Wednesday, July 1, 2009

உயிரோடை சிறுக‌தைப் போட்டிக் கதை

”ஏங்கண்ணு ரொம்ப ஸ்பீடா அவுட் ஆயிட்ட? லாங் ஸ்டாண்டிங்க இருப்பேன்னு நெனச்சேன்.அயிட்டத்துக்கு நீ கொடுத்த பணம் ரெண்டாயிரம்…..ஒன் அவரு புக்கிங்….ஆனா என்ஜாய்மெண்ட் மூணு நிமிசம்.அதுல காண்டம் மாட்றதுக்கு ஒரு நிமிசம் போய்டுச்சு. அவ்வளவு உசார் உடம்பு!”


என்ன பதில் சொல்லுவது? பிரகாஷுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது.எதுவும் பேசவில்லை. தலைக் கவிழ்ந்து பிறகு மெதுவாக நிமிர்ந்தான்.தலைக் கவிழ்ந்து நிமிர்ந்த இடைப்பட்ட நேரத்தில் உணர்ந்திருப்பாள்.பேச்சில் இனி நக்கல் தொனி இருக்காது.அவளைப் பார்த்தான்.


அவள் இன்னும் ஆடை உடுத்தவில்லை. நிர்வாணமாகத்தான் கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள்.கலர் கலரான வளையல்கள் குலுங்க அடிக்கடி தலைமுடியைக் கோதிக்கொண்டுதான் பேசினாள். தலை வகிடு நிறைய குங்குமம் தீட்டியிருந்தது.வயிற்றில் இரண்டு மாதம் கர்ப்பம் மாதிரி தொப்பைப் போட்டு உப்பலாக இருந்தது.ஒரு காலில் மட்டும் மெல்லிசான வெள்ளி கொலுசு. அங்கங்கே ரோமங்கள் மழிக்கப்பட்டு முளைத்தெழும் புது முடிக்கால்கள் புள்ளிப்புள்ளியாகத் தெரிந்தன.நல்ல சிவப்பு நிறம். சர்க்கஸ் பார் விளையாடும் நேபாளப் பெண்கள் மாதிரி குண்டுக்கட்டாக இருந்தாள்.


இந்த குண்டுக்கட்டு உடம்பு தன் மனைவியின் உடம்போடு சற்று பொருந்தி இருந்தது.முதல் பார்வையிலேயே பிடித்துப்போய் இவளை ஒப்புக்கொண்டான்.. இவளோடு ரூமில் ஒன்றாக நுழையும்போது தன் முதலிரவின் நினைவுகள் சின்ன அலைகளாக பின் தொடர்ந்தது.


முதலிரவில் அவளைத் தொடக்கூட விடவில்லை.”பிடிக்கல”என்று ஒற்றை வார்த்தை உதிர்த்து விட்டு திரும்பிக்கொண்டாள்.இவனும் ஏதும் பேசவில்லை.ஆப்பிளை உள்ளங்கையில் உருட்டிகொண்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.வேறொன்றும் நடக்கவில்லை.


நடந்ததெல்லாம் ஊதுவத்தி கடைசிவரை எரிந்து சாம்பலாகியது.பூக்கள் வாடியது.தண்ணீர் பாட்டில் பால் சொம்பு கூட வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.இனிப்புகள் ஏசியில் கெட்டித்தட்டிப் போய் விட்டது.மாற்று உடைகள் பிரிக்கப்படவில்லை.வாட்ச் கூட கழட்டவில்லை.


கடைசியாக முதல் இரவும் வழக்கத்துடன் விடிந்து பொழுதாகியது.


பழைய நினைவு கலைந்து உலர்ந்துப் போன உதடுகளை நாக்கால் ஈரப் படுத்திக்கொண்டான். இரண்டு பாட்டில் பீர் போதை கொஞ்சமாகத்தான் தெளிந்திருந்தது.தலை அவ்வப்போது பின் பக்கம் குடை சாய்வதும் அதை சரி செய்துக்கொள்வதுமாக இருந்தான். படுக்கையைப் பார்த்தான்.


