Tuesday, June 23, 2009
ரூம் போட்டு திங்கிங் - ஞானக்கதை
மூன்று குறட்டைகளும் ஒரு குழந்தையும்
நிறைய ஆர்டர்கள்.எதிர்பார்க்காத கடன் வசூல்கள்.நினைக்க நினைக்க மறுபடியும் அந்த கலவையான உணர்ச்சி.நடையில் கூட வேகம்.மனதிற்குள் சிரிப்பு.
தப்பு செய்து விட்டேன்.பியர் குடித்துவிட்டு ஏறியிருக்கலாம்..ஆர்டர்,வசூல் போன்ற விஷயங்களைத்தான் வருமா வராதா என்று மனதில் கணக்குப் போட்டப்படி எதிர் நோக்க முடியும். குறட்டை விடுபவர்கள் ஒன்றுக்கு மூன்றாக இரவு வருவார்கள் என்று கணக்குப் போடடு ஏறமுடியுமா?எரிச்சல் தாங்க முடியவில்லை.தூக்கம் வேறு கலைந்து விட்டது.மறுபடியும் ஒரு மாதிரி மகுடி ஊதி சுருதி ஏற்றி தூக்கத்தை வரவழைக்க வேண்டும்.
எழுப்பி சொல்லலாமா? எழுப்பினால் மூன்று பேரையும் எழுப்ப வேண்டுமே.டிடிஆரிடம் சொல்லலாமா?இருக்கும் கோபத்தில் அபாயச் செயினை இழுக்கலாமா என்று கூட இருந்தது.பதில் குறட்டை விட்டு தூங்குவதற்கும் வக்கில்லை.என் தூக்கத்தில் குறட்டைக் கிடையாது.வெறும் தூக்கம்தான். வன்முறை கிடையாது.போலித்தனமாகவும் விடமுடியாது.
நினைத்ததில் ஒன்று கூடச் செய்யவில்லை.தண்ணீர்தான் குடித்தேன்.என்னென்னவோ எண்ணங்கள் அடுக்கடுக்காக சம்பந்தமில்லாமல்.தலை வலிக்க ஆரம்பித்தது.
குழந்தையை மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டேன்.செல்லில் பாட்டு வைத்தேன். “வாழ்க்கை ஓடம் சொல்ல..ஆற்றில் நீரோட்டம் இல்லை..” அவள் அப்படித்தான் படத்தின் பாடலை தபலா பின்னணியில் ஜானகி சோகத்தில் உருகியபடிப்பாடிக்கொண்டிருந்தார்.நடுநீசி உருக்கத்தில் ரெயில் பெட்டிகளும் ஒரு பக்கம் காதால் கேட்டுக்கொண்டே தன் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.
Monday, June 22, 2009
கன் டைம் டெலிவரி சார்! ஞானக் கதை
ஒரு பெரிய தொழிலதிபர் சாகும் தருவாயில் இருந்தார்.குழந்தைப் பருவத்தில் பசி,பட்டினியை அனுபவித்து, முட்டி மோதி,மேடு பள்ளங்களைப் பார்த்து வாழ்க்கையில் முன்னேறியவர். இன்று கோடிகளுக்குச் சொந்தக்காரர்.
அந்த வேளையில் எல்லோரும் போல தன் மகனை அழைத்து தொழிலதிபர் அறிவுரைக் கூறத் தொடங்கினார்.
“மை..டியர் சன்...நான் சொல்வதை கவனமாகக் கேள்.என் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நேர்மை. இரண்டு சமயோசித புத்தி.”
மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நான் யாருக்காவது கரெக்ட் டைம்ல சரக்க டெலிவரி பண்றேண்ணு வாக்குறுதி கொடுத்துட்ட ,இடி, மின்னல், காற்று, புயல் வந்தாலும் அல்லது கம்பெனியே திவால் ஆனாலும் அல்லது வேறு எது வந்தாலும் கஸ்டம்ர்தான் முக்கியம். நான் சொன்ன டைம்ல சரக்க டெலிவரி பண்ணிடுவேன் அதான் நேர்மை. வாக்குறுதிய காப்பத்துவேன்.”
