Friday, July 24, 2009

ஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் !


பார்த்த கணத்தில்
மிரட்சி விழியில்
உறைந்த குத்திட்ட பார்வை


கரைந்தவுடன்
உள்மன குறுகுறுப்புடன்
லேசான புன்முறுவல்
இருவருக்குமே சிவக்கிறது
கன்னம்


தலைகுனிந்து
யோசனையில் உள் கொள்ளும்
அச்சம் கலந்த நாணங்களும்
மெல்லிய புன்னகைகளும்

ஓருவரை ஒருவர் ஏமாற்றி்
பார்க்கும் திருட்டுப் பார்வைகள்
இயல்பாக இருப்பதாக
நகம் கடிக்கும் பாவனைகள்
பரஸ்பரம் இருவருக்குமே


மென் மின்சார காம அலைகளில்
தடம் புரண்டபடி
எதிர் மேல் பர்த்தில் அவளும்
கிழ் பர்த்தில் அவனும்


விடிகாலை பொழுது
எங்கோ ஒரு இடைப்பட்ட
ரயில் நிறுத்தத்தில்
மெதுவாக கையசைத்து
விடைபெறுகிறாள்
விவாகரத்தான
முன்னாள் மனைவிபடிக்க:

டீவி பார்க்கும் போது கவலைகள்

17 comments:

 1. வெயிட்டான கவிதை. சிறுகதை போட்டி ஒன்னு நடத்தறது :P

  //எதிர் மேல் பர்த்தில் //

  :)

  உங்கள் கவிதையில் ஒரு ரோல்லர் கோஸ்டர் transition இருக்கிறது ( அதை ஒழுங்காக எனக்கு சொல்ல தெரியவில்லை). இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. :)

  ReplyDelete
 2. வலி தரும் கவிதை.. அழகான வடிவமைப்பு..

  குத்திட்டப் பார்வை - ப்
  தலைக் குனிந்து - க்
  விடிக்காலைப் பொழுது - மீண்டும் க்

  தேவையற்ற ஒற்றுகளை நீக்கி விடுங்களேன் ரவி.

  ReplyDelete
 3. பிரகாஷ் வாழ்த்துக்கள்! பரிசுப் பெற்றதற்கு.

  //சிறுகதை போட்டி ஒன்னு நடத்தறது//
  ஆர்வம் இல்லை.அடுத்து அது பெரிய வேலை.

  //இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது//
  சந்தோஷம் அளிக்கிறது.நன்றி பிரகாஷ்.

  ReplyDelete
 4. கருத்துக்கு நன்றி மதன்.

  தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி மதன். திருத்தி விட்டேன்.

  ReplyDelete
 5. Nice!

  நல்லா இருக்கு! அருமையா எழுதுறீங்க.

  ReplyDelete
 6. நன்றி வினிதா.

  ReplyDelete
 7. வாழ்த்துகளுக்கு நன்றி ரவி :) கதை த்ராபயா , எதுமே சொல்லாத போய்ட்டீங்க ?

  ReplyDelete
 8. Prakash said...

  //எதுமே சொல்லாத போய்ட்டீங்க//

  கதைப் படித்தேன்.சுமார் ரகம்தான்.

  ReplyDelete
 9. //விடிகாலை பொழுது
  எங்கோ ஒரு இடைப்பட்ட
  ரயில் நிறுத்தத்தில்
  மெதுவாக கையசைத்து
  விடைபெறுகிறாள்
  விவாகரத்தான
  முன்னாள் மனைவி//
  எதிர் பாராத twist. அருமை.

  ReplyDelete
 10. நன்றி ஸ்ரீதர்.

  ReplyDelete
 11. இது விவாகரத்தானவர்களுக்கு நிச்சயம் ஒரு ஜெர்க் ஐ உருவாக்கியிருக்கும்!!

  ReplyDelete
 12. ஆரம்ப வரிகள் புரியாவிட்டாலும்..,
  கடைசியில் கவிதையும் கருத்தும் புரிந்தது..

  ReplyDelete
 13. நன்றி பிரசன்னா!

  ReplyDelete
 14. நல்லா எழுதிருக்கீங்க ரவிஷங்கர்...கிட்டத்தட்ட இது தொடர்பான ஒரு கருத்தைச் சமீபத்தில்தான் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்...coincidence...

  ReplyDelete
 15. பாச மலர் said...

  //நல்லா எழுதிருக்கீங்க ரவிஷங்கர்//

  நன்றி பாசமலர்.

  ReplyDelete
 16. ஆஹா! பின்னிட்டீங்க.. நான் கூட ஏதோ சின்ன பாப்பாவை பத்தி முடிப்பீங்கன்னு பாத்தேன்.. வித்தியாசமா இருந்துச்சு.
  அங்கன ஜென்சி அம்மா பதிவுல பின்னூட்டம் இட்டதற்கு பதில் போட்டிருந்தீங்க.. வந்தேன். நம்ம கடைக்கும் வந்து ஒரு விமர்சனத்தை போடுங்க! இப்புடி நான் மக்களை கூப்பிடுறதில்ல. என்னமோ தெர்ல உங்ககிட்ட சொல்லணும் போல இருந்துச்சு சார்:
  http://paathasaari.blogspot.com/2009/06/blog-post_22.html

  ReplyDelete
 17. வெங்கிராஜா said...

  //ஆஹா! பின்னிட்டீங்க.. நான் கூட ஏதோ சின்ன பாப்பாவை//

  நன்றி ராஜா.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!