ஆனால் ஜென்சியின் குரல் ஒரு தனி ரகம்.
இவருடைய ஸ்பெஷல் மலையாள மூக்கு ரீங்கார குரல்.அடுத்து உயிர் துடிப்பு.அதுதான் soul stirring.கண்டிப்பாக ஒரு சோகம் இழையோடும்.குறையா? நிறையா? “ர”வை “ற” போல மலையாள உச்சரிப்பு உண்டு.தெய்வீக ”ராகம்” என்பதை “றாகம்”.”மலருங்கள்” என்பதை மல”ற”ங்கள்.
இதை வைத்து சுஜாதா/சசிரேகா இவரிடமிருந்துப் பிரித்து விடலாம்.இவர் ஒரு பாட்டு மலையாளமும் தமிழும் கலந்து (75:25) “பூந்தளிர்” என்ற படத்தில் வரும்.
இப்போது பாடும் ஷரேயா கோஷால்,சாதானா சர்க்கம் போன்றவர்கள் அற்புதமான குரல் வளம் உடையவர்கள் என்றாலும் ஜென்சி வசீகரம் இல்லை.
ஓவராக மழலைத் தட்டும் குரல்கள்.அடுத்து அழுத்தமான தமிழ் உச்சரிப்பு இல்லாமை.
ஜென்சியின் சில பாடல்ளை நேரடியாக வீட்டில் கேட்காமல் எங்கோ வெகு தூரத்தில் காற்றில் மிதந்த வரும் போது கேட்டால் அள்ளிக்கொண்டுப் போகும்.”ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடல் ஒரு உதாரணம். அதே மாதிரி ”இதயம் போகுதே”பாட்டில் வரும் ஒரு ..”லாலல்லலா”உள்ளத்தை உருக்கும் குரல்.இரண்டுமே அற்புதமான இசை.
இந்த “ஆயிரம் மலர்களே” பாட்டு இரண்டு பேர் பாடுவது.’”கோடையில் மழைவரும் வசந்தக்காலம் மாறாலாம்” என்ற வரிகளுடன் எஸ்.பி.ஷைலஜா பாட்டின் உள்ளே வருவார்.இவர் குரலில் ஜென்சி வசீகரம் இருக்காது.இவர் குரல் ஒரு தனி ரகம்.
இந்த “ஆயிரம் மலர்களே” பாட்டு இரண்டு பேர் பாடுவது.’”கோடையில் மழைவரும் வசந்தக்காலம் மாறாலாம்” என்ற வரிகளுடன் எஸ்.பி.ஷைலஜா பாட்டின் உள்ளே வருவார்.இவர் குரலில் ஜென்சி வசீகரம் இருக்காது.இவர் குரல் ஒரு தனி ரகம்.
ஜென்சி பின்னணிப் பாடிய நடிகைகள் தீபா/ஷோபா/ராதா/ரதி/படாபட் ஜெயலட்சுமி/ராதிகா/சுஜாதா.இவர் பாடகர் ஜாலி ஆபிராகமின் சகோதரி.
ஒரே கட்டத்தில் ஜென்சி ராஜாவால் ஓரம் கட்டப்பட்டு காணாமல் போனார்.இவர் ஹிட் பாடல்கள் எல்லாம் ராஜாவின் இசைதான்.
எனக்குப் பிடித்த சில பாடல்கள்:
ஒரு சிறந்த உள்ளத்தை உருக்கும் பாடல் ”ஆயிரம் மலர்களே “ பாட்டின் தொடக்க ஹம்மிங்கும் அதைத் தொடர்ந்து வரும் இசையும் மற்றும் “தெய்வீக ராகம்”(உல்லாசப் பறவைகள்) பாட்டும்,”ஞான் ஞான் பாடனும்..நீ.. நீகேட்கனும்”(பூந்தளிர்) காலத்தால் என்னால் மறக்க முடியாது.
