Tuesday, November 25, 2008

நான், இளையராஜா,அந்தி மழை மற்றும் ஒரு வானவில்

அந்தி மழை பொழிகிறது பாடல் கேட்டுக்கொண்டேஎழுதிய கவிதை(படம்-ராஜா பார்வை)

 

தபலாவை செல்லமாக

தட்டிய தட்டலில்

மேகங்கள் கருகருத்து

வசந்தாக்கள் அல்லது 

ஹம்சாநந்தி தேவதைகள்

கோரஸாக தூறல்கள் தூறி

சட சடவென - பியானோ

ஒத்தல்களில் பலமாக பிடித்த

மழையில் கமலும் மாதவியும்

இணைந்து நனைய

சிறிது நேரம் காதலுடன் - பிறகு

டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆலாபனையில்

மழை ஓய்ந்து வெளி விட

மீண்டும் கமலும் மாதவியும்

காதலில் நனைந்து முடிந்தபின்

மிருதங்கத்தில் தட்டி தட்டி -  ஒரு

மிதமான வெய்யிலில்

மழையை உலர்த்தி மிஞ்சிய

ஓவ்வொறு துளியினூடே......

அந்த கோரஸ் தேவதைகள்

ரீங்காரித்து மீண்டும் வந்து

வயலினில் பியானோவில்  மிதந்த

வண்ண வண்ண குமிழிகளை

ஊதி விட  

கமல் குடை பிடிக்க

தூரத்தில்  வானவில்

 

பின்குறிப்பு:

வசந்தா அல்லது ஹம்சாநந்தி 

ராகத்தில் போடப்பட்ட பாடல்

9 comments:

  1. இந்தப் பாட்டு வரிகள், போட்ட மெட்டு, பாடிய குரல்கள், பின்னணி இசை, எடுத்த விதம் எல்லாமே அந்தி மழை தான். இதை அழகாகச் சொல்லியிருக்கீங்க ரவிசங்கர்

    ReplyDelete
  2. ஒரு பாடலை இன்னொரு கவிமூலம் சிலாகித்திருப்பது புதுமை

    ReplyDelete
  3. கானா பிரபா,


    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையாக அலசி இருக்கிறீர்கள். மீண்டும் பாடலைப் பார்க்கும்போது உங்கள் கவிதை நினைவுக்கு வரும். கட்டாயம்.

    ReplyDelete
  5. வல்லிசிம்ஹன்,

    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  6. வாழ்த்துகள்..அழகான பாடலுக்காய் ஒரு கவிதை..வித்தியாசமான நோக்கு..

    ReplyDelete
  7. நன்றி பாச மலர்,

    முதல் வருகைக்கு.

    ReplyDelete
  8. என்னால் மறக்க முடியாத பாட்டுல இதுவும் ஒண்ணு.

    கடைசி பென்ச் நண்பர்கள், ஹ ஹ ஹா ஹ ஹ ஹான்னு இதுல வர ஹம்மிங் அடிக்கடி பாடுவோம் ;)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!