இப்போதெல்லாம், எல்லா தமிழ் மற்ற மொழி இசைச் சேனல்களில் கிழே ஆங்கில எழுத்துக்கள் ஒடிக்கொண்டிருப்பதைப்(scrolling) பார்க்கலாம்.அது நேயர்கள் தங்கள் காதலன் அல்லது காதலிக்கு “I love you(டா)” அல்லது “ஹாப்பி பர்த் டே” அல்லது “This song is for my love"என்று புறா காலில் கட்டி தூது விடுகிற மாதிரி SMSஇல் இசைச் சேனல்களுக்கு அனுப்புகிறார்கள்.
அது கன்வேயர் பெல்ட் மாதிரி வித வித கலரில் காதல் சின்னங்களோடு ஓடுகிறது.இதையெல்லாம் முகம் தெரிந்த/தெரியாத காதலர்/காதலிக்கும் அனானியால்/உண்மை காதலர்களால் அனுப்ப படுகிறது.சம்பந்தப்பட்டர்கள் உறுமீன் கொக்கு மாதிரி இதற்காகக் காத்திருந்து(கொத்தி) படித்து விட்டு ”ஓகேடா(டீ)”பதில் தூது விடுவார்களா என்பது தெரியவில்லை.
இதைப் பார்த்தவுடன் வேறு ஞாபகம் வந்தது.இதன் வேறு வடிவம் கிழ்வருவது.டெக்னாலஜி இல்லாமல்!
ரூபாய் நோட்டு/கோவில்/மசூதி/சர்ச் மற்றும் புராதனச்சின்னம்/சுற்றுலா தலங்கள் /டாய்லெட்டுகள்/மலைப்பாறைகள்/தூண்கள் /காலேஜ் ஹாஸ்டல்/கல்லூரி சுவர்கள்/திருப்பதி மலை ஏறும் பாதை /குதுப்மினார்/தாஜ்மகால் /நவக்கிரகம்என்று கண்டமேனிக்கு கிறுக்கி இருக்கும்.
ஏன் சில பேர் உள்ளங்கையில் கூட பேனாவால் கிறுக்குவார்கள்.அடுத்து லிப்ட் உள்ளே இருக்கும் கிறுக்கல்கள்.லிப்ட் கிறுக்கல்கள் அந்த அலுவலகம்/பிளாட் சம்பந்தப்பட்ட பெண்கள்/ஆண்கள்.ஆனாலும் அலுவலக லிப்ட் கிறுக்கல்கள் ரொம்ப மோசம்.இதில் பெயிண்டுகளை உதிர்த்து செதுக்குவார்கள் .ரூம் போட்டு யோசிப்பார்கள் போல்.கொரியர்களுக்கும் காதல் வரும்.
இந்த ரூபாய நோட்டு காதல் கிறுக்கல் ரொம்ப சுவராசியமானது.எழுதி சர்குலேஷனில் போய் உங்கள் கையில் மறுபடியும் வந்தால் காதல் ஜெயிக்கும்.அப்போது உங்கள் வயது 108 ஆகி இருக்கும்.
இந்த மாதிரி கிறுக்கல்களை ஆங்கிலத்தில் graffiti என்று சொல்வார்கள். இது ஒரு கலை.ஆனால் இந்த கிறுக்கல்கள் கொலை.இதில் சத்தியமாக சேராது.புராதன சின்னங்களை அவமானப்படுத்துவது/அசிங்கப்படுத்துவது.சுற்றுலா பயணிகளின் முகம் சுளிக்க வைக்கிறது.
கிறுக்குபவர்கள் முக்கால்வாசி இளம் வயதினர்கள்தாம்.கிறுக்கல்கள் எப்படிப்பட்டது.
- முக்கால்வாசி காதல்.காதலர்கள் பெயர் நடுவில் மன்மதன் விடும் பானம் இதயத்தைத் துளைப்பது போல்.”என்றும் இணைப்பிரியாத” “மறக்க மாட்டேன்”. ஈர சாக்பீசால்.
- "நான் இன்று வந்தேன்" என்று தேதியுடன் நண்பர்கள் பெயர் செதுக்கியிருப்பார்கள்.
- சில ஓவியங்கள/பெண் அல்லது ஆண் குறிகள்
- நடிகைகளை காதலித்து எழுதும் வாசகங்கள்
- ஆபாச/வக்கிர எழுத்துக்கள்.படங்களும் உண்டு.இதில் incestuous எழுத்தும் அதிகம்.ரத்தசம்பந்தமான உறவுகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வக்கிர எழுத்துக்கள்.இது மறைவிட சுவர்களில் அதிகம்.