- “உனக்கெனதானே காத்திருந்தேன்” (பொண்ணு ஊருக்குப் புதுசு)
- ”ஞான் ஞான் பாடனும்..நீ.. நீகேட்கனும்”(பூந்தளிர்)
- “காதல் ஓவியம் பாடும் காவியம்”(அலைகள் ஓய்வதில்லை)
- “தம்தனனம் தனனம்” (புதிய வார்ப்புகள்)
- “கீதா சங்கீதா”(அன்பே சங்கீதா)
- “அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்”(முள்ளும் மலரும்)
//வீட்டில் பெரும்பான்மை இரவுகளில் நானே தயார் செய்து தேநீர் குடிப்பேன். பின்னிரவின் அமைதியில் சூடான தேநீரை சிறிது சிறிதாக குடித்தபடியே கணிணியில் ஒரேயொரு பாடல் கேட்பது ரசனைக்குரிய அனுபவம். அந்த ஒரு பாடல் எனக்கு மட்டுமே ஒலிப்பது போல மிக நெருக்கமாக கேட்கும். அப்படி அடிக்கடி கேட்கும் பாடல் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே மலருங்கள். இளையராஜாவின் இசையில் உருவான அந்தப் பாடல் தரும் மயக்கம் சொல்லில் அடங்காதது//
"ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்”(பூந்தளிர்).(1979)
பாடலின் முன்னணியில் வரும் தபலா இசை ரம்மியமானது. பின்னணி இசையும் சுகந்தம்.
இன்னும் முக்கியமான இனிமை ததும்பும் பாடல்கள் அவர் குரலில் ஜானி திரையில் ஒலித்துள்ளது, அவை 'என் வானிலே ஒரே வெண்ணிலா'மற்றும் 'ஒரு இனிய மனது'.
ReplyDeleteதெய்வீக ராகம்.....
ReplyDeleteஇந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை....
அதிகம் ஜென்ஸி பாடவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்!
விகடனில் ஒரு முறை இவர் பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள்! அதில், ஜென்சி, கேரளாவில் அரசாங்க வேலைக்கு சென்றுவிட்டதால் பாட்டு பாடுவதற்கு தடை ஏற்பட்டுவிட்டது என்று சொல்லியிருந்தார்! அவர் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு அரசாங்க வேலை பெரிதாகப்பட்டதால் அப்படி செய்ததாக சொல்லியிருந்தார்! அதே மாதிரி பல வருடங்களுகுப் பிறகு மொட்டையின் இசையில் ஒரு பாட்டு பாடுவதற்கு போயிருந்தபோது, அவர் மகனுக்கு உடம்பு சரியில்லாததால் ரிக்கார்டிங் போகமுடியவில்லையாம்! அதனால் மொட்டை கோபித்துக் கொண்டதாகவும் சொன்னார்!
ReplyDeleteஎன்ன இருந்தாலும், அந்த “இதயம் போகுதே....” பாடல் இப்பொழுதும் என்னை intimidate செய்யும்!
திரு ரவிஷங்கர், அருமை!,
ReplyDelete//ஜென்சியின் சில பாடல்ளை நேரடியாக வீட்டில் கேட்காமல் எங்கோ வெகு தூரத்தில் காற்றில் மிதந்த வரும் போது கேட்டால் அள்ளிக்கொண்டுப் போகும்.//
வாவ்!, வேலையில்லாமல், மத்தியானம் வீட்டில் வெறித்து இருந்த போது, காற்றில் மிதந்து வந்த அந்தத் தெய்வீக ராகம், அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும், ஆயிரம் மலர்களே மலருங்கள்...
நன்றி
நான் பின்னூட்டம் இட வநத செய்தியை நண்பர் ரவிஷா சொல்லி விட்டார்.
ReplyDeleteஅற்புதமான பகிர்விற்கு நன்றி.
