தூர்தர்ஷன் வந்த புதிதில் நடு இரவில் அவார்டு வாங்கிய உலகத் திரைபடங்கள் போடுவார்கள்.அதில் எதாவது குளிக்கும் அல்லது அவிழ்க்கும் காட்சிக்காக(ஒரு நிமிடம்) காத்திருந்துப் பார்த்துவிட்டு பால்பாக்கெட்டை எடுத்து உள்ளே வைத்துவிட்டு முகமெல்லாம் வீங்கி கண்ணுக்குக் கிழ் கருவளையத்தோடு ஆபிஸ் வரும் மக்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆபிஸ்ஸில் “ஸோ அண்ட் ஸோ” சீன் வந்துதா என்று brain storm செய்வார்கள்.
அப்போது சேனல்கள் கம்மி.இண்டர்னெட்,டிவிடி போன்ற விஷயங்கள் வரவில்லை.VCD இருந்தது.VCD வைத்திருப்போர் அவ்வளவு அதிகம் இல்லை.சினிமாப் படங்கள் தியேட்டரைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. கண் முழித்து தமிழ்,ஆங்கில திரைப் படங்களைப் பார்ப்பதுண்டு.ரூப வாகினியில் சினிமா போடுவார்கள்.சரியா தெரியாமல் திரையில் grains வரும்.
அப்போ demand is more because supply is less.
ஆனால் இப்போது கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கின்றன.மேலேயே கூட இருக்கலாம்.பாட்டு,மிருகம்,பேஷன்,
செய்திகள், சினிமா,கார்டூன், விளையாட்டு,லோக்சபா,வர்த்தகம்,பக்திஎன்று
வகைவகையாக.விதவிதமாக.லேட்டஸ்ட்டாகNDTV-HINDUசேனல்.தூர்தர்ஷன் மட்டும் கிட்டத்தட்ட 50 மேற்பட்ட சேனல்கள் உள்ளது.மொழிக்கு ஒன்றாக அடுத்து துறைக்கு ஒன்றாக.
இது தவிர MSN,OSN,ZNN,TNN,ENN என்று கேபிள் ஆபரேட்டர்களின் லோக்கல் சேனல்கள.இதில் பிறந்த நாள்,காதுகுத்தல்,பிளாட் பங்ஷன், திருட்டு சினிமா,கணபதி ஹோமம்,திறப்பு விழா இத்யாதி இத்யாதிகளைப் போட்டுத்தாக்குகிறார்கள். சென்னையில் இவை இல்லை என்று நினைக்கிறேன்.ஊர் புறங்களில் அதிகம்.வெளியூர் ஊர் லாட்ஜ்களில் டீவி ரிமோட்டை அழுத்தினால் இவைதான் முதலில் வருகிறது.
மசாலாத்தனம்/அருவருப்புத்தனம் இல்லாத கிளாசிக் மற்றும் exclusive சேனலகள் உள்ளன.அவை உயர் ரசனை (connoisseur of arts)உள்ளவர்களுக்காக.
அதில் உலகத்திரைப் படங்கள்,முதல் தர இசை,பேட்டிகள்,நடனங்கள்,talk showக்கள் ,நாடகங்கள் போன்றவைகள் ஓளிபரப்ப படுகின்றன.நம் தூர்தர்ஷனும் இது மாதிரி நான்கைந்து வைத்துள்ளது.
அதில் உலகத்திரைப் படங்கள்,முதல் தர இசை,பேட்டிகள்,நடனங்கள்,talk showக்கள் ,நாடகங்கள் போன்றவைகள் ஓளிபரப்ப படுகின்றன.நம் தூர்தர்ஷனும் இது மாதிரி நான்கைந்து வைத்துள்ளது.
மற்றும் ஒரே நிர்வாகத்தில் பல சேனல்கள்.இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிற்து. மற்ற சேனல்களின் பார்வையாளர்களைப் பிடுங்கி தன் சேனல்களுக்கு கொண்டு வர.இது வணிக உத்தி.
இவைகள் 24 மணி நேரமும் ஓடுகிறது. யார் பார்க்கிறார்கள்?அதுவும் பின்னிரவில்.மருத்துவமனை 24 மணி அவசர சிகிச்சையா?அவ்வளவு அவசியமா?24 மணி நேரமும் பிரபஞ்சத்தில் பொழுது போக வேண்டுமா.அறிவு வளர வேண்டுமா?செய்திகளை சுடசுட பரிமாற வேண்டுமா?