அவள் இடது பக்கத்தில் சூடிதாரும், துப்பட்டாவும் கலைந்து கிடக்க பிராவும் பேண்டிஸூம் வலது பக்கம் விசிறியடிக்கப்பட்டிருந்தது. தாம்தான் அவளின் எல்லா உடைகளையும் அவிழ்த்தோமா அல்லது அவளே அவிழ்த்தாளா என்று தெரியவில்லை.இங்கு வரும்போது புடவைதான் கட்டி இருப்பாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.


அந்த குண்டுக்கட்டு உடம்பு. கன்னக் கதுப்புகள்.சின்ன நெற்றி. அப்படியே மனைவி செளமியாதான்.


பழைய நினைவு மீண்டும் அலையடித்தது.எவ்வளவு நேரம் ஆப்பிளை உருட்டிக்கொண்டிருப்பது.”பிடிக்கல” ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.”எல்லாத்தையும் மறந்துடு”மெதுவாக காதருகில் முணுமுணுத்தான்.மறுபடியும் “பிடிக்கல” என்றாள்.


“ஏய்..குண்டுக் கட்டு செளமியா!…என்ன ..ஏண்டி அன்னிக்கு அலவ் பண்ணல? எவ்வளவு திமிரு உனக்கு.” வெறியுடன் பாய்ந்து மீனாவைக் கட்டிக்கொண்டான். மீனா மிரண்டாள். கீச்சென வீரிட்டாள்.பிரகாஷ் வாயைப் பொத்தி கட்டிப்பிடித்து உருண்டான்.மார்பகங்களில் அங்கங்கு நகக்குறிகள் பட்டு ரத்தக் கீற்றுகள் தோன்றின..இரண்டொறு தலைமுடிக் கற்றைகள் கையில் சிக்கிக்கொண்டது.


”’வுடு..வுடு.ய்யா” திமிறினாள்.


”மூணு வருஷமா….காய வச்சு வேடிக்கைப் பாக்கற…..யார்றி உன் லவ்வர்…நா பாக்கறேன்….எங்க காட்டு?


தொடை இடுக்கில் தன் பலம் முழுவதும் பிரயோகித்து விரல்களை செலுத்த முற்பட்டான்.


”பீட்டர் அண்ணே….ஓடி வாங்க…. இந்த ஆளு ரவுடித்தனம் பண்றான்.போலீஸ்ஸ கூப்பிடு” அடி தொண்டையிலிருந்து கூச்சல் போட்டாள்.


கதவு தட்டப்பட்டது.பிரகாஷுக்கு பயம் பிடித்துக்கொண்டது.அவள் மீதிருந்த பிடியைத் தளர்த்தினான்.விலுக்கென்று கட்டிலிருந்து இறங்கினான்.பேண்ட் சட்டையைக் கொத்தாக கையில் எடுத்தான்.


”சாரி…சாரி…செளமியா ஏதோ வேகத்துல..என்ன மன்னிச்சுடு”மார்பு கூடு மேலும் கிழும் ஏறி இறங்க ஒரு வித படபடப்புடன் உடைகளை மாட்டிக்கொண்டான்.தலையைக் கோதிக்கொண்டு அவளையே பயத்துடன் பார்த்து..


”எதுவும் சொல்லாத .. எக்ஸ்டரா டிப்ஸ் ஐநூறு ரூபாய் கொடுத்துடறேன்” கெஞ்சலாகக் கேட்டான்.


”அய்ய..நீ இன்ன… மெண்டலா?…மூணு நிமிசத்தல டென்சன் ஆக்கிட்டா. எவ்வளவு கிரிப்பா புட்சு சாவடிக்கப்பாத்த..யார் அது செளமியா?”