படிக்கும் போதே ஜானி பட பாடல்கள் தான் மனதில் ஒலித்தன. வார்த்தைகள் தேவையா என்று இழுத்து சுரம் பிடித்து பாடுவது அம்மணிக்கே உரித்தான ஒரு அரிய கலை. குரலில் ஒரு துல்லியம் இருக்கும், இழை இழையாக டிஜிட்டலில் பிரிக்கிறார்களே... அப்படி பிரித்தாலும் கூட இழைகள் எல்லாம் சும்மா நங்கூரம் மாதிரி தான் இருக்கும். பிசிறே அடிக்காமல், அற்புதமாக பாடக்கூடியவர். (நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஷ்ரேயா கோஷலின் மகாப்பிரபல "முன்பே வா" ஆப்பிளில் கேட்கையில் நடுநடுவில் உள்ளிழுக்கும் காற்று ஒலிக்கிறது. இந்த இம்சை ஜென்சியிடமோ, ஜானகியம்மாவிடமோ இல்லை) அன்பர் முரளிகண்ணன் வந்து ஏதேனும் பட்டியல் போட்டால் யூடியூபில் ரசிக்க ஏதுவாக இருக்கும். தமிழ் என்சைக்ளோபீடியாவில இருக்குதா?
ReplyDeleteThanks a lot for posting on Jency. I am one of many who have been bewitched by her voice. All the songs you have listed are my favorites too. Till date I have never stumbled on a CD collection of her songs.
ReplyDeleteபுனிதா||Punitha said...
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//இன்னும் முக்கியமான இனிமை ததும்பும் பாடல்கள் அவர் குரலில் ஜானி திரையில் ஒலித்துள்ளது, அவை 'என் வானிலே ஒரே வெண்ணிலா'மற்றும் 'ஒரு இனிய மனது'//
நிச்சியமாக மறக்க முடியாது.கட்டுரையின் சுருக்கம் கருதி சில பாடல்களை விட்டு விட்டேன்.
//தெய்வீக ராகம்//
ReplyDeleteஇந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை//
பாட்டின் வெற்றி பாதி ஜென்சிக்கும் மீதி ராஜாவின்
இசை கோர்ப்புக்கும்.இதில் வரும் கோரஸ் மனதைத் தொடும் ஒன்று.
நன்றி ஆதவா.
என்னுடைய பதிவுகளில் ராஜாவின் லேபிலில் ராஜாவின் சில அபூர்வ பாடல் பற்றிய பதிவுகளைக் காணலாம்.
ரவிஷா said...
ReplyDelete//விகடனில் ஒரு முறை இவர் பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள்.....//
இந்த தகவல் தெரிந்துதான் போடவில்லை கட்டுரையின் நீளம் கருதி.
நன்றி.
சங்கா சொன்னது:
ReplyDelete//திரு ரவிஷங்கர், அருமை//
நன்றி சங்கா.
“"ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்”(பூந்தளிர்).(1979)’’
கேட்டுவிட்டு சொல்லுங்களேன்.
வண்ணத்துபூச்சியார் said...
ReplyDelete//நான் பின்னூட்டம் இட வநத செய்தியை நண்பர் ரவிஷா சொல்லி விட்டார்//
காரணத்தைச் சொல்லிவிட்டேன் அவருக்கான பின்னூட்டத்தில்.
//அற்புதமான பகிர்விற்கு நன்றி//
நன்றி வண்ணத்துப்பூச்சியார்.
July 24, 2009 10:46 AM
வெங்கிராஜா சொன்னது:
ReplyDelete//வார்த்தைகள் தேவையா என்று இழுத்து சுரம் பிடித்து பாடுவது அம்மணிக்கே//
அற்புதம்.
//அப்படி பிரித்தாலும் கூட இழைகள் எல்லாம் சும்மா நங்கூரம் மாதிரி தான் இருக்கும். பிசிறே அடிக்காமல்//
அதற்கு காரணகர்த்தா The Great Maestro Raja தான்.இசை கோர்வைகளை துல்லியமாக எழுதி
கோர்ப்பது.ஜாயிண்டுகளில் பிசிறில்லாமல் அமைப்பது. இதே ஜென்சி வேறு இசையமைப்பாளார்களிடம் பாடிய பாடல்கள் பிரபலமாகவில்லை.
வெங்கிராஜா சொன்னது:
ReplyDelete//மகாப்பிரபல "முன்பே வா" ஆப்பிளில் கேட்கையில் நடுநடுவில் உள்ளிழுக்கும் காற்று ஒலிக்கிறது//
ரஹ்மானை நான் ரசிப்பதில்லை.பிடிப்பதும் இல்லை.அதுவும் ராஜாவை கேட்டுவிட்டு அவர் பாட்டில் “உயிர் துடிப்பு” இல்லாததால்.
