Tuesday, March 10, 2009

”அவர்கள் ”-ஜானகி, எம்.எஸ்.வி, கே.பாலச்சந்தர்,

"காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி" என்ற பாடல் எம்.எஸ்.வீ யின் இசையில் ஒரு மைல் கல். மாஸ்டர் பீஸ். படம் “அவர்கள்” .வருடம் 1977.டைரக் ஷன் கே.பாலசந்தர்.இசை எம்.எஸ்.வீ இயற்றியவர் கண்ணதாசன்.

எஸ்.ஜானகி+கண்ணதாசன் +எம்.எஸ்.வீ சேர்ந்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.மூன்றும் பொருந்தி வருவது அபூர்வம்-(”ராத்திரியில் பூத்திருக்கும் “ பாட்டு ஒரு இனிமையான அர்த்தம் செரிந்த பாட்டு - ஆனால் காட்சி.கொடுமை? கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு  aerobics பண்ணுவார்கள்). 

ஒரு பெண்ணின் கரைப் புரண்டோடும் சுதந்திர உணர்வைச் சொல்லும்   பாடல்.கண்ணதாசன் எழுத்தில் வடித்ததை , ஜானகி தன் இனிய குரலால் ஒரு பெண்மையான ஹம்மிங்கில்,  கரை புரண்டு பிரவாகம் எடுத்து ஒட வைப்பார். லோகநாதன் (கேமிரா) துண்டு துண்டான விஷுவல்ஸ்ஸில் அதை கருப்பு வெள்ளையில் தீட்டியிருப்பார். மற்றொரு பக்கம் எம்.எஸ்.வீ யின் டொட்டுங்கு......டொட்டுங்டு என்ற குமுறல்..அட்டகாசம். சுஜாதா வாழ்ந்திருப்பார்.. 

முதல் மார்க் ஜானகிக்குதான்.சுசிலா பாடியிருந்தால் இந்த உணர்வு இருக்குமா? சந்தேகம்தான்.இந்த ஹை பிட்ச் சுசிலாவுக்கு வராது என்றுதான் ஜானகி பாடினார்.ஒரு இனிமையான கீச்சுத்தனம்அந்த வித விதமான ஹம்மிங் பட்டுப் புடவை சரிகை போல் அழகுப் படுத்திக் கொண்டே வரும்.(”தம் தன்னம் தம் தனனம்” பாட்டில் விடாமல் ஹ்ம்மிங் அழகு படுத்துவது போல்.)

ஒரு இடத்தில் ஒருஅரை செகண்ட் இசை நின்று,ஜானகி + chrous மட்டும் ”சரி க ரிசரிச ..சரி க ரிச ரிச  .சரி க ரிசரிச“ என்று ஆரம்பிப்பார். சூப்பர்.இனிமை + அழகு+ரம்யம். 

இந்த பாடல் ஒரு கஷ்டமான கம்போஸிங் என்று சொல்லலாம்.இது மாதிரி வித்தியாசமான படங்கள்
கதைகள்,காட்சி அமைப்புகள் இருந்தால்தான் இசையமைப்பாளரின் திறமை வெளிப்படும்.


நான் சின்ன வயதில் இந்த படம் பார்க்கும் போது கதை சுத்தமாகப் புரியவில்லை.ஆனால் இந்தப் பாடல் மனதில் பதிந்து விட்டது. காரணம்? இனிமையான இசை.



பாடல் வரிகள்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்னக் கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன் 
சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப் பேசி கிள்ளை ஆனேன் 
கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
பாட்டை ரசிக்க :- (தியேட்டர் அல்லது ஒரு நல்ல DVD effect இந்த you tube'ல் கிடைக்கவில்லை.)

14 comments:

  1. //ஒரு இடத்தில் இசை நின்று ஜானகி மட்டும் “சரி ..கம “ என்று ஆரம்பிப்பார். சூப்பர்.இனிமை + அழகு+ரம்யம். இது ஒரு கஷ்டமான கம்போஸிங் என்று சொல்லலாம்.//

    இது எந்த இடத்தில் வருகிறது

    ReplyDelete
  2. உங்கள்
    கருத்துக்கு நன்றி ஸ்ரீசரண்.நீங்கள் ஜானகி ரசிகர் என்று உங்கள் வலையில் பார்த்து அறிந்தேன். நானும்தான்.

    //ஒரு இடத்தில் இசை நின்று ஜானகி மட்டும் “சரி ..கம “ என்று ஆரம்பிப்பார்//

    (முதல் மூன்று வரிகள்)பல்லவி முடிந்து,interlude இசை ஆரம்பிக்கும்.இதில்தான்
    ஒரு அரை செகண்ட் இசை நின்று “சரி..க..ரிசரிச ரிச..சரி ..க..ரிசரிசரிச..” என்று வரும்.