மீனா மூச்சு வாங்கியபடி தலைமுடியை அளைந்து கோடாலி முடிச்சு போட்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டாள்.வளைகளை இழுத்துச் சரி செய்தாள்.கவர்ச்சியாக குலுங்கி ஒலித்தது. நகக் கீறல்களில் பவுடர் அடித்துக்கொண்டாள்.கண்களில் பதட்டம் போகவில்லை.கைகள் நடுங்கியது.


பிரகாஷ் அவளை மிரட்சியிடன் பார்த்துக்கொண்டிருந்தான்.என்ன செய்வாளோ?


இடையிடையே ”மீனா…மீனா…” என்ற குரல்களுக்கிடையே கதவுத் தட்டப்படும் சத்தம் கேட்டது.”வெயிட்ண்ணா.. வந்துடறேன்” பதில் கொடுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.


”யாரு செளமியா?வீட்டு மேட்டர மைண்ட் சைடுல வச்சுக்கிறியா? மெண்டலா ஒரு நிமிசத்தல வயத்தக் கலக்கிட்ட.லவ் பெயிலிரா? ”பேசி நிறுத்தி விட்டு “ மருந்து போதகாரன் மாறி தெரில உன்னப்பாத்தா!”


“ஒயிஃப்.விலகிட்டாங்க.மூணு வருஷமாச்சு.அவங்க லவ்வர் கிட்ட போய்ட்டாங்க”


“இன்ன பீலா உட்றயா..ஒன்னோட மெண்டல் பததி அவங்க கிட்ட கேட்கணும்.உன் போசு தெரியும்.நீ தொட்டாலே ”பீஸ்” போய்டற..அதானே மேட்டரூ” வார்த்தையில் கடுப்பு தெரிந்தது.


மறுத்துச்சொல்ல வேண்டும் என்ற கோபம் வந்தது. அடக்கிக்கொண்டான்.


மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.


“தோ…வறேன் பீட்டரண்ணே…”சொல்லிவிட்டு தொடர்ந்தாள் “உன்னப் பாத்தா ஜெண்டல இருக்கற. நா எதுவும் சொல்லல பீட்டர் அண்ணங்கைல.சத்தம் போடாத ஓடிடு. நாலு கஸ்டமர் வர இடம்.ஒரு கஸ்டமரு வேர வெயிட்டிங்க்”


அவள் மன்னிப்புத் தொனியில் பேசியதில் மனதில் கல்வரம் போய் நிம்மதி ஆயிற்று.


“தேங்கஸ் அ லாட்…மீனா.அகெய்ன் மை அப்பாலஜி”முகத்தை துடைத்தப்படி பேசினான்.


அவனுடைய ஸ்டைலான ஆங்கில உச்சரிப்பில் முகம் பிரகாசம் அடைந்தாள். உடைகளை மொத்தமாக போர்த்தியவாறு கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.அவனும் ஒட்டியவாறு அவளை பின் தொடர்ந்தான்.


”ஒண்ணுல்லீன்னா…பேமிலி மேட்டரு.மெண்டலாகி குழம்பி போய்ட்டுக்கிறான் பார்ட்டி.ரவுடி இல்ல.ஜெண்டலா இருக்கான்”


பீட்டரை பார்க்கப் பயந்து தலைக் குனிந்தபடி வெளியேறி தெரு முனையில் தலை நிமிர்ந்தான்.


திடீரென்று ஏதோ நினைவில் வர ”ஓ…. காட்….! ” என்று தலையில் அடித்துக்கொண்டான்.சின்ன ஹாண்ட் லெதர் பேக் அங்கேயே விட்டு வந்து விட்டான்.அதில் மனைவியின் பட்டுப்புடவையும் சில நகைகளும்.மீனாவிற்கு போட்டுப்பார்த்து அழகுப்பார்க்க. சே! என்னென்னவோ நடந்து விட்டது.”ஓ…செளமியா…ஹவ் கம் ஐ டூ தட்…” திரும்பி ஓடினான்.