இந்த பாட்டில் தமிழ் தெரியாத பாடகியால ஆங்கிலத்தில் அல்லது வேறு மொழியில் எழுதி பாடப்படுவதால் உச்சரிப்பு அழுத்தமாக இல்லை.
//முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா முன்பே வா”
காற்றில் அலைந்து அலைந்து வருவது ஒரு சிறப்பு.அது மாதிரி குரலும் காதல் உணர்வு தோய்ந்து வருவதும்.
”ஊடே அல்லது ஊணே” வா ஒன்றுமே புரியவில்லை.
இதே காதல் உணர்வுகளோடு ராஜாவின்
“மாலையில் யாரோ மனதோடு பேச”
பாட்டு இசையின் உச்சம்.
வெங்கி நம்ம கவிதை “ஆதலினால் காதல் மீண்டும்” கவிதைப் படிச்சீங்களா!
நன்றி.
நன்றி கிருஷ்ணன்.
ReplyDelete//Till date I have never stumbled on a CD collection of her songs//
உண்மைதான்.
நல்ல பதிவு ரவி ஷங்கர்.
ReplyDeleteஜென்ஸியைப் பற்றி நான் எழுதியிருந்த பதிவில் உங்களுக்கு பிடித்த பாடலாக தெய்வீக ராகத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்."ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்” பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.இந்த பாடலைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி,கேட்டுவிட்டு சொல்கிறேன்.
காணாமல் போன பின்னணி பாடகிகள்:
July 24, 2009 11:55 PM
ReplyDeleteநாடோடி இலக்கியன் said...
// நல்ல பதிவு ரவி ஷங்கர்//
நன்றி நாடோடி இலக்கியன்.
//ஜென்ஸியைப் பற்றி நான் எழுதியிருந்த பதிவில் உங்களுக்கு பிடித்த பாடலாக தெய்வீக ராகத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.//
ஆமாம்.அந்த பாட்டின் ஆரம்பம் ரம்மியமானது.
//"ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்” பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.இந்த பாடலைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி,கேட்டுவிட்டு சொல்கிறேன்.//
ராஜா ஒரு ரசனையோடுப் போட்டிருப்பார்.ஆரம்ப
தபலா இசையை கேளுங்கள்.
'ர' வுக்கு அவர் கொடுக்கும் அழுத்தம்...
ReplyDelete'இதயம் போகுதே' சோகம் வழியும் குரல்
'ஆயிரம் மலர்களே'..
எப்போதும் ரசிக்கலாம்..
ஜாலி ஆப்ரகாமின் சகோதரி என்பது இதுவரை எனக்குத் தெரியாது..
நல்ல குரல் அவருடையது .நான் ரசித்த பாடகிகளில் இவரும் ஒருவர்.
ReplyDeleteநன்றி பாச மலர்/ஸ்ரீதர்
ReplyDeleteரவி!
ReplyDelete'காதல் ஓவியம்' எனக்கு மிகவும் பிடித்த சொக்க வைக்கும் ஜென்சி(ரெகரி)யின் பாடல். அந்த நேர்காணல் ஆகஸ்ட் 2008 குமுதத்தில் வந்திருந்தது (முழுவதும் படிக்க)
//``ஆமாம். குடும்பச் சூழ்நிலை தான். கேரளாவிலேயே இருக்க வேண்டியதாயிற்று திருமணம் நடந்ததால் பொறுப்புகளும் கூடிவிட்டது. அதனால் பாடல் உலகத்தைவிட்டு விலகி விட்டேன்.''//
//மீண்டும் சினிமாவில் பாடணும்னு ஆசை வந்துச்சு. ராஜா சாரை சந்திச்சு மறுபடியும் பாட ஆசைப்படுறேன்னேன். பிரசாத் தியேட்டருக்கு காலை 8 மணிக்கு வந்திடுன்னார். இரவெல்லாம் மறுபடியும் பாடப்போற சந்தோஷம். ஆனா என் மகன் நிதினுக்கு திடீரென்று குளிர் ஜுரம் வந்துடுச்சு. விடிந்ததும் விஜயா ஹாஸ்பிட லுக்குத் தூக்கிட்டுப் போனோம். அதுல எல்லாம் மறந்துபோச்சு. பத்து மணிக்குதான் ஞாபகம் வந்து, டாக்ஸி பிடிச்சு பிரசாத் ஸ்டுடியோ போனேன். ஆனா ஏற்கெனவே அந்தப் பாடலை ஜானகி அம்மா பாடிட்டு வெளியே வந்தாங்க. நான் ஸ்டுடியோ ஹால்லயே நின்னுட்டிருந்தேன். ராஜா வெளியே வந்து, ``இப்பதான் வந்தியா'' என்று கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டார். நான் எதையும் சொல்ல முடியாம அப்படியே திரும்பிட்டேன்.