- வாழ்க/வாழ்த்துகிறேன் போன்ற எழுத்துக்கள்
- செல்/போன் நம்பர்கள் கொடுத்து வேறு விஷயத்திற்கு அழைப்பது
- உங்கள் ஓட்டு
- குட்ஸ் வண்டியின் பின்னால்(பாஞ்சாலி-பரஞ்சோதி)
- சினிமா டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் குகை கிறுக்கல்கள்
இந்த கிறுக்கல்களுக்கு என்ன அடிப்படைக் காரணம்.
- உலகத்திற்கு காட்டுதல் தாங்கள் காதலர்கள் என்பதை.
- இதில் 98% ஒரு தலைக் காதல்தான்.கிடைக்காவிட்டாலும் காவியமாக்குவது
- காதலியை ரிசர்வ் செய்து வைப்பது யாரும் முந்திவிடாமல்
- கல்லூரி மற்றும் கல்லூரி ஹாஸ்டல்களில் அவர்கள் பெயர் அழிய சின்னமாக இருக்க வேண்டும்.பின்னாளில் பார்த்தால் காவியமாகும்.
- வக்கிரத்திற்கு ஒரு வடிகால்
- புராதனசின்னத்தில் எழுதி தாஙகளும் சரித்திர மதிப்புப் பெறுவது
- கோவில் நவக்கிரக கிறுக்கல், சுற்றும் எண்ணிக்கை மறக்காமல் இருக்க
- புராதன சின்னங்களின் மேன்மை அறியாமை
- சுற்றுலா பயணிகள் பார்த்து அனுதாபப்படுவார்கள்/கவிதை எழுதுவார்கள்
- அடுத்தவர் மதச்சின்னங்களை அவமானப்படுத்துவது
- நேரில் (சொல்ல பயம்அல்லது status/ஜாதி தடை)சொன்னால் தோல்வி அடைய வாய்ப்புக்கள் அதிகம்.கல்லிலேயே காவியமாக்கி உருகுதல்
- ”மீ பஸ்ட்” காதல்
- சேடிசம்(sadism)
ரவி சார் வக்கிரர்களின் கிறுக்கல்களை நன்றாக அவர்களின் சாடிசத்தை எடுத்துரைத்தீர்கள்..
ReplyDeleteதிருந்துவார்களா?....சேடிசவாதிகள்
பிரியமுடன்.........வசந்த்
ReplyDeleteவருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.
பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
ReplyDeleteவாங்க சார்! கருத்துக்கு நன்றி.
நல்லா எழுதி இருக்கீங்க......
ReplyDeleteசேடிஸ்ட் திருந்த சான்ஸ் இல்ல ரவி.......
R.Gopi said...
ReplyDelete/நல்லா எழுதி இருக்கீங்க//
நன்றி கோபி.
கட்டுக்கடங்காத எழுத்தார்வம் கூட காரணமாய் இருக்குமோ ரவி சார்? பஸ்ஸின் இருக்கை பின்னாடி கூட கிறுக்கி வைத்திருக்கிறார்கள்... எனக்கு புதிய பேருந்துகளில் இப்படி கிறுக்கல்களைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கும் இப்படி அசுத்தப்படுத்துகிறார்களே என்று....
ReplyDeletereena said...
ReplyDelete//கட்டுக்கடங்காத எழுத்தார்வம் கூட காரணமாய் இருக்குமோ ரவி சார்? //
புது ஆங்கிள்ள யோசிக்கிறீங்க.இல்ல இவங்க எழுதறது காதலர் பெயர்கள்.
ரயில்களில் கவிதைகளைக்கூட (என அவர்கள் நினைத்துக் கொள்வதை) கிறுக்கி வைத்திருக்கிறார்கள் :)
ReplyDeleteகிறுக்குப் பசங்க :)
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ReplyDelete//ரயில்களில் கவிதைகளைக்கூட (என அவர்கள் நினைத்துக் கொள்வதை) கிறுக்கி வைத்திருக்கிறார்கள் //
நன்றி.
ஒரு நூறு ரூபாய்த் தாளில், ’திருப்பிப் பார்க்காதே’ என்று எழுதியிருந்ததாம். திருப்பிப் பார்த்தால் என்ன எழுதியிருந்தது தெரியுமா?