பீட்டர்தான் சைட்கேட்டில் இருந்தான்.பிரகாஷ் விஷயத்தைச் சொல்லி பீட்டரை மிரட்சியுடன் பார்த்தான்.


“ஏய்..மருந்து போத இன்னும் போவலயா! இன்னா புடவைன்ற…நகைன்ற..நீ மெண்டெல்ன்னு மீனா சொல்ச்சு.தங்கச்சிகாண்டி வுட்டேன்.இல்லகாட்டி …த்தா குனிய வச்சு குமுறிட்டுப்பேன்.”


ஒற்றை விரலைக் காட்டி மிரட்டினான்.அதற்குள் சத்தம் கேட்டு அடியாட்கள் நாலைந்து பேர் வர ”சாரி….சாரி…மன்னிசுடுங்க” என்று பிரகாஷ் விடுவிடுவென்று மெயின் ரோடில் ஓடி ஒரு சைட் ரோட்டில் திரும்பி பயந்தப்படியே நடந்தான்.


போகும் வழியில் தாங்க முடியாத துக்கமும் வெறும் வயிற்றுப்போதையும் சற்று தலைவலியும் சேர்ந்து வயிற்றைப் பிரட்ட அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு .”.செளமியா.” என்றபடி நடுரோடில் வாந்தி எடுத்தான்.

முற்றும்


கதையின் தலைப்பு: செளமியா மீனா மற்றும் ஒரு புடவை


___________________________________________________________________
உயிரோடை சிறுக‌தைப் போட்டிக்காக எழுதப்பட்டது.அதன் விவரம்

இது க‌விதை சார்ந்த‌ க‌தை எழுதும் போட்டி.
* சுட்டியில் கொடுக்க‌ப் ப‌ட்டிருக்கும் க‌விதைக்கு பொருந்தும் க‌தை எழுத வேண்டும்.
* க‌தைக்கான‌ முற்று பெறாதா மாதிரி க‌தைக‌ள் இந்த‌ சுட்டியில்.

___________________________________________________________________________


21 comments:

 1. செளமியா மீனா மற்றும் ஒரு புடவை

  வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 2. நன்றி பிஸ்கோத்துப்பயல்.

  ReplyDelete
 3. சுஜாதாவின் வாடை அடிப்பது ஒரு கரும்புள்ளி. மற்றபடி கதை ஓகே தான்

  ReplyDelete
 4. Anonymous said...
  // சுஜாதாவின் வாடை அடிப்பது ஒரு கரும்புள்ளி. மற்றபடி கதை ஓகே தான்//
  கருத்துக்கு நன்றி அனானி.சுஜாதாவின் வாடையா?
  ஆச்சரியமாக இருக்கிறது.எனக்கு தெரிந்து சத்தியமாக இல்லை.சென்னைத் தமிழ் உச்சரிப்பு
  இயல்பாக உள்ளது.

  எந்த இடம் என்று சொன்னால் நான் விளக்குவேன்.சொல்ல முடியுமா?

  ReplyDelete
 5. கதை அருமை.
  மீனாவை வர்ணித்திருப்பது ரொம்ப நல்லாருக்கு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. //எவனோ ஒருவன் said..//
  //கதை அருமை.
  மீனாவை வர்ணித்திருப்பது ரொம்ப நல்லாருக்கு//

  நன்றி எவனோ ஒருவன்.

  ReplyDelete
 7. நான் கூட மீனா தான் சௌமியா என்று நினைத்துவிட்டேன்! ஹீரோ மெண்டல்.... சரி சரி அப்படி ஒரு கதை நன் எழுதி பார்க்கிறேன்! ட்விஸ்ட் என்று நகை, துணி விஷயம் எக்செற்றாவா?

  சுஜாதா வாடை கொஞ்சம் கூட இல்லை. அவரின் அணைத்து எழுத்துக்களும் எனக்கு அத்துப்படி!

  ReplyDelete
 8. Vijayashankar said...

