Monday, July 6, 2009

மேஸ்ட்ரோ ராஜா.! ஒரு ஸ்டைலான பாட்டு

"தம்பி பொண்டாட்டி” என்ற படம் 1992 ஆண்டு வந்தது. ரகுமான்,”நிழல்கள்” ரவி,ரம்யா,சுகன்யா.டைரக்‌ஷன் பஞ்சு அருணாசலம்.படம் ஒடியதா? தெரியவில்லை.


.Click To View Gallery

இசை மேஸ்ட்ரோ இளையராஜா.இந்தப் படத்தில் “என் எண்ணம் எங்கே” என்ற ஒரு பாடல் உள்ளது. பாடியவர் உமா ரமணன்.இவர் பி.சுசிலா மாதிரி் குடும்ப பாங்கு குரல் வளம். Poorman"s Susila என்று சொல்லலாம்.அற்புதமான க்ம்போசிங்.


பாட்டின் பின்னணி இசை...? பாட்டை அழகு படுத்துவதில் இவருக்கு இணை யாரு?ஜீனியஸ். இசைக் கோர்ப்புகளில் எந்த வித அசட்டுத்தனம் இல்லாமல் இருக்கும்.எல்லா வாத்தியங்களின் ஒலியும் அளந்து அளந்து சிக்கனமாகத்தான் வரும். கூடக் குறைய இருக்காது.

அதன் ஊடே இனிமையையும் பின்னிக் கொண்டே வரவேண்டும்.

காஞ்சிபுரம் புடவை நெய்வது மாதிரி துல்லியமான இழை சேர்ப்புகள்.


பாடல் ஆரம்பம் வழக்கமான ராஜாவின் stlyish opening. தவழ்ந்து வரும் இனிமையான இசை.


பிறகு உமா ரமணனின் குரலில் பல்லவி.முடிந்தவுடன் ராஜாவின் innings.


முதல் interludeஇல் வாத்தியங்களிலும் வெளிப்படும் செல்லமான இசை ரகளை/கொஞ்சல்/கெஞ்சல்.மழலையான கோர்ப்புகள்.


பிறகு மீண்டும் உமா ரமணன் இனிமையான குரல்.மறுபடியும் ராஜாவின் 2nd innings.இரண்டாவது interludeல் ஊது வத்தி புகைபோல் தபலாவின் தட்டல்கள் மெதுவாக எழுந்து -புல்லாங்குழல்-வயலின் -ட்ரம்ஸ்-வீணை-கிடார் ஒன்றுகொன்று காதல் செய்தபடி மயக்கும் இசை. எல்லாம் ஒரு கான்பிரன்ஸ் காலில்(conference call) இசை உரையாடல்கள்.


இந்தப் பாட்டு கிழ்வரும் பாடல்களின் சாயல் அடிக்கும்:


1. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்(கோபுர வாசலிலே)
2.பூங்கதவே தாழ் திறவாய் (நிழல்கள்)
3.அல்லாவின் ஆணைப்படி (சந்திரலேகா)
4.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா( ஆலய மணி)
5.பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்(பணம் படைத்தவன்)


ஏன்? இந்தப் பாட்டு மாயாமாளவகெளள என்ற கர்நாடக ராகத்தில் லைட்டாக தோய்த்துப் போடபட்டது என்பதாக காரணம். மற்ற நான்கு பாடல்களுக்கும் அடிப்படை இதுதான்.அதன் ஸ்வரங்கள் இருப்பதால் சாயல் அடிக்கிறது.

இளைய தலைமுறை அறிந்துக்கொள்ள வேண்டிய பாட்டு.

நன்றி:

பாடல் கேட்க:


16 comments:

 1. //பூங்கதவே தாழ் திறவாய் (நிழல்கள்)
  //

  தீபன் சக்ரவர்த்தியின் குரலில் இந்த பாடல் நிச்சயம் அப்போதைக்கு ஒரு புது டிரெண்டை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

  ReplyDelete
 2. அருமை தல.. உங்ககிட்டயே என்னோட சந்தேகத்தையும் தீர்த்துக்குறேன்.. “ஒரு கிளி உருகுது ஒருகிளி மயங்குது ஓ மைனா..” இது எந்தப் படம் தலைவா? தேடிட்டு இருக்கேன்..கிடைக்க மாட்டேங்குது.

  ReplyDelete
 3. kandipa ketkiren

  narsim ketta kelviikku padhil

  movie :Anantha Kummi

  ReplyDelete
 4. உடனே ஞாபகம் வரலை, கேட்க்கறேன் .... அழகா ரசித்து , கேட்டு, உள்வாங்கி எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 5. நல்லா உள்வாங்கி எழுதி இருக்கீங்க..

  ReplyDelete
 6. தலைவரே,
  எனக்கும் வியாதி முத்திப்போச்சு.அதனால நானும் கதை எலுதி உங்க எல்லோர் உயிரையும் ஒரு கை பார்க்கலாம்னு முடிவு செய்யறதுக்கு முன்ன உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் தரேன்.எல்லோர் கதையும் படிச்சு கமெண்ட் போட்ட மாதிரியே என் கதைக்கும் உங்க விமர்சனம் தேவை.தொடர்ந்து கொலை குற்றங்களில் ஈடு படலாமா என்பது மாதிரி.அதனால:kumky.blogspot.com/2009/06/blog-post.html
  மட்டும் பார்த்து எதாச்சும் சொல்லிடுங்க எசமான்.