    (நான “சரி..கம..என்று சொல்லி விட்டேன்)

    //கஷ்டமான கம்போஸிங்//

    இது முழு பாட்டைப் பற்றிச் சொன்னது.அந்த இடம் அல்ல.

    ReplyDelete
  3. அருமையான பதிவு தல, காற்றுக்கென்ன வேலை என் ஆல் டைம் பேவரிட்

    ReplyDelete
  4. நன்றி கானா பிரபா. இது MSVன் வித்தியாசமான
    முயற்சி.

    ReplyDelete
  5. தல அப்ப பொறக்கவே இல்ல. ஜானகி குரல் நல்ல இருக்கு.

    ReplyDelete
  6. காற்றுக்கென்ன வேலி பாடல் மிக அருமையான பாடல். எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்த பாடல் என்பதே உண்மை.

    // சுசிலா பாடியிருந்தால் இந்த உணர்வு இருக்குமா? சந்தேகம்தான்.//

    இந்த ஒப்பீடு சரியானதல்ல என்பதே என் கருத்து. ஒரு பாடலுக்குப் பொருத்தமான பாடகியைத் தேர்வு செய்யும் உரிமை இசையமைப்பாளர்களுக்கு உண்டு. பி.சுசீலா பாடலைப் பாராட்டிச் சொல்லும் பொழுது... இந்தப் பாடலை ஜானகி பாடினால் இந்த உணர்வு இருக்குமா என்பது சந்தேகம் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து.

    // இந்த ஹை பிட்ச் சுசிலாவுக்கு வராது என்றுதான் ஜானகி பாடினார். //

    இதைச் சொன்னது யார்? எப்பொழுது? சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்று இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பாடித் தேசிய விருதும் வாங்கி விட்டார்.

    இதெல்லாம் இருக்க. இந்தப் பாடலை எஸ்.ஜானகி சிறப்பாகப் பாடியிருக்கிறார் என்று சொல்லிப் பாராட்ட எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

    ReplyDelete
  7. உங்கள் கருத்துக்கு நன்றி ராகவன்.என்னுடைய ஓப்பீட்டை நீங்கள் ஏற்பதும் மறுப்பதும் உங்களுடைய விருப்பம்.இவர்கள் இரண்டு பேருக்கும் நான் தீவிர ரசிகன்.இரண்டு பேரையும் ஒரளவுக்கு தீவிரமாக கேட்ட அனுபவத்தில் சில
    வேறுபாடுகள் தெரிகிறது.உள் உணர்வு சம்பந்தப்பட்டது. drilled down listeningல் கண்டுப்பிடிக்கலாம்.

    “சிங்கர வேலனே சீதா” என்ற பாடல் சுசீலா இத்தனை சிறப்பாகப் பாடியிருப்பாரா?ஜானகிக்கு shrillness,highpitch,வசீகரம்(sexy?)அல்லது கவர்ச்சி,hindustani type பாடல்கள் பொருந்தி வருகிறது.


    சுசிலாவிற்க்கு ரொம்பப் பொருத்தமானது ஒரு வித homliness.அடுத்து இனிமை.கீச்சுத்தனம்,பிசிறு இல்லாமை.high pitch இல்லாமை.

    club dance பாடல்கள் இவர் பாடுவதில்லை.ஜானகியோ அல்லது LR.ஈஸ்வரி or அஞ்சலி.பாடுவார்கள்.

    கடைசியாக...

    இருவருக்கும் பேச்சுத் குரல் கொடுமை.இனிமை இல்லை.தெலுங்கு வாடை. ஜானகி
    பேச்சு குரல் தாங்கமுடியாது.

    இனிமையாக பாடடு குரலை கொடுத்த இறைவன்
    ஏன் பேச்சு குரல் சரியில்லை.அடிக்கடி யோசிப்பதுண்டு.

    நன்றி

    ReplyDelete
  8. நன்றி ஆதித்யா!

    ReplyDelete
  9. ரவி,

    அருமையான பதிவு. அந்தப் பாடலை பார்த்த ஒரு உணர்வு உங்கள் எழுத்தில்.

    (குணா கமல் சொல்றா மாதிரி) ஓ..பாட்டை எழுத்தாவே எழுதிட்டியா..அப்ப நானும்...

    ReplyDelete
  10. நன்றி மணல் கயிறு.

    ReplyDelete
  11. அருமையான பாடல்...ஒரு முறை கானாபிரபா நேயர் விருப்பத்தில் இந்தப்பாடல் கேட்டிருந்தேன்..ஜானகின்னா ஜானகிதான்..

    ReplyDelete
  12. // சுசிலா பாடியிருந்தால் இந்த உணர்வு இருக்குமா? சந்தேகம்தான்.//

    Very well said !! :) Nice post

    Sorry for being late !

    ReplyDelete
  13. நன்றி செளமியா.

    ReplyDelete
  14. இந்த பாடலை பற்றி மேலும் தகவல் இருந்தால் தரவும்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!