“புரிஞ்சிடுச்சு அப்பா.. அப்படியே செய்கிறேன்...சரி..சமயோசித புத்திஎன்றால் என்ன?
”அவ்வாறு வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருப்பதே”
Sunday, June 21, 2009
Friday, June 19, 2009
குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...
Tuesday, June 16, 2009
ஒரு பெண்ணாக மாறினேன் - கவிதை
பிரபு தேவா...புரியுல மை டியர் பதிவர்கள்!
Friday, June 12, 2009
அனைத்துக்கும் ஆசைப்படு
Wednesday, June 10, 2009
காதலியை ஆர்டர் கொடுத்து செய்! - கவிதை!
Monday, June 8, 2009
சினிமாவில் “டைரக்ஷன்” காட்டுதல்
டைரக்ஷன் காட்டுதல்
ரொம்ப நாள் கழித்து மறுபடியும் "ரயில் பயணங்களில்" படம் (T.ராஜேந்தர்) TV யில் பார்த்தேன்..
நெறைய டைரக்ஷ்ன் காட்டுகிறார்.
அது என்ன ”டைரக்ஷன்” காட்டுவது?
உதாரணம் 1.
சி.கே.சரஸ்வதி (அம்மா) ம்கனிடம்(எஸ்.எஸ்.ஆர்) மருமகளைப்பற்றி (விஜய குமாரி) கோள் மூட்டுகிறார்
டைரக்ஷன்
அப்பொழுது பட்டாசு திரி பற்ற வைக்கப்படும் காட்சி
.உதாரணம்-2
கதா பாத்திரம் யோசித்துகொண்டிருக்கிறார்.
டைரக்ஷன்
சைக்கிள் வீல் (ஸ்டாண்ட் போட்ட ) சுற்ற ஆரம்பிக்கும். யோசிக்கிறார்.
சிறுது நேரம் கழித்து நின்று விடும் . யோசித்து முடித்துவிட்டார்.
உதாரணம் 3
வீட்டின் பெரிய மனிதர் இறந்து விட்டார் .
டைரக்ஷன்
அவர் வீட்டு சுவர் கடிகாரம் நின்று விடும் .(blood related கடிகாரம்?)
உதாரணம் 4
கற்ப்பழிப்பு காட்சி. வில்லன் கதா நாயகியை துரத்துகிரான்
டைரக்ஷன்
புலி மானை துரத்தும்.
இந்த டைரகஷன் காட்டுதலை தி.ராஜேந்தர் உலக திரை படங்களை மிஞ்சும் வகையில் காட்டியிருக்கிறார்"ரயில் பயணங்களில்"
(இந்த டைரக்ஷன் பாலசந்தர்,பாக்கியராஜ்,பாரதிராஜா என்று பலரும்
காட்டியிருக்கிறார்கள்.அது அடுத்த பதிவில்)
சீன் - 1
கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக நிற்கிறாள் . வேறுங்கோ காதலன்
கேமரா ஸூம் ஆகிறது : அங்கே ........ இங்கே என்ற புத்தகம் ரயில்வே புத்தக ஸ்டாலில் .வேறு ஒரு எல்.ஐ.சி வாசகமும் காட்டப்படுகிறது.
விளக்கம்
அங்கே ........ இங்கே என்ற புத்தகம் = இவள் இங்கே, அவன் அங்கே
மறுபடியும் கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக படபடப்புடன்
கேமரா ஸூம் ஆகிறது : பிளாட்பாரத்தில் கிரிக் கிரிக் பொறிகள் யாரோ "வெல்ட்" செய்துகொண்டிருக்கிறார்கள் .
விளக்கம்
கிரிக் கிரிக் பொறிகள் = கதாநாயகியின் பட பட பட பட பட பட படப்பு
சீன் - 3
கதைநாயகி (திருமணம் ஆன சில நாள் பிறகு ) காரில் வரும்போது , எதிர் சைடில் பழைய காதலன் காரில் வருகிறான் கண்கள் நோக்குகின்றன .கலங்குகின்றன
கேமரா ஸூம் ஆகிறது :: "நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் மாட்டுக்காரன் வாசிக்கிறான் நட்ட நடு ரோட்டில்.
