Saturday, November 22, 2008

சலங்கை ஒலி நாத வினோதங்கள் நடன

சலங்கை ஒலி படத்தில் "நாத வினோதங்கள் நடன" என்ற பாட்டிற்க்கு முன் ஓரு வட மொழி ஸ்லோகம் வரும் . அது :

//வாகர்தாவிவ  ஸ்ம்ப்ருக்தெள வாகர்த ப்ரதிபத்தயே  

ஜகத: பிதரெள வந்தே பார்வ்தீ-பரமேச்வரெள//

எழுதியவர் "காளி தாசன் ". நூல் "ரகு வம்சம்" .இந்த ஸ்லோகம் முதலில் கடவுள் வாழ்த்தாக வருகிறது.

பொருள் : "சொல்லும் பொருளும் போல இணைந்த்திருப்பவர்களும் ,உலகங்களுக்கெல்லாம் தாய்-தந்தை ஆன பார்வதி பரமேஸ்வரர்களை சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன் "

 

இந்த ஸ்லோகத்தை சொல்லும் SPB "பார்வ்தீ-பரமேச்வரெள" என்பதை உச்சரிக்கும் போது " பார்வ்தீ-பரமேச்வரெள என்று சேர்த்து உச்சரிக்காமல் "பார்வதீப" என்று சொல்லி  சற்று இடைவெளி விட்டு  "ரமேச்வரெள" என்பார்.  பிறகு ராஜாவின் வயலின் ரகளையோடு பாட்டு ஆரம்பிக்கும்.

ஏன் பிரித்து உச்சரிக்கிறார்.

பார்வ்தீபரமேச்வரெள  என்றால்  பார்வதியையும் சிவனையும் வணங்குகிறேன். இங்கு இரண்டு பேர்தான் (பார்வதி/சிவன்)

பார்வ்தீப ------ ரமேச்வரெள என்றால் (பார்வ்தீப) பார்வதியின் பதியான பரமேஸ்வரனையும் (ரமேச்வரெள) ரமை(மஹா ல்ஷ்மி)க்கு ஈசவரனாகிய மஹா விஷ்ணுவை குறிக்கும். இங்கு நான்கு  பேர் (பார்வதி&சிவன், மஹாவிஷ்ணு & மஹாலஷ்மி)

 

 Add on’s? அல்லது ஒரே கல்லில் நான்கு மாங்காய்

6 comments:

  1. அட! அப்படியா.இதுவரை கேள்விப்படாத விபரம்.

    ReplyDelete
  2. ரவி,

    கூர்மையான கவனிப்பு. SPB க்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கலாம். ஆன்மிக இலயிப்பு உள்ள ராஜாவும் பாடலை இப்படி மாற்றிப் பாட ஒப்புக்கொண்டு இருக்கலாம். அல்லது நான் நினைக்கிற மாதிரி sheer coincidence ஆகவும் இருக்கலாம். (cynical !)

    Fantastic composition and aesthetic presentation.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. This comment is not for publishing; only a feedback.

    சொல்ல மறந்தது - // ரமை(ம்ஹா ல்ஷ்மி)க்கு ஈசவரனாகியமஹா லஷ்மியையும் குறிக்கும்//

    மகா விஷ்ணுவையும் குறிக்கும் என்று வரவேண்டும்.

    ReplyDelete
  4. அனுஜன்யா,

    ரொம்ப ரொம்ப நன்றி.”மஹா விஷ்ணு” என்று மாற்றி விட்டேன்.

    சில சொல் விளையாட்டில்,சொல்லை பதம் பிரித்தால் நேர் அர்த்தமும், விபரீத அர்த்தமும் வரும்.
    ஆனால் இதில் நேர் அர்த்தமும் மாறாமல்”அதற்கு இன்னும் அழகு
    ”கூடுவது” ஒரு சிறப்பு.

    "இலந்த பயம்" பாட்டில் "எடுத்து பாத்த பயங்களிலே ...இம்மா சைசு பாத்திய" என்று நேர்
    அர்த்தத்தில் கண்ணதாசன் எழுத்தினார். ஆனால் மக்களுக்கு வேறு மாதிரி தொனிக்கப்பட்டு . (காட்சி?)கண்ணதாசன் வருத்தப்பட்டார்.

    ReplyDelete
  5. /
    வடுவூர் குமார் said...

    அட! அப்படியா.இதுவரை கேள்விப்படாத விபரம்.
    /

    ஆமாங்னா!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!