மழைப் பெய்து ஓய்ந்த
பொதிபொதியான ஈர பஞ்சு வானில்
“V" வடிவத்தில்
வரிசைக் கலையாது பறக்கும்
பெயர் தெரியாத பறவைகள்
கண்ணில் பட்டு
யாரையோ எங்கோ
காதலித்ததாக நினைவில்
மெல்ல வருட
வரிசைக் கலைந்து
மீண்டும் “V' வடிவத்தில்
கூடும் பறவைகளில்
பெயர் தெரியாத காதலி
கண்ணில் பட்டு
ஏதோ எங்கோ வரிசைக்
கலைந்ததாக நினைவில்
மெல்ல வருட
மீண்டும் ..........
நன்றி:http://www.istockphoto.com
படிக்க கவிதை:
அழகான வரிகள். படமும் அருமை.
ReplyDeleteரவி சார் , என் கணினியில் கோளாரா என்று தெரியவில்லை. படங்களுக்கு கீழ் எழுத்துகள் தெரிவது போல் பதிவிடுங்களேன். படங்களுக்கு சைடில் வந்தால் எழுத்துகள் நேராக இருக்காது. ஒரே வார்த்தை ஒன்றின் கீழ் ஒன்றாக தனித்தனி எழுத்துக்களாக வருகிறது.
ReplyDeleteஎளிமையான அழகான கவிதை ரவி சார்.
ReplyDelete//வரிசைக்//
'க்' இந்த இடத்துல வராதுன்னு நினைக்கிறேன்.சரியா?
;))
ReplyDeleteவாவ்...நல்லா இருக்கு ரவிஷங்கர்..!!
ReplyDeleteரொம்ப நாளா உங்களுக்கு பின்னூட்டம் போடணும்னு நினைக்கிறேன்.
ஆனால் ஏனோ நீஙக்ள் வைத்திருக்கும் பின்னூட்டமுறைக்கும் என் கணினிக்கும்
வாய்க்காத் தகறாராம்.
நன்றி துபாய் ராஜா.
ReplyDeletePrakash said...
ReplyDelete//படங்களுக்கு கீழ் எழுத்துகள் தெரிவது போல் பதிவிடுங்களேன்//
செய்துவிட்டேன்.பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
ஸ்ரீ said...
ReplyDelete// எளிமையான அழகான கவிதை ரவி சார்//
எடுத்து விட்டேன்.இந்த ஒற்று எழுத்துக்கள் கொஞ்சம் படுத்துகிறது.நன்றி.
mayil said...
ReplyDelete// ;)) //
எழுத்தில் உங்கள் கருத்தைச் சொல்லக் கூடாதா
மயில்? நன்றி.
அ.மு.செய்யது said...
ReplyDelete//வாவ்...நல்லா இருக்கு ரவிஷங்கர்..!!//
வருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.
//ரொம்ப நாளா உங்களுக்கு பின்னூட்டம் போடணும்னு நினைக்கிறேன்.ஆனால் ஏனோ நீஙக்ள் வைத்திருக்கும் பின்னூட்டமுறைக்கும் என் கணினிக்கும் வாய்க்காத் தகறாராம்//
நாம சாதுண்ணே!
சொல்லுங்க “பின்னூட்ட முறைய மாத்தனுமா”
இந்தப் பின்னூட்டம் எப்படி வாய்க்காலத் தாண்டி வந்தது.
இப்போ ஒகே சார். ரொம்ப நாளா இதை சொல்லத்தான் முயற்சி செய்து உளறி இருக்கிறேன்
ReplyDeleteநன்றி பிரகாஷ்.கவிதை எப்படி.
ReplyDeleteபுரிஞ்சா பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேனா கவிதையை பற்றி ?
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குது ரவிஜி!
ReplyDeleteநினைவுகள், காட்சிகள், மனசு.. எல்லாம் ஒரே புள்ளியில கரெக்டா ஒத்து வருது..
Suresh Kumar said...
ReplyDelete//அருமையான கவிதை//
நன்றி சுரேஷ் குமார்.
சென்ஷி said...
ReplyDelete//ரொம்ப நல்லா இருக்குது ரவிஜி!//
நன்றி சென்ஷி.
இந்த வரிசைகளை,பொதுவாக மாலை நேரங்களில் பீச்சில் மல்லாந்து படுத்து பரந்த வானைப் பார்க்கும்போது பார்த்திருக்கிறேன். அதை நீங்கள் மனசு, நினைவென்று கொண்டு சென்றிருப்பது அழகு
ReplyDeleteசங்கா
ReplyDeleteநன்றி சங்கா