இப்போது Supply is more demand is less என்ற லெவலில் இருக்கிறோம்.
99 சதவீதம் தமிழ் சேனல்களில் இரவு பத்தரை மணிக்கு மேல் சினிமாபாட்டு ,டெலிஷாப்பிங், சித்த /யூனானி/ஆயுர்வேத/குழந்தையில்லாமருத்துவம்
ஜோசியம்,கல்ராசி,உங்கள் அற்புதத்தின் நேரம்,சிரிச்சு வைங்க, ஆங்கில செய்திகள்,அம்மன் அபிஷேகம்,மற்றும் பாக்கெட் ஜிம் என்று இருவர் படுத்துக்கொண்டு கையையும் காலையும் தயிர் கடைவது மாதிரி மேலும் கிழும் ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இல்லாவிட்டால் மக்கிப் போன சினிமா படம் ஓடுகிறது.
மிட் நைட் மசாலா இப்போது வருகிறதா தெரியவில்லை.
வின் டீவியா அல்லது தமிழன் டீவியா தெரியவில்லை இரண்டு பேர் உட்கார்ந்துக்கொண்டு பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாச் செய்தித் தாள்களையும் கையில் பிடித்துக்கொண்டு “அவிங்க சொன்னாங்க” “ இவிங்க சொன்னாங்க” என்று மாறி மாறி் நடு இரவில் பேய்போல்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இது பொழுதுகளிலும் வரும்.
இதெல்லாம் கண்முழித்து உட்கார்ந்து பார்கிறார்களா?நேர இடைவெளி உள்ள வெளி நாடு தமிழர்களுக்கும் இதெல்லாம் யோகமாகத் தெரியவில்லை ஓட
வேண்டும் என்பதற்காக இதெல்லாம் பில அப் செய்து ஓட்டுகிறார்கள்.
வலியத் திணிக்கப்படுகிறது. பிறகு இவ்வளவு சேனல்கள் தேவையா?
டீவி பார்க்கும் பிரைம் டைம் என்பது இரவு 7.30 மணி முதல் 10.00 என்று சொல்கிறார்கள் இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் டீவிக்கு பார்வையாளர்கள் அதிகம். விளம்பரதாரர்கள் போட்டிப் போடுகிறார்கள். பிற்கு சுத்தமாக குறைந்துவிடும்.காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
பகல் நிகழ்ச்சிகள் போல் இரவிலும் போட முடியாது. காரணம் பார்வையாளர்கள் கம்மி.அதனால் விளம்பரதாரர்கள் சத்தியமாக ஸ்பான்சார் செய்ய மாட்டார்கள்.இரவு ஒளிபரப்பு வருமானத்திற்கு லேகிய டாக்டர்கள்,டெலிஷாப்பிங்,ராசிக்கல்,அம்மன் தரிசனம் ,பாக்கெட் ஜிம் போன்றவர்கள்தான் கிடைப்பார்கள்.அதை வைத்து ஓட்டுவார்கள்.அல்லது சினிமா பாடல்கள்.
மற்ற ஆங்கில சின்மா சேனல்களில் காலை பொழுது நிகழ்ச்சிகள் சுழற்சி முறையில் இரவிலும் ஒளி்பரப்பப்படுகிறது.சினிமா படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.அதுவும் வெள்ளி/சனிக் கிழமை இரவுகளில் அதிகம் பார்வையாளர்கள் இருப்பார்கள்.ஆசிய நாடுகளில் பார்வையாளர்கள் அதிகம்.
செய்தி சேனல்களிலும் நடு நீசியில் ரிக்கார்ட் செய்யப்பட்ட செய்திகள்தான் முக்கால்வாசி.திருப்பித் திருப்பி அதே வீடியொ செய்திக்காட்சிகள். சன் டீவியில் உயர் நீதி மன்றம் வீடியோ காட்சி செய்தியில் வழக்கமாக ஒரே காட்சியைத்தான் காட்டிக்கொண்டிருப்பார்கள்.அதே வக்கீல்கள் நடந்து வருவார்கள்.அதே மரம்.அதே கார்.அதே பிரதிவாதி.அதே வாதி.