  // சரி சரி அப்படி ஒரு கதை நன் எழுதி பார்க்கிறேன்! ட்விஸ்ட் என்று நகை, துணி விஷயம் எக்செற்றாவா?//

  எழுதுங்க.படிச்சு கருத்துச்சொல்றேன்.தகவல் தெரிவிக்கவும்.

  //சுஜாதா வாடை கொஞ்சம் கூட இல்லை. அவரின் அணைத்து எழுத்துக்களும் எனக்கு அத்துப்படி//

  நன்றி விஜய் சங்கர்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  July 1, 2009 5:46 AM

  ReplyDelete
 9. தலைவா நீங்க எல்லா நல்ல கதையும் படிச்சிட்டு விமர்சனம் செய்யுவிங்க ...

  நம்ம கதைய படிச்சிட்டு உங்க கருத்தை நடுநிலமையோடு உண்மைய சொல்லுங்க

  காதலுக்கு கண்ணில்லை ? - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.

  ReplyDelete
 10. கதையைப் படிச்சுட்டு ‘அதிஷா’ எழுதினதோன்னு யோசிச்சேன்... முடிவில சுட்டியில் கொடுத்த குட்டிக் கவிதையைப் படித்தபின் விளங்கியது சார்...
  கதை நல்லா இருந்தது. உரையாடல்கள் இயல்பு..
  அது ஏன் தலைப்பு கடைசியில் சார்...?

  ReplyDelete
 11. Suresh said...
  //தலைவா நீங்க எல்லா நல்ல கதையும் படிச்சிட்டு விமர்சனம் செய்யுவிங்க//

  ஒரு அனுபவத்திற்காகப் படிப்பது சில கதைகளை.எல்லாம் அல்ல.மூடும் பொறுத்தது.

  //நம்ம கதைய படிச்சிட்டு உங்க கருத்தை நடுநிலமையோடு உண்மைய சொல்லுங்க//

  சொல்கிறேன்.பொறுங்கள்.

  ReplyDelete
 12. தமிழ்ப்பறவை said...
  //கதையைப் படிச்சுட்டு ‘அதிஷா’ எழுதினதோன்னு யோசிச்சேன்..//

  அதிஷான்னாலே “ஆய்” கதை என்று ஆ(ய்)கிப்போய்விட்டது.

  //அது ஏன் தலைப்பு கடைசியில் சார்//
  தலைப்பில் போட்டிக் கதை என்றால்தான் பதிவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள் என்று என் எண்ணம்.

  //முடிவில சுட்டியில் கொடுத்த குட்டிக் கவிதையைப் படித்தபின் விளங்கியது சார்.//

  முதலில் சுட்டிக் கொடுத்தால் படிப்பவர் சுட்டிக்குப் போய் கவனம் சிதறி வேறொங்கோப் போய்விடுவார்.

  //கதை நல்லா இருந்தது. உரையாடல்கள் இயல்பு.//

  நன்றி.

  தமிழ்ப்பறவை ஒரு வேண்டுகோள்.ஒரு அனானி
  //சுஜாதாவின் வாடை அடிப்பது ஒரு கரும்புள்ளி// என்கிறார்.

  அடிக்கிறதா? நடுநிலைமையுடன் சொல்லவும்.எடுத்துக்காட்டுடன் சொல்லவும்.(வார்த்தை/சொற்கள் ஏதாவது)

  அனானியைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்.
  ஏன்? நமக்கு மேட்டர் முக்கியம். அடுத்து Customer is always right என்ற கொள்கை உடையவன்.

  ReplyDelete
 13. இது எனது படைப்பு, உயிரோடை போட்டிக்கு.

  கவிதைக்கு ஒரு கதை

  உங்க கருத்தை சொல்லுங்க!

  --
  அன்புடன்
  விஜயஷங்கர்
  பெங்களூரு
  http://www.vijayashankar.in

  ReplyDelete
 14. என்ன ஒரு டைரக்க்ஷன் டச்சு , பச்சையில் எழுத்து !!!!!!!!!!.

