Tuesday, May 4, 2010

பில்ட் அப் இல்லாத சூப்பர் ஸ்டார்

அந்த காலத்து சூப்பர் ஸ்டார் தியாகராஜா பாகவதரின் நூற்றாண்டு விழா இப்போது நடக்கும் வேளையில் சில எண்ணங்கள்.ஆனால் பதிவு இவரைப் பற்றி அல்ல.

தமிழ்ப் படங்களின் தயாரிப்பு செலவு கூடி விட்டது என்பதுதான்.
 
சூப்பர் ஸ்டார் பாகவதர் திருநீலகண்டனை(சிவனை) நினைத்து மனமுருகி ”நீல கண்டா...நீல கண்டா...”ஹம்சா நந்தி ராகத்தில் பாடுகிறார். மேல் சட்டை கூட இல்லாமல்.அதுவும் பிளாக்  அண்ட் வெயிட்டில்.தன் சொந்த குரலில்.

கேமரா இவர் மற்றும் நடராஜரின் கர்ப்பகிரகம் இரண்டும்தான் மாறி மாறி  காட்டப்படுகிறது.பக்தர்களும் மேல் சட்டைஇல்லாமல் இவர் பாட்டை மனம் உருகி ரசிக்கிறார்கள்.

எந்த வித ”பில்ட் அப்”பும் கிடையாது.மொத்தபடமுமே 35 ரூபாய்தான் செலவு.



ஆனால் இன்றைய சூப்பர் ஸ்டார் அதே சிவனை (அருணாசலரை)  எவ்வளவு பிரம்மாண்டமாக கும்பிடுகிறார்.ஏன் தயாரிப்பு செலவு கூடாது?அதுவும் அருணாசலரேயே காட்டும்போது “பில்ட அப்” கொடுத்துதான் காட்டுகிறார்கள்.

இதையெல்லாம் நினைக்கும்போது பாகவதர்  பாட்டு ஒன்று ஞாபகம் வருகிறது. “பூமியில் மானிட ஜன்மமடைந்துமோர் புண்ணியம் இன்றி”



தயாரிப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்களா?


பாகவதர் பாட்டு் -- படம் (திருநீலகண்டர்)

12 comments:

  1. இம்ம். என்ன செய்யறது ரவி

    ReplyDelete
  2. சம்பந்தப்பட்டவங்க யோசிப்பாய்ங்களா?

    ReplyDelete
  3. inniku ellathukum oru adambaram tevaya irukku

    ReplyDelete
  4. பூமியின் மானிட ஜென்மம்... ;-) நல்லபதிவு

    ReplyDelete
  5. இதுல நம்ம தப்பும் இருக்கு சார். முள்ளும் மலரும் தனக்கு ரொம்ப பிடிச்சதா ரஜினியே சொல்லி இருக்காரு. அவரு இந்த மாதிரி 35 ருபாய் செலவுள்ள படத்துல நடிச்ச நாம பாப்போமா.அவரு எந்த படத்துல நடிக்கனும்னு நாம தான தீர்மானம் பண்றோம்.

    ReplyDelete
  6. ஆஹா! பின்னூட்டம் இட்டவர்களே...! ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டீர்களா?

    இதெல்லாம் நடக்கிற காரியமா?
    இதுவும் 2010ல.அது அந்தக் காலம்.

    காமராஜ் முதலமைச்சரா இருந்தப்போ
    கோடம்பாக்கம் ஸ்டேஷன் இறங்கி ரிக்‌ஷாவில வீட்டுக்கு வருவாராம்.

    இப்போ?

    சும்மா ஒரு காமெடிக்காக
    எழுதப்பட்டது.
    சிரிங்கம்மா! சிரிங்கப்பா!

    ReplyDelete
  7. //இதெல்லாம் நடக்கிற காரியமா?
    இதுவும் 2010ல.அது அந்தக் காலம்.//

    அதுதான்..அதேதான்..

    ReplyDelete
  8. //காமராஜ் முதலமைச்சரா இருந்தப்போ
    கோடம்பாக்கம் ஸ்டேஷன் இறங்கி ரிக்‌ஷாவில வீட்டுக்கு வருவாராம்.//

    அப்போ வளர்ச்சி நிதிய செலவு செஞ்ச மிச்சத்துல அமைச்சர்கள் வீடு கட்டிகிட்டாங்க. ஆனா இப்போ தனக்கு வீடு கட்டினதுபோகதான தொகுதிக்கே அனுப்புறாங்க. என்ன கொடும சார் இது.......! :-)

    ReplyDelete
  9. // ரெண்டு said...
    இதுல நம்ம தப்பும் இருக்கு சார். முள்ளும் மலரும் தனக்கு ரொம்ப பிடிச்சதா ரஜினியே சொல்லி இருக்காரு. அவரு இந்த மாதிரி 35 ருபாய் செலவுள்ள படத்துல நடிச்ச நாம பாப்போமா.அவரு எந்த படத்துல நடிக்கனும்னு நாம தான தீர்மானம் பண்றோம்.//

    வழிமொழிகிறேன்
    மற்றொண்டு
    அந்த சூப்பர்ஸ்டார்யிடம் இல்லாத குணம்
    எங்க சூப்பர்ஸ்டார்யிடம் உண்டு

    //ஆஹா! பின்னூட்டம் இட்டவர்களே...! ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டீர்களா?//

    இல்லை
    உண்மையை சொன்னேன்

    ReplyDelete
  10. நன்றி பாசமலர்.

    ReplyDelete
  11. Blogger ரெண்டு said...

    // அப்போ வளர்ச்சி நிதிய செலவு செஞ்ச மிச்சத்துல அமைச்சர்கள் வீடு கட்டிகிட்டாங்க. ஆனா இப்போ தனக்கு வீடு கட்டினதுபோகதான தொகுதிக்கே அனுப்புறாங்க. என்ன கொடும சார் இது.......! :-)//

    சார்!உங்க ஆதங்கம் புரியுது.

    ReplyDelete
  12. Blogger S Maharajan said...

    // வழிமொழிகிறேன் மற்றொண்டு
    அந்த சூப்பர்ஸ்டார்யிடம் இல்லாத குணம் எங்க சூப்பர்ஸ்டார்யிடம் உண்டு//

    ஆமாம். நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!