோலி சோடா
 • ”பாம்புக்கும் கீரிக்கும்”சண்டை விடு்வதாக சொல்லிக்
கொண்டிருந்தவர்
 • நார்மடி புடவைக் கட்டிய விதவை பிரமாணப் பாட்டிகள்
 • ராப்பிச்சைக்காரர்
 • டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்கேட்டுக்கொண்டேரோடில் நடந்து சென்ற நரிக்குறவர்கள்
 • ”ஹாண்ட் பம்ப்” இல் ”புஸ்க் புஸ்க்” என்று சைக்கிளுக்கு காற்று அடித்தப் பையன் (முடிந்தவுடன் எச்சிலால் ஒரு பைனல் டச் கொடுப்பார்)
இன்னும் தொலைந்து் போகாமல் இருப்பவர்:

காஸ் சிலிண்டரை ட்ரை ஸைக்கிள் அல்லது சாத ஸைக்கிளில் வைத்துத் தள்ளி வரும் டெலிவரி பாய் (இப்போது யூனிபார்முடன்)


கவிதை படிக்க:

ஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் !

26 comments:

 1. இவ்வரிசையில் பாடித் திரிந்த சிறு சிட்டுக் குருவிகளையும் சேர்த்துக்கங்க !! --

  ReplyDelete
 2. வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி தமிழி.

  ReplyDelete
 3. எப்பா... புள்ளை என்னம்மா திங்கு பண்ணுது.... இன்னும் நெறையா திங்கு பண்ணுங்கோஓஓஓ

  ReplyDelete
 4. இன்னும் சில ஆண்டுகள் போனால் மேலும் சிலவற்றை சேர்க்க வேண்டியது வரும்

  ReplyDelete
 5. டெலிபோன் துடைக்கும் பெண்கள் என்ற வரியைப் படித்ததும் டெலிபோன் துடைப்பவள் என்ற பாலகுமாரனின் கவிதை ஞாபகம் வந்தது (எப்போது வரும் செவ்வாய்க் கிழமை).

  :)

  ReplyDelete
 6. /*எதுவும் சொல்லாத போகாதீங்க!*/
  சரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

  ரெண்டு செட் தோசை ஒரு மசால் வடேய்ய்ய்ய்ய்ய்.

  ReplyDelete
 7. //டிரான்ஸிஸ்டர் கையில் பிடித்து பாடல்கேட்டுக்கொண்டேரோடில் நடந்து சென்ற நரிக்குறவர்கள்//
  அவர்கள் அப்படியேதான் உள்ளனர், ஆனால் கையில் செல்பேசிகள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 8. நையாண்டி நைனா முதலாவது said...

  //எப்பா... புள்ளை என்னம்மா திங்கு பண்ணுது.... இன்னும் நெறையா திங்கு பண்ணுங்கோஓஓஓ//

  நையாண்டி நைனா ரெண்டாவது தடவை said...

  /*எதுவும் சொல்லாத போகாதீங்க!*/
  சரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

  // ரெண்டு செட் தோசை ஒரு மசால்//

  வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.காதில் பென்சில் சொருகிய சர்வர் வந்தவுடன் அனுப்புகிறேன்.

  ReplyDelete
 9. ரொம்ப ரசனை!

  இரயில் பயணங்களில் சந்திக்கும் நபர்களும், பெற்றுவிடும் அன்னியோனியமும் இப்போ இல்லே. ஒருவரை பார்த்தால் கூட ஒட்டமுடியாமல், ஒதுங்கும் நிலை. பிஸ்கட்டில் விஷம்...

  ReplyDelete
 10. ஆமாங்க.. இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.. அதுல சைக்கிள் ரிக்க்ஷா-வும் ஒன்னு..

  ReplyDelete
 11. பலபேரை கொசுவத்தி கொளுத்த வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 12. ரசனையான பதிவு ரவி .ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன?பிடிங்க ஒரு ஓட்டு தமிழ்மணத்துல.

  ReplyDelete
 13. Suresh Kumar said...

  // இன்னும் சில ஆண்டுகள் போனால் மேலும் சிலவற்றை சேர்க்க வேண்டியது வரும்//

  கரெக்டுதான்.

  ஜ்யோவ்ராம் சுந்தர் said...

  // டெலிபோன் துடைக்கும் பெண்கள் என்ற வரியைப் படித்ததும் டெலிபோன் துடைப்பவள் என்ற பாலகுமாரனின் கவிதை ஞாபகம் வந்தது (எப்போது வரும் செவ்வாய்க் கிழமை)//

  அவரும் காணாமல் போனவர்?

  ReplyDelete
 14. நல்லாயிருக்கு நண்பா.

  ReplyDelete
 15. dondu(#11168674346665545885) said...

  //அவர்கள் அப்படியேதான் உள்ளனர், ஆனால் கையில் செல்பேசிகள்//

  ஆமாம் சார்.நன்றி.

  ReplyDelete
 16. வினிதா

  கார்த்திக்

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 17. துபாய் ராஜா

  ஸ்ரீ

  வண்ணத்துப்பூச்சியார்

  நன்றி அன்பர்களே.

  ReplyDelete
 18. ரொம்ப கூர்மையான அவதானிப்பு, படிக்கும் போது காணாமல் போன ஒவ்வொருவரும் கண் முனனே வந்து சென்றார்கள், இப்படி நினைவுகளைப் புரட்டிப் பாக்கறதும் ஒரு சுகம் இல்லையா

  ReplyDelete
 19. யாத்ரா

  நன்றி யாத்ரா.

  ReplyDelete
 20. வாவ்! அத்தனையும் ஒருநொடி வந்துபோனதுங்க ரவி :)

  அப்பறம்: பால் ஐஸ், சோன்பப்டி மற்றும் பஞ்சு மிட்டாய் காரர்கள்/வாகனங்கள்.

  ReplyDelete
 21. நான் பார்க்காத காலங்களை கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றி :P

  ReplyDelete
 22. நன்றி TKB காந்தி.

  நன்றி பிரகாஷ்.

  ReplyDelete
 23. வணக்கம் நண்பரே. "காணாமல் போனவர்களின் மணல்வெளி" என்ற ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறேன். அநேகமாக இந்த வார "திண்ணையில்" பிரசுரிக்கக்கூடும். ஒவ்வொரு வயது கடத்துதலிலும் நாம் யாரையாவது தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். மனதில் ஓர் அடுக்குகளில் அவர்களைச் சேமித்து வைத்திருப்பது யாரையும் தொலைப்பதில் நமக்கு இல்லாத சமரசம்தான். வாழ்த்துகள்.

  கே.பாலமுருகன்
  மலேசியா

  ReplyDelete
 24. வருகைக்கு நன்றி கே.பாலமுருகன்.கருத்துக்கும் நன்றி.

  // "காணாமல் போனவர்களின் மணல்வெளி" என்ற ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறேன். அநேகமாக இந்த வார "திண்ணையில்" பிரசுரிக்கக்கூடும்//

  பிரசுரமானவுடன் படிக்கிறேன்.முடிந்தால் விவரம் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 25. ஆமாம்..இப்படிக் காணாமல் போனவர்கள் பட்டியலில் நிறைய பேர்..

  ReplyDelete
 26. நன்றி பாசமலர்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!