இது நடந்து 15 வருஷமாயிடுச்சு.//
நன்றி வெங்கட்ரமணன்.உங்கள மாதிரி நானும் அப்பவே(ஆகஸ்டு) குமுதத்துல படிச்சாச்சு.கட்டுரை பெரிசா ஆயிடும்னுதான் இத சேக்கல.இதே மேட்டர
ReplyDeleteஇன்னொருத்தரும் (ரவிஷா) எழுதி இருக்காரு.அவருக்கும் இதே பதில்தான்.
வருகைக்கு நன்றி.
அற்புதமான பகிர்வு ரவி...வாழ்த்துக்கள்!
ReplyDeleteபா.ராஜாராம் said...
ReplyDelete//அற்புதமான பகிர்வு ரவி...வாழ்த்துக்கள்!//
முதல் வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.
அவர்களின் ஒரு பாட்டு எனக்கு ஒரு விதமான உணர்வை ஏற்ப்படுத்தும் கேக்கும் பொழுது எல்லாம் அது "தெய்விக ராகம்"-உல்லாச பறவைகள்.
ReplyDeleteவினோத்கெளதம் said...
ReplyDelete//அவர்களின் ஒரு பாட்டு எனக்கு ஒரு விதமான உணர்வை ஏற்ப்படுத்தும் கேக்கும் பொழுது எல்லாம் அது "தெய்விக ராகம்"-உல்லாச பறவைகள்//
உண்மைதான்.நெருடும் குரல்.
நன்றி.
தல.,
ReplyDeleteஉங்க கால காமிங்க.,
தொட்டு கும்பிடனும் போலருக்கு.,
ஒரு பெரீய்ய்ய பன்னூட்டம் எழுதனும்.,
நேரமில்லாததனால அப்பாலிக்கா வரேன்.
கும்க்கி said...
ReplyDeleteவாங்க கும்க்கி.
// தல, உங்க கால காமிங்க.,
தொட்டு கும்பிடனும் போலருக்கு.,//
எதுக்குங்க.நீங்க ரசிக்கறத நானும் ரசிக்கிறேன்.
அவ்வளவுதான்.
//ஒரு பெரீய்ய்ய பன்னூட்டம் எழுதனும்.,
நேரமில்லாததனால அப்பாலிக்கா//
வாங்க. சொல்லுங்க.
மனசு எதோ மாறி இருந்தா, நான் youtube போய் இப்பவும் ஜென்சி பாடல்களை கேட்பேன்.
ReplyDeleteஎனக்கு "sweet and strong" குரல் பிடிக்கும். பாம்பே ஜெய்ஷ்ரீ, வானிஜெயராம் பாடல்கள் இஷ்டம்.
ஜானி பாடல்கள் - என்றும் இனிப்பவை...
புதுசை பழசோடு நாம் ஏன் ஒப்பிட்டு விமர்சிக்கிறோம்னு யோசிச்சிரிக்கீங்களா?
ReplyDeleteஇந்த பழக்கம் எல்லா காலத்திலும் நடக்குறாது இன்னும் வியப்பு...
புதுசு பழசாகி புதுசு பழசாகி ....
அனேகமாய் இது நாம் பழசானதன் குறிகளோ???
just a self-analysis, யாரும் தப்பா எடுத்துகாதீங்க
உண்மையிலேயே சிறந்த பாடகி அவர். பல பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு.