  கதை நல்ல இருந்துச்சு ...வாழ்த்துக்கள், புஷ்பா தங்கதுரை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு... எனக்கு தெரிந்த வரை யாரையும் மாதிரி இருக்கறாப்பல தெரியல.

  ReplyDelete
 15. அது என்னது உங்க கதாநாயகியின் பெயர் செளமியா ! ஒரு காவ்யா, ரம்யா இப்படி இருக்க கூடாதா என்ன.. :P

  நல்லா கதை விடறீங்க ! கதாநாயகியின் (side heroine ?? ) பெயரைத் தவிர மற்றதெல்லாம் ரசிக்க முடிந்தது :D

  ReplyDelete
 16. ரவி சார்.. வேண்டுகோளுக்கு நன்றி...
  ஆனால் நான் சுஜாதாவை அதிகம் படித்ததில்லை.’கற்றதும் பெற்றதும்’,பதவிக்காக,விக்ரம் மற்றும் 10,15 கதைகள் அவ்வளவே...
  எனக்குத்தெரிந்த வரை இக்கதையில் சுஜாதா இல்லை.
  ஆங்காங்கு அசால்ட்டாக வந்து விழுந்த ஆங்கிலப்பதங்கள் அனானி சாரின் கண்களை உறுத்தி இருக்கலாம்.
  மன்னிக்கவும்..என் சிற்றறிவு விமர்சனம் இவ்வளவுதான்...
  என் கதையில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.
  அதில் நான் உபயோகப் படுத்திய ஓரிரு வரிகள் ,சுஜாதாவினுடையது. அப்படியே எடுத்தாண்டேன்.
  “முதல் நாள் நரகம்,அடுத்த நாள் உபநரகம்”-(சிகரெட் பிடிப்பவர்கள் அதை நிறுத்துவதற்கு அறிவுறுத்திய கட்டுரையில் சொல்லி இருப்பார். நான் அதை அவன் மனைவியைப் பிரிந்து வேலைக்குச் சென்ற சூழலில் பயன்படுத்தினேன்).

  ReplyDelete
 17. அது ஒரு கனாக் காலம் said...

  // கதை நல்ல இருந்துச்சு//

  நன்றி சுந்தர்.

  ReplyDelete
 18. Sowmya said...

  வாங்க செள்மியா.திடீர் திடீர்னு வறீங்க.

  //அது என்னது உங்க கதாநாயகியின் பெயர் செளமியா ! ஒரு காவ்யா, ரம்யா இப்படி இருக்க கூடாதா என்ன.. :P//

  ஹோம்லியா இருக்கு.அதான்.

  //நல்லா கதை விடறீங்க ! கதாநாயகியின் (side heroine ?? ) பெயரைத் தவிர மற்றதெல்லாம் ரசிக்க முடிந்தது :D//

  கதைக்கு ஒரு அவுட் லைன் கொடுத்தாங்க.அத வச்சு கதை விட்டேன்.

  நன்றி செளமியா.

  ReplyDelete
 19. //எனக்குத்தெரிந்த வரை இக்கதையில் சுஜாதா இல்லை//

  நன்றி தமிழ் பறவை

  ReplyDelete
 20. கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனாலும் சொல்லிய கதை மட்டுமே உள்ளது.. சொல்லாத கதையின் தாக்கம் மிஸ்ஸிங்...

  ReplyDelete
 21. PPattian : புபட்டியன் said...

  //கதை எனக்கு பிடித்திருந்தது. ஆனாலும் சொல்லிய கதை மட்டுமே உள்ளது.. சொல்லாத கதையின் தாக்கம் மிஸ்ஸிங்...//

  கருத்துக்கு நன்றி.ஏனோ எனக்கு இந்த கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.ஏதோ ஒரு அவசரத்தில் எழுதினேன்.மறு வாசிப்பில் ஒட்டவில்லை.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!