  ReplyDelete
 7. நன்றி தலை.. ஏற்கெனவே எனது பதிவுக்கான பின்னூட்டத்தில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.. சோம்பலில் பாடலைக் கேட்கவில்லை. இன்று ஒரு பதிவாகவே போட்டு இணைப்பையும் தந்து விட்டீர்கள்...
  //Poorman"s Susila //
  நல்லாத்தான் சொல்லிருக்கீங்க...
  பாடலை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்க அளவுக்கு இசையை பிரித்தறிந்து உணரமுடியாவிடினும், ரசித்துக் கொண்டிருக்கிறேன்.பாடல் அறிமுகத்திற்கு நன்றி சார்...
  ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் ‘பூவே இது பூஜைக் காலமே’ பாடல் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பாடகி யார்? தெரிந்தால் சொல்லவும்.
  நாடோடி இலக்கியன் ஒரு பதிவிட்டிருக்கிறார், 90களில் இளையராஜா பாடல்கள் பற்றி.படித்தீர்களா...?!

  ReplyDelete
 8. அ.மு.செய்யது/நர்சிம்/பிஸ்கோத்துப்பயல்

  நன்றி.நர்சிம் அது “ஆனந்த கும்மி”.அதில் ’தாமரைக்கொடி” எனறப் பாட்டைக்கேளுங்கள்.

  அது ஒரு கனாக் காலம் /வினோத்கெளதம்

  நன்றி.கேட்டுவிட்டு மறக்காம சொல்லுங்க.

  ReplyDelete
 9. தமிழ்ப்பறவை said...

  //‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் ‘பூவே இது பூஜைக் காலமே’ பாடல் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பாடகி யார்? தெரிந்தால் சொல்லவும்.//
  B.S.Sasirekha. ஆத்மாவைக் கவ்வும் பாடல்.
  இதெல்லாம் ராஜாவின் திறமை.

  அதே மாதிரி பெண் குரல் சோலோ”ராசாவே உன்ன” ஒரு ராஜ்கிரண் படம்.
  அஹானா ஹீரோயின்.


  // நாடோடி இலக்கியன் ஒரு பதிவிட்டிருக்கிறார், 90களில் இளையராஜா பாடல்கள் பற்றி.படித்தீர்களா...?!//

  பார்க்கிறேன்.

  ReplyDelete
 10. தல, சான்சே இல்ல ,...தபேலா பேசுது ..ரொம்ப நன்றி

  ReplyDelete
 11. அது ஒரு கனாக் காலம் said...

  //தல, சான்சே இல்ல ,...தபேலா பேசுது ..ரொம்ப நன்றி//

  நன்றி தல.

  ReplyDelete
 12. //ஊது வத்தி புகைபோல் தபலாவின் தட்டல்கள் மெதுவாக எழுந்து -புல்லாங்குழல்-வயலின் -ட்ரம்ஸ்-வீணை-கிடார் ஒன்றுகொன்று காதல் செய்தபடி மயக்கும் இசை. எல்லாம் ஒரு கான்பிரன்ஸ் காலில்(conference call) இசை உரையாடல்கள்.//
  அருமை!. இந்தப் பாடலை நான் இதற்குமுன் கேட்டதில்லை. அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 13. சங்கா said...
  //அருமை!. இந்தப் பாடலை நான் இதற்குமுன் கேட்டதில்லை. அறிமுகத்திற்கு நன்றி//

  நன்றி சங்கா. மற்ற பாடல்களைப் பற்றி நீங்கள்
  இளையராஜா என்கிற லேபிளில் பார்க்கலாம்.

  ReplyDelete
 14. நண்பர் ரவிசங்கர்
  அருமையான நோஸ்டால்ஜியா
  எனக்கு இன்னும் அந்த பாடலின் வசீகரம் நினைவில் இருக்கு,இது மந்திரம் போட்டது போல ஒரு மிக்சிங்.
  ரம்யாவும் நல்ல அழகு. ரகுமான் காமிராவோடு பாடல் முழுக்க போட்டோ
  எடுப்பார்.
  நல்ல நினைவூட்டல் பதிவு

  இந்த பதிவின் சுட்டியையும் என் வலைப்பூவில் சுட்டிக்காட்டுகிறேன்.
  எங்கெங்கோ இருக்கும் இசைஞானியின் ரசிகர்களுக்கு அவரது முழு படைப்புகள் சென்று சேர என்னால் ஆன ஒரு சிறு முயற்சி
  இசைஞானியின் பாடல்கள் முழுவதையும் ஒருவராக தொகுப்பது சாத்தியமல்ல.
  எவ்வளவு பெரிய வேலை?
  உங்கள் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. நன்றி கார்த்திக்கேயன்.

  ReplyDelete
 16. சார்.. நீங்க சொன்னதெல்லாம் சரி.. ஆனால் இந்த பாடலை பாடியது சுனந்தா.. உமா ரமணன் அல்ல.. ஆனால் எல்லா பதிவுகளில்ய்ம் அப்படிதான் போட்டிருக்கிறார்கள். ஆனால் நம்மை போன்ற ரசிகட்கள் அதை கண்டறியவேண்டும்.. வேண்டுமானால் சுனந்த வால்ட்டர் வெற்றிவேல் படத்திற்காக பாடிய "மன்னவா " கேட்டு பாருங்கள் ஒற்றுமை புரியும்

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!