Monday, November 1, 2010

நாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10

இந்த வாரம் “கல்லூரிக் கதைகள்”. கல்லூரிக்குள் நிகழும் சம்பவங்களை அடைப்படையாக வைத்து.இயக்குனர்களின் செல்ல சப்ஜெக்ட் ஆச்சே புகுந்து விளையாடுவார்கள் என்று பார்த்தால் ஆரம்பமே சரியில்லையே??

ஒன்றுதான் தேறுகிறது.

போன வாரம்-24-10-10
 

படம் எடுப்பதை சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு இயக்குமாறு மதன் சார்,பிரதாப் போத்தன் சார் அறிவுரையோடு ஆரம்பித்தார்கள்.

படம்: DSP  இயக்குனர்: N.S.ராகேஷ்

கல்லூரியில் Digital Signal Processing என்ற சப்ஜெக்டில் தேறுவது மாணவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.அதில் சந்தோஷ் என்ற ஹீரோவும் அடக்கம்.பிட் அடித்துதான் பாஸ் பண்ண முடியும்,அதாவது  DSP யை அடக்கி கைக்குள் கொண்டு வரமுடியும் என்கிறான், ஹீரோவின் தம்பி சுரேஷ். ஆனால் அண்ணனுக்கு அதில் துளியும் இஷ்டமில்லை.

இரண்டு பேரும் இரட்டையர்கள். அண்ணனுக்குப் பதிலாக தம்பி போய்  பிட் அடித்து பரீட்சை எழுதி (எல்லோருக்கும் அதை விநியோகித்து)  பாஸ் செய்ய வைக்கிறான்.தம்பி உடையான் படைக்கு அஞ்சன்?

எடுப்பு தொடுப்பு முடிப்பு என்று சுவராஸ்யமாக இல்லையே?DSP என்னவென்று சில நிமிடங்கள் சஸ்பென்ஸாக வைத்து பின் சொல்கிறார்கள்.அதிலும் அவ்வளவு கெத்து இல்லையே?

ஓகே ரகம். நிறைய ஹோம் வொர்க் பண்ணுங்க இயக்குனர் சார்.

படம்: ஹீராதி ஹீரோ  இயக்குனர்:ஸ்ரீமணிகண்டன்

தன் நண்பர்களுக்கிடையே தன்னை ஹீரோவாக காட்ட வேண்டும் என்று மூன்று பேர் உதார் விட்டு ஹீரோ ஆவதுதான் கதை.உண்மையில் ஜீரோ எல்லோரும்.

இதுவும் சுமாரான படம்.

படம்: ரெண்டு இட்லி ரெண்டு வடை இயக்குனர்:அருண்குமார்

ஒரு சில கல்லூரி ஹாஸ்டல் மாணவர்களுக்கும் அதே கல்லூரியின் மெஸ்ஸின் சமையற்காரர் அழகர் பிள்ளைக்கும் உள்ள பாசப்பிணைப்புதான் கதை.இவர்க்ள் கொடுக்கும் தொல்லைகளை பெத்த அம்மாவைப் போல் எடுத்துக்கொள்கிறார்.

அழகர் பிள்ளை  தன் நீண்ட நாள் சேமிப்பை வைத்து அந்த மாணவர்களை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த சேமிப்பு தன் பேத்திக்கு ஒரு செயின் வாங்குவதற்காக வைத்திருந்தது. மாணவர்கள் நெகிழ்கிறார்கள்.

அதே செயின் பணத்தை அவருக்கு செயினாகவே திருப்பிக்கொடுக்கிறார்கள்.அவரும் நெகிழ்கிறார்.

கதையை  சொன்னவிதம் நன்றாக இருந்தது. சமையற்காராக நடித்த முருகன் என்பவரின் நடிப்பு  அட்டகாசம். அவர் குரலும் அருமை.யதார்த்தம்.”உங்க அம்மா சோறு போட்டிருந்தா... இப்படித்தான் தண்ணியடிச்சிட்டு வருவீங்களா” வசனம் நன்று. படபிடிப்பும் யதார்த்தமாக இருந்தது. 

இந்தப்படத்தை 70% இவர்தான் தாங்குகிறார்.நடுவர்கள் இருவரும் இதைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.

அந்த மாணவர்கள் கல்லூரி முடிந்து வேலையில் செட்டிலாகி இவருக்கு கடிதம் எழுதுகிறார்கள் .இவர் கையில் கடிதம் இருக்க பின்னணியில் இவர்கள் எல்லோரும் படிப்பதுமாக எடுத்திருப்பது