





கவிதை
டிவி பார்த்து விடுகிறாள்
நான் பாத்ரூம் போய்
குளித்து வெளிவரும்
இடைவெளியில்
என் எட்டு வயது மகள்
ஒவ்வொறு நாளும்
விடும் தடயங்களால்
கையும் களவுமாக பிடிபடுவதை
அவளிடம் சொன்னேன்
ரீமோட் இடம் மாறிவிடுகிறது
“ரயில்வே டைம் டேபிள்” படிக்கிறாள்
தலைக் குனிந்து இளிக்கிறாள்
ஹாலில் வாக்கிங் போகிறாள்
சேனல் மாறியிருக்கிறது
புத்தகங்களை தூசுத் தட்டுகிறாள்
டுயூப் லைட் எரிகிறதா பார்க்கிறாள்
கூப்பிட்டீயா என்கிறாள்
டவல் வேணுமா என்கிறாள்
மூக்குக் கண்ணாடியை
அழுந்தத் துடைக்கிறாள்
ஏதோ ஒரு நாளிலிருந்து
கவலையாகி்விட்டது
தெரியவில்லை
ஒரு தடயமும்
அதே நாளிலிருந்து
அவளுக்கும்
கவலையாகி்விட்டது
நான் சரியாகக் குளிக்கிறேனா
என்பதாக
கவிதையின் உட்பொருள் நன்றாக இருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது என்பதை வேறு ஒன்றாகக்கூட வைத்திருக்கலாம்.
ReplyDelete‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
Nice
ReplyDeleteநல்லாயிருக்கு ரவி..!
ReplyDeleteசூப்பர் தலைவா.. :)))
ReplyDeleteகவிதைப்படுத்துதல் அப்படிங்கறத உங்ககிட்ட கத்துக்கணும் :))
எச்ஸலண்ட் சார்...
ReplyDelete//கவிதைப்படுத்துதல் அப்படிங்கறத உங்ககிட்ட கத்துக்கணும் :))//
ரிப்பீட்டு...
அதே நேரம் குழந்தைகளை நினைத்துக் கவலையாகவும் இருக்கிறது...:-((
"kavithaigalal" vazhukaiyai rasikka
ReplyDeletekatru kolgiren
நல்லாருக்குது....அழகான கவிதை...
ReplyDelete"அகநாழிகை" said...
ReplyDelete//கவிதையின் உட்பொருள் நன்றாக இருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது என்பதை வேறு ஒன்றாகக்கூட வைத்திருக்கலாம்//
நன்றி.யோசிக்கிறேன் என்ன மாதிரி என்று. புறம் சார்ந்துதானே? நமக்கு அகம் சார்ந்து கவிதை வரே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
Vijay said...
ReplyDelete// Nice //
நன்றி விஜய்.
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//நல்லாயிருக்கு ரவி//
நன்றி.
சென்ஷி said...
ReplyDeleteதல!வாழ்த்துக்கள்.குங்குமம் (16-7-09) உங்க ப்ளாக் பத்தி வந்திருக்கு.(senshikathalan.blogspot)
விஷயம்:வெட்டிச்சிந்தனைகள்/பித்தளை
___________________________________________
//சூப்பர் தலைவா.. //
நன்றி.
தமிழ்ப்பறவை said...
ReplyDelete// எச்ஸலண்ட் சார்...
நன்றி.
//அதே நேரம் குழந்தைகளை நினைத்துக் கவலையாகவும் இருக்கிறது//
தல.. குனியூர் வரும்போது குனிஞ்சுட்டுப் போகலாம். இப்பவே ஏன் கவலை?.
நல்லா இருக்கு ஷங்கர் சார்.
ReplyDelete//அதே நாளிலிருந்து
ReplyDeleteஅவளுக்கும்
கவலையாகி்விட்டது
நான் சரியாகக் குளிக்கிறேனா
என்பதாக//
சொல்ல வந்த விஷயம் இங்கு வெகு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.....
அதுவும், அந்த கடைசி பாராவில் இருக்கும் டச்... ரவி, சூப்பர்...... கலக்கிடீங்க....
வாழ்த்துக்கள்.
அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteஆ.முத்துராமலிங்கம் said...
ReplyDelete//நல்லா இருக்கு ஷங்கர் சார்//
நன்றி.
R.Gopi said...
