Friday, November 14, 2008

சட்டக் கல்லூரி வன்முறை




          கவிதை-1

அவசர போலீஸ் - 100

ஏதாவது செய்தே
ஆக வேண்டும்
மாணவன் உயிர்
போகாமலும்-காவல் துறையின்
ஈரல் அழுகாமலும் - 
பெட்டியில் இருந்த
போலீஸ் உடுப்பை
மாட்டிக்கொண்டார்
விசில் ஊதி பார்த்து
பாக்கெட்டில் சொருகினார்
லத்தியை தட்டி 
சரி பார்த்தார்
கிளம்பினார்-டாக்டர் அம்பேத்கர்
சட்டக்கல்லூரியை 
நோக்கி - ஹெட் கான்ஸ்டபிள்
ஆறுமுக சாமி
எண்பது வயது
ரிட்டையர்டு - கிளம்பி
பாதியிலேயே திரும்பினார்
சபரி மலைக்கு -மாலை
போட்டிருப்பது 
ஞாபகம் வந்து



   
              கவிதை-2


தெலுங்கு டப்பிங் படம்

யாரும் விமர்சனம்
எழுத வேண்டாம்
அம்பேத்கர் சட்டக் கல்லூரி
வாசலுக்கு வந்து - சில
நாட்களே ஆனா
ஏற்கனவே தொலைகாட்சி
வரலாற்றில் பல முறையும்
மதுரையிலும் 
ம்ற்ற இடங்களிலும்
பார்த்து அலுத்த 
இதுதாண்டா போலீஸ்-Part-10ல்  
கரப்பான் பூச்சியை
துவம்சம் செய்யும்
காட்சி ஒன்றுதான்
வன்முறை தூக்கல்
மற்றபடி ...........

6 comments:

  1. ரெண்டு கவிதையும் கலக்கல்!

    "சபரி மலைக்கு -மாலை
    போட்டிருப்பது
    ஞாபகம் வந்து"


    "கரப்பான் பூச்சியை
    துவம்சம் செய்யும்
    காட்சி ஒன்றுதான்
    வன்முறை தூக்கல்"

    இதுதான் "ரவி" touch!!!
    :)

    -Mathu Krishna

    ReplyDelete
  2. ரவி ஆதித்தியா அவர்களே

    ஹெட் கான்ஸ்டபிள்ஆறுமுக சாமிஎண்பது வயதுரிட்டையர்டு - கிளம்பிபாதியிலேயே திரும்பினார்சபரி மலைக்கு -மாலைபோட்டிருப்பது ஞாபகம் வந்து

    மதத்தின் பெயரால் மனித உணர்வுகளை அடக்கும் வரிகள்

    ஏதாவது செய்தே
    ஆக வேண்டும்மாணவன் உயிர்போகாமலும்-காவல் துறையின்ஈரல் அழுகாமலும் - பெட்டியில்

    இது அழுத்தமான வரிகள்

    ReplyDelete
  3. அன்புள்ள மது,

    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  4. இன்னும் வருவோம்ல!
    :)

    ReplyDelete
  5. அன்புள்ள நான்
    என் அழைப்பை மதித்து
    முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  6. கலவரங்களைப் பற்றி எப்போது படித்தாலும் என்னையறியாமல் பயப்பந்து உருள ஆரம்பித்துவிடும். இச்சட்டக் கல்லூரி விஷயம் இச்சமூகத்தில் உயிரின் பாதுகாப்பற்ற நிலைக்கு வலிய உதா'ரணம்'. இது பற்றிய உங்கள் கவிதைகள் வீர்யமானவை...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!