ReplyDelete‘இப்பத் தாண்டா சொன்னேன் வெண்ண..’
-பரிசலின் தளத்தில் படித்த ஞாபகம்!
பதிவு அருமை!
ஒருமுறை என்னிடம் ரூபாய்தாள் வந்தது. (பணக்கட்டுக்குள்) அதில் ஆபாச வார்த்தைகளை எழுதியிருந்தார்கள். (ஹிந்தியில்) எனக்கு ஹிந்தி படிக்க மட்டுமே தெரியும். அர்த்தம் விளங்கத் தெரியாது. நண்பரிடம் அர்த்தம் கேட்டதும் தெரிந்தது... (என்னன்னு கேட்காதீங்க.)
ReplyDeleteஅரசு கழிவறையில் இந்த அநியாய ஓவியங்களைக் காணலாம். ஒருமுறை கழிவறை வாளியில்கூட எழுதியிருந்தனர்.
நல்ல அலசல்!!
மதன் said...
ReplyDelete//இப்பத் தாண்டா சொன்னேன் வெண்ண//
சூப்பர் தல.மனிதனுக்கு கைத்துறு துறுக்கும் போல.
ஆதவா said...
ReplyDelete// நல்ல அலசல்!!//
கருத்துக்கு நன்றி
உங்களுக்கு ஒரு விருது. நம்ம திண்ணைக்கு வந்து வாங்கிக்கறீங்களா?
ReplyDeleteபள்ளி, கல்லூரி டெஸ்க்குகளில் கவிதை(மாதிரி) எழுதி வைத்திருப்பார்கள். சில சமயம் நகச்சுவையாகக் கூட இருக்கும்.
ReplyDelete//பள்ளி, கல்லூரி டெஸ்க்குகளில் கவிதை(மாதிரி) எழுதி வைத்திருப்பார்கள். சில சமயம் நகச்சுவையாகக் கூட இருக்கும்.//
ReplyDeleteஅண்ணாச்சிக்கு ஃபிளாஷ் பேக் ஞாபகத்துல வந்துடுச்சு! :)
முன்னாடி கடிதம் எழுதுதல் போல் வலையுலகத்தில் எதோ சிற்குலேட் ஆச்சே , அப்பொழுது லக்கி இத்தகைய மனோபாவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கதை எழுதி இருந்தார்.
ReplyDeleteரவி சார் , இது தேக்கி வைக்கும் வக்கிரத்தால் நடக்கும் குரூரம். எங்கள் பள்ளி விடுதியில் அனைத்து டாய்லட்களிலும் மிக வக்கிரமான கதைகளுடன் படமும் இருக்கும். இதற்கென்றே அந்த குறிப்பிட்ட டாய்லட்டை தேர்வு செய்து உள்ளே போகும் மாணவர்களையும் பார்த்திருக்கிறேன். தன்னை காதலிக்க முடியாது என்று சொன்னா காரணத்திற்காக ஒரு பெண்ணின் செல்லிடைப்பேசி எண்ணை " கால் கேர்ள் " என்று இணையத்திலும் சுவர்களிலும் எழுதியவர்களை தெரியும். ஒரு வித மன நோய் !
ஆழமான பதிவு. வாழ்த்துகள் ரவி
ஆமாங்க இந்த கொண்ணியானுங்க தொல்லை தாங்க முடியல.
ReplyDeleteமன நோயாளிகளுக்கு ஒருவிதமான வடிகால் என்று நினைக்கிறேன்..
ReplyDelete:-(
Mahesh said...
ReplyDelete//உங்களுக்கு ஒரு விருது.நம்ம திண்ணைக்கு வந்து வாங்கிக்கறீங்களா//
உங்கள் வலையில் பதில் போட்டு விட்டேன்.
பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி
ReplyDeleteவடகரை வேலன்
நன்றிகள்.
பட்டிக்காட்டான்
ReplyDeleteஊர்சுற்றி
Prakash
நன்றிகள்.
நல்ல பதிவு, நம்முடைய புராதன விஷயங்களின் மதிப்பு நம்ம ஆட்களுக்குத் தெரிய மாட்டேங்குது.
ReplyDeleteஸ்ரீதர் said...
ReplyDelete//நல்ல பதிவு, நம்முடைய புராதன விஷயங்களின் மதிப்பு நம்ம ஆட்களுக்குத் தெரிய மாட்டேங்குது//
நன்றி