Monday, July 27, 2009

மொறமாமன்-மீன்குழம்பு- கனகா,ரேகா,சீதா























ஆசையாகச் சோறாக்கி
கோழி குழம்பும் வைத்து
ரோஸ் புவுடர் அப்பிய முக
முற மாமன் ராமாராஜன்
சாப்பிடுவதை
கலர் கலரான பாவாடைத் தாவணியில்
வைத்த கண் எடுக்காமல்
ஆசையுடன் பார்த்த
கனகா அல்லது சீதா அல்லது
ரேகா அல்லது பானுப்பிரியா அல்லது
நிஷாந்தி அல்லது யாரோ
பார்த்து விட்டு பரிசமும் போட்டு
கல்யாணமும் ஆகி
குழந்தைக் குட்டிகளும் பெற்று
சில பேர் பிரிந்தும் விட்டார்கள்
மடிப்பாக்கம் சுப்ரமணிதான்
கேடீவி,ஜெயா,ராஜ்,ராஜ் பிளஸ்,
ஜீ,விஜய்,பொதிகை டீவிகளில்
மற்றும் இரண்டொரு
லோக்கல் சானல்களிலும்
பல வருடங்களாக
ஒரு மாதத்திற்கொரு முறை
முறமாமன் சாப்பிடுவதை
ஆசையுடன் பார்க்கும்
கனகா அல்லது சீதா அல்லது
ரேகா அல்லது பானுப்பிரியா அல்லது
நிஷாந்தி அல்லது யாரோவைப்
வைத்த கண் எடுக்காமல்
ஆசையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறார்
ஐம்பத்திரெண்டு வயதாகியும்
இன்னும் எதுவும் ஆகாமல்

18 comments:

  1. நல்லாருக்கு.

    'ஆசையாக சோறாக்கி ' என்பது சரியென்றால் முதல் எழுத்து 'ஆ'வை சேர்க்கவும்.

    கனகா,சீதா,நிஷாந்தி தாவணியிலும் ரேகா,பானுபிரியா சேலையிலும் கண்முன் வந்து போனார்கள்.

    ReplyDelete
  2. நன்றி வினோத்கெளதம்.

    துபாய் ராஜா said...

    //நல்லாருக்கு//

    நன்றி.

    'ஆசையாக சோறாக்கி ' என்பது சரியென்றால் முதல் எழுத்து 'ஆ'வை சேர்க்கவும்.

    புரியல நண்பா.

    ReplyDelete
  3. முதல் எழுத்து 'ஆ' சேராமல் 'சையாக' தனித்து நிற்கிறது. கவனித்து சேர்க்கவும்.

    ReplyDelete
  4. துபாய் ராஜா said...

    //முதல் எழுத்து 'ஆ' சேராமல் 'சையாக' தனித்து நிற்கிறது. கவனித்து சேர்க்கவும்//
    நன்றி ராஜா. ஆனால்

    என் பதிவில் “ஆசையாக”த்தான் தெரிகிறது.
    “சையாக” அல்லது “ஆ சையாக” என்றும் தெரியவில்லையே.

    வேறு யாரும் அப்படிச் சொல்லவில்லையே?

    ReplyDelete
  5. இப்ப சரியாக இருக்கு.

    காலையில் 'ஆ' முதல் வரியில் கடைசியாகவும், சையாக சோறாக்கி என்பது இரண்டாவது வரியாகவும் இருந்தது.

    ReplyDelete
  6. மடிப்பாக்கத்தாருக்கு மலரும் நினைவுகள்தான்..

    ReplyDelete
  7. அவ்வளவு வயசானவரா நீங்க?:))

    ReplyDelete
  8. அற்புதம்
    வேறென்ன சொல்ல

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்குங்க, அருமை.

    ReplyDelete
  10. ஸ்ரீதர் /துபாய் ராஜா/பாச மலர்

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  11. mayil said...

    //அவ்வளவு வயசானவரா நீங்க?:))//

    இல்லீங்க.”அடியே கொல்லுதே” வயசுதாங்க.
    வ்ருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. நேசமித்ரன்/யாத்ரா

    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  13. முடிச்சவுக்கின்னு சொன்னா கோச்சிக்காதீங்க...

    என்னதான் சொல்ல வராருன்னு ஒரு வியப்பைத் தேக்கி அழகா முடிச்சீங்க. அப்புரம் ஒரு சூழ்நிலைய, காட்சிய கண்முன் நிறுத்தி...

    ரவி, இது இப்படி எழுதனும்னு ஒரு இலக்கண நோக்கோடு எழுதுவதா?

    ReplyDelete
  14. ஆஹா..

    சோகப்பாட்டு நல்லாயிருக்கே..!

    ரவிசங்கர் சபாஷ்..!

    ReplyDelete
  15. Sugumar (சுகுமார்) said...
    //ரவி, இது இப்படி எழுதனும்னு ஒரு இலக்கண நோக்கோடு எழுதுவதா?//

    அப்படியெல்லாம் இல்லை. பழகின ஓகேயாடும்.

    ReplyDelete
  16. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...//


    // ரவிசங்கர் சபாஷ்..!//

    நன்றி உ.தமிழன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!