அவர் பையன், அசிஸ் டென்ட், நலந்தானா பாட்டு, பட படக்கும் வெயிலில்,
பெசன்ட் நகரில் எல்லாம் எப்படிஒரே நேரத்தில்.
(இதுதான் butter fly effect ஆ? ) அய்யோ...தாஙக முடியலடா சாமி!
"நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் =
முடியாத சிட்ச்சுவேஷன்) பேசுகிறது.
2. தில்லானா மோகனாம்பாள் சிச்சுவேஷன் வந்து விடுகிறது
சீன் - 4
கல்யாண ஏற்பாடு நடக்க ஆரம்பித்துவிடுகிறது
அவசரமாக காதலனோடு பேச போனில் அழைக்கிறாள். . வேலைக்காரன்தான் பேசுகிறான் .ஏமாற்றம் அடைகிறாள் .
கேமரா ஸூம் ஆகிறது:
அந்த வீட்டில் டைனிங் டேபிளில் , ஒரு பையன் ஒரு சாசெரை (டீ) விரிசில் விட்டு உடைக்கிறான்
விளக்கம்:
சாசெரை (டீ) விரிசில் = அவர்கள் காதலில் விரிசல்.
கதைநாயகி திருமண பத்திரிக்கை கொடுக்க, பழைய காதலன் வீட்டிற்கு வருகிறாள்
க.நா.: "உங்க பேரு N..வசந்த் ஆ?
ப.கா. "ஆமாம் N..வசந்த் .........என் வசந்த்
க.நா: “என் வசந்த் ஆ ?” சோகமாகிறாள்.
ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் வசந்துக்கும் உள்ள புள்ளியில் விழுந்து புள்ளி அழிகிறது . Nன்னும் வசந்தும் சேர்க்கிறது
விளக்கம்:
ஒரு துளி கண்ணீர் 90 டிகிரியில் Nக்கும் = (துக்கம் நெஞ்சை அடைப்பதால் விளக்கம் எழுதமுடியவில்லை.)
. கடைசியில் பழைய காதலன், அவள். இருவரும் இறந்துவிடுகிறார்கள் .பிணங்கள் அருகருகே சற்று இடைவெளி விட்டு PARALELL ஆக .
கேமரா ஸூம் ஆகிறது ::
அவர்கள் பிணத்தின் மேல் , தண்டவாளம் ,அவர்கள் --இருவர் ,
அவர்கள் இருவர்-- தண்டவாளம் , என்று மாறி மாறி .தண்டவாளம் சீன் ஓவர் லேப் செய்யப்படுகிறது.....
அது மாதிரி இவர்கள் காதலும் ".((பின்னணியில் குரல்)
விளக்கம்:
தண்டவாளம் = அவர்கள் காதல்
_______________XXXX___________________
என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு போன் செய்து கேட்டேன் , படம் பார்த்தியா என்று?
'ம்... பார்த்தேன் . சூப்பர் டைரக்ஷ்ன் டா !
_______________XXXX___________________
கேமரா ஸூம் ஆகிறது :
Arnold Schwarzenegger (Terminator XI) டெலிபோன் பூத்தில் .டெலிபோன் புக்கை புரட்டுகிறார் . O….P…….Q……R… பிறகு RA……...கண்கள் சிவக்க உற்று பார்க்கிறார் .மிலிடரி பைக்கில் விர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் பறந்து ஒரு வீட்டின் முன் நிற்கிறார் .காலிங் பெல் அடிக்கிறார் . மிஷன் கன்னை கைகளில் ஏந்தி “படக் கிரிசிக்” என்று trigger சரி செய்து கொள்கிறார் . கதவு திறக்கிறது .
Rajalakshmi ? Ravishankar ? Rajender ?
முற்றும்