ReplyDeleteஎஸ்.ராமகிருஷ்ணன் போல உங்கள் ரசனையும் இருக்கிறது எனும் விதத்தில் இடப்பட்ட அருமையான இடுகை.
மிக்க நன்றி.
சுகுமார்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.எனக்கும் எல்லோர் குரலும் பிடிக்கும்.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி.
//புதுசை பழசோடு நாம் ஏன் ஒப்பிட்டு விமர்சிக்கிறோம்னு யோசிச்சிரிக்கீங்களா?//
இது எதுக்கு சொல்றீங்க? புரியல.
வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteநன்றி.
//எஸ்.ராமகிருஷ்ணன் போல உங்கள் ரசனையும் இருக்கிறது எனும் விதத்தில் இடப்பட்ட அருமையான இடுகை//
மாற்றிப் படியுங்கள்.
என் ரசனை போல எஸ்.ராமகிருஷ்ணன்
இருக்கிறது எனும் விதத்தில் இடப்பட்ட அருமையான இடுகை
காற்றில் மிதந்து வரும் ஜென்சியின் பாடலைக் கேட்டுக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனின் சிறு கதைகளைப் படிக்க வேண்டும் என்கிற ஏக்கம் என்னை அப்பிக் கொள்கிறது...இந்த இடுகையைக் கண்டதும்.....
ReplyDeleteவருணிக்க முடியாத அழகான குரல்...
ReplyDeleteநல்லா ஞாயபகப்படுத்துனீங்க.. :-)
Blogger கடைக்குட்டி said...
ReplyDelete// வருணிக்க முடியாத அழகான குரல்...//
வாங்க கடைக்குட்டி.வருகைக்கு நன்றி.
சத்தியமா. ஒரு அமானுஷ்யமான குரல்.
//நல்லா ஞாயபகப்படுத்துனீங்க.. //
ஆஹா.. எப்பவும் மனசுல ரீங்காரம் இடும் குரலாச்சே.
வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteநன்றி.
//எஸ்.ராமகிருஷ்ணன் போல உங்கள் ரசனையும் இருக்கிறது எனும் விதத்தில் இடப்பட்ட அருமையான இடுகை//
மாற்றிப் படியுங்கள்.
என் ரசனை போல எஸ்.ராமகிருஷ்ணன்
இருக்கிறது எனும் விதத்தில் இடப்பட்ட அருமையான இடுகை
August 11, 2009 9:25 AM
Delete
Blogger ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
//காற்றில் மிதந்து வரும் ஜென்சியின் பாடலைக் கேட்டுக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணனின் சிறு கதைகளைப் படிக்க வேண்டும் என்கிற ஏக்கம் என்னை அப்பிக் கொள்கிறது...இந்த இடுகையைக் கண்டதும்.....//
அப்படியே செய்ங்க. அனுபவீங்க.
நன்றி சார்.
ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்” பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.இந்த பாடலைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி,கேட்டுவிட்டு சொல்கிறேன்.
ReplyDelete“அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்”(உதிரிப்பூக்கள்)
அப்புறம் அது"உதிரிப்பூக்கள்"
அல்ல அது "முள்ளும்மலரும்"
Blogger S Maharajan said...
ReplyDelete// ஞான் ஞான் பாடனும்..நீ.. நீ..கேட்கனும்” பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.இந்த பாடலைப் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி,கேட்டுவிட்டு சொல்கிறேன்//
பாட்டின் சிறப்பு வண்ணமயமான இசை.பிறகு ஜென்சி.ஒரு மாதிரி மழலைத் தட்டும் வசீகர குரல்.
//அப்புறம் அது"உதிரிப்பூக்கள்"
அல்ல அது "முள்ளும்மலரும்"//
ரொம்ப நன்றி. மாற்றிவிட்டேன்.
முதல் வருகைக்கு நன்றி.
கருத்துக்கும் நன்றி.
0- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ReplyDeleteரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் " எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து இருவரின் 80-களில் உருவான இனிய பாடல்களுடன் - ஆயிரம் மலர்களே மலருங்கள் ...............பாடலையும் பாடினார்கள் .