ReplyDelete//அதுவும், அந்த கடைசி பாராவில் இருக்கும் டச்... ரவி, சூப்பர்..கலக்கிடீங்க//
நன்றி கோபி.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்//
நன்றி மேடம்.
u r written in every line!!
ReplyDeletethe same 'touch' :)
அருமை. வேற ஒண்ணும் சொல்லத் தோணல.பின்னீட்டிங்க போங்க.
ReplyDeletevery nice one.
ReplyDelete//தொலைக்காட்சி பார்ப்பது என்பதை வேறு ஒன்றாகக்கூட வைத்திருக்கலாம்//
i feel the same, ravi sir.
kartin said...
ReplyDelete// u r written in every line!!
the same 'touch' //
நன்றி கார்டின்.
ஸ்ரீதர் said...
ReplyDelete//அருமை. வேற ஒண்ணும் சொல்லத் தோணல.பின்னீட்டிங்க போங்க//
நன்றி ஸ்ரீதர்.
நாடோடி இலக்கியன் said...
// very nice one.
//தொலைக்காட்சி பார்ப்பது என்பதை வேறு ஒன்றாகக்கூட வைத்திருக்கலாம்//
i feel the same, ravi sir.//
முதலில் வேறு வடிவத்தில் இருந்தது.
நன்றி அழைப்பை மதித்து கருத்துச் சொன்னதற்கு.
கவிதை சூப்பர் ... உள் கருத்தை மாற்றுவது போல், கதா ( கவிதை ) பாத்திரத்தையும் மாற்றி போட்டாலும் கவிதை வருகிறது ( சேருகிறது )... இப்ப தான் கல்யாணம் பண்ணி கொண்டுவந்த பொண்டாட்டி ... அம்மா .... பாட்டி கூட வரும் போல இருக்கு ...
ReplyDeleteஅது ஒரு கனாக் காலம் said...
ReplyDelete// கவிதை சூப்பர் //
நன்றி கனாக் காலம்.
//இப்ப தான் கல்யாணம் பண்ணி கொண்டுவந்த பொண்டாட்டி ... அம்மா .... பாட்டி கூட வரும் போல இருக்கு //
புரியவில்லை சார்!
கூப்பிட்டீயா என்கிறாள்
ReplyDeleteடவல் வேணுமா என்கிறாள்
மூக்குக் கண்ணாடியை
அழுந்தத் துடைக்கிறாள்///
தெளிவான ட்ரான்சிஷன் ! வாழ்த்துகள் ரவி
Prakash said...
ReplyDelete// வாழ்த்துகள் ரவி//
நன்றி.
மிகவும் தற்செயலாக உங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்தேன்...வலைப்பூவில் பேசப்படும் வாழ்க்கைக்குள்.
ReplyDeleteஇந்தக் கவிதை மிகவும் ரசனையோடு சொல்லப்பட்டிருக்கிறது....
குழந்தைகள் சரி, தவறு என்பதை நம்மிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். அதை நாம் சமயத்திற்கு ஏற்ற மாதிரி அராஜகமாக மாற்றிக் கொள்ளும் போது அந்த வசதியைப் பழக்கிக் கொள்ளும் வயதை எட்டாத பிஞ்சுகள் திணறிப் போகிறார்கள். சரியான விஷயத்தைப் பல நேரம் குற்ற உணர்ச்சியோடும், தவறான விஷயத்தை மிகவும் சிரத்தையோடும் அவர்கள் செய்ய நேருவது அவர்களது குற்றமல்ல...பெரியவர்களது உலகின் தடுமாற்றமான நீதி அவர்களையும் கலைத்துப் போடுகிறது...
மிகவும் சாதாரண விஷயத்தில் நடக்கும் கண்ணா மூச்சி ஆட்டத்தை உங்களது கவிதை அழகாகப் பேசுகிறது.
பரஸ்பரம் அன்பும், சுதந்திரப் பேச்சு வெளியும் வதியும் குடும்பங்கள் ஆரோக்கியமிக்கவை... அங்கிருந்து கவிதைகள் மட்டுமே புறப்படும், கவலைகள் மறக்கப்படும்.
எஸ் வி வேணுகோபாலன்
கருத்துக்கும் மற்றும் வருகைக்கும் நன்றி எஸ் வி வேணுகோபாலன்.
ReplyDelete