இண்டெர்னெட்டும் அதற்கு இணையாக உடனுக்குடன் செய்திகளைத் தருகிறது.எல்லா செய்தி சேனல்களும் இண்டெர்னெட்டிலும் செய்திக் கொடுக்கிறது.நாம் வேண்டிய சினிமாக்களை டிவிடி இண்டெர்னெட்டில் பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்து விட்டது.ஓவர் சப்ளை.
பல சேனல்களால் ஒரு உபயோகம்.தேர்ந்தெடுக்கும்(ஆப்ஷன்)உரிமை நம்மிடம்.வடிகட்டிப் பார்க்கலாம்.
சில நிகழ்ச்சிகளை இரவில் பார்க்க வேண்டும் நினைத்தாலும்,ஆபீஸ்,தூக்கம்,உடல் நலம்,வீட்டில் மற்றவர்களுக்கு இடைஞ்சல்.செய்தி சேனல்களைத் தவிர முக்கால்வாசி சேனல்கள் இரவில் சும்மா மொக்கைப் போடுகின்றன. பகலில் மட்டும் என்னவாம்.
ரயில்வே ஸ்டேஷன்கள்,பஸ் ஸ்டாண்ட், ஏர்போர்ட் இங்கு வேண்டுமானால் பிரயோஜனப்படும்.ஆனால் இரைச்சலில் என்ன கேட்கும்.எப்படி ரசிப்பது.
ஆரம்பித்தாயிற்று ஓட்டித்தான் ஆகி வேண்டும்என்ற நிலையில்தான் 24 மணி நேர தொலைக்காட்சி.
நானும் தயா நிதி மாறன் அவர்களும் சேர்ந்து ”பதிவர்கள் டீ.வி” என்ற 24 மணி நேரம் சேனல் ஆரம்பிக்கலாம் என்று யோசனை இருக்கிறது.
(இரண்டாவது வரிசையில் கடைசி் சேனல் என்ன தெரியுமா? அண்ணா பல்கலைக்கழகம் தொலைக்கல்வி இயக்கம்)
அல்லாத்தையும் பாப்பீங்க போல இருக்கு?
ReplyDeleteநான் ஸ்டார் மூவீஸ், எச்பிஓ போன்ற பிற மொழிப்பட சானல்களையும், பாட்டு, நகைச்சுவை, செய்தி சானல்களையும் பார்ப்பதோடு சரி.
ReplyDeleteடீ.வியில் நான் விரும்பி பார்ப்பது பாடல்கள் மட்டுமே. அதுவும் இப்போது இரவு ஒன்பதோடு நிறுத்திவிடுகிறார்கள். அதற்கப்புறம் சிரிப்பாய் சிரிக்கிறது அனைத்திலும். ஜெயமேக்ஸ் மட்டுமே அதற்குமேலும் பாடல்கள் வருகிறது. நாம் இரவு நேரங்களில் பார்க்கவில்லை யென்றாலும் இருந்துவிட்டு போகட்டுமே... பிழைத்துப் போகிறார்கள் டீவிக்காரர்கள்.
ReplyDeleteபாடல்களுக்கு எனது முதல் சாய்ஸ் எப்போதும் ஜெயாமேக்ஸ்தான், பாடல்களுக்கு இடையே உள்ள தொல்லைகள் குறைவாய் இருப்பதால்.
ReplyDeleteஎவனோ ஒருவன் said...
ReplyDelete//அல்லாத்தையும் பாப்பீங்க போல இருக்கு?//
முக்கியமான சேனல்கள் மட்டும்தான்.
குடந்தை அன்புமணி said...
ReplyDelete// நாம் இரவு நேரங்களில் பார்க்கவில்லை யென்றாலும் இருந்துவிட்டு போகட்டுமே... பிழைத்துப் போகிறார்கள் டீவிக்காரர்கள்//
நன்றி.தெளிவா சொல்லிட்டீங்க.
நல்ல ஆய்வு.. !
ReplyDelete//எதாவது குளிக்கும் அல்லது அவிழ்க்கும் காட்சிக்காக(ஒரு நிமிடம்) காத்திருந்துப் பார்த்துவிட்டு பால்பாக்கெட்டை எடுத்து உள்ளே வைத்துவிட்டு முகமெல்லாம் வீங்கி கண்ணுக்குக் கிழ் கருவளையத்தோடு ஆபிஸ் வரும் மக்களைப் பார்த்திருக்கிறேன்.//
ReplyDeleteஅந்த நினைப்போடேயே, பதிவையும் எழுதினீர்களா, என்ன:-))
கடைசி வரிகளில் குறிப்பிட்டிருப்பது போல, அது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலைகல்வி இயக்கம்!
சென்ஷி said...
ReplyDelete//நல்ல ஆய்வு//
நன்றி.
//அந்த நினைப்போடேயே, பதிவையும் எழுதினீர்களா, என்ன:-))//
ReplyDeleteஒரே ஒரு சேனல் இருந்து இப்ப 500 சேனல் வரை
வந்துவிட்டோம் என்பதாக எழுதினேன்.
//கடைசி வரிகளில் குறிப்பிட்டிருப்பது போல, அது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலைகல்வி இயக்கம்!//
மாற்றி விட்டேன். நன்றி. கருத்துக்கும் நன்றி.
தேவையான அலசல்.!
ReplyDeleteஇவ்வளவு இருந்து நாம் டிவி பார்க்கும் சமயங்களில் ஒரு நல்ல மெலடி சாங் போடமாட்டானுங்க.. லூசுப்பசங்க..
ReplyDeleteரவி தேவையான பதிவு. நானும் இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் நேரம் இருந்தால் பாருங்கள்
ReplyDeleteநான் டிவியே பார்க்கறதில்லை. இந்தியா வரும்போது மட்டும் ரெண்டு மணி, மூணுமணிக்கு திடீர்னு தூக்கம் போயி விழிப்பு வந்துரும். யாரையும் தொந்திரவு பண்ன வேணாமுன்னு ஒலியை அடக்கிட்டு டிவி போட்டால்
ReplyDeleteஅய்ய...... அந்த ஆட்டங்கள் எல்லாம் yuck.
தமிழ் சினிமாப் பாடல் காட்சிகளைத்தான் சொல்றேன்.
24 மணிநேர டிவி எந்த நாடா இருந்தாலும் வேஸ்ட் தான்.
என்ன கொடுமை ரவிஷங்கர் இது...? ஆனா உண்மையிலேயே இவிய்ங்க தொல்லை தாங்க முடியல (சில சமயம்).
ReplyDeleteஅப்புறம் தனித்தனியா ஒவ்வொரு படத்தையும் எடுத்து ஒட்டி... ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க போல...
ஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDeleteநன்றி.
வடகரை வேலன் said...
ReplyDelete//ரவி தேவையான பதிவு. நானும் இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் நேரம் இருந்தால் பாருங்கள்//
படித்துப் பார்த்து கருத்தும் போட்டு விட்டேன். நன்றி.
துளசி கோபால் said...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
ஊர்சுற்றி
ReplyDeleteநன்றி சார்.
//அப்புறம் தனித்தனியா ஒவ்வொரு படத்தையும் எடுத்து ஒட்டி... ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க போல//
ஆமாம்.இதோ எப்போது வேறு காரணத்திற்காக செய்தது.
July 4, 2009 6:
நல்ல ஆய்வு.
ReplyDeleteஉண்மையில் வானொலி எவ்வளவோ தேவலை. கண்ணுக்குக் கேடில்லாமல் ரெயின்போ மாதிரி சானல்கள் கேட்கலாம்.
10 மணிக்கு மேல செய்தி சானல் தவிர வேற ஒன்றுமே வேண்டாம் என்று சொல்லலாமா.
இல்லை,,, அந்த நேரம் அமைதியான பாடல்களைப் போடலாம்.
வல்லிசிம்ஹன் said...
ReplyDelete//நல்ல ஆய்வு//
கருத்துக்கு நன்றி.
//ஆபிஸ்ஸில் “ஸோ அண்ட் ஸோ” சீன் வந்துதா என்று brain storm செய்வார்கள்.//
ReplyDelete:-))))))))))))))
ஹ்ம்ம்ம்.. இதனால், நல்ல நிகழ்ச்சிகள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. நல்ல பதிவு..
ReplyDelete♫சோம்பேறி♫ said...
ReplyDelete//ஹ்ம்ம்ம்.. இதனால், நல்ல நிகழ்ச்சிகள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. நல்ல பதிவு//
நன்றி சோம்பேறி!(இப்படிச் சொல்வதற்கு ஒரு மாதிரி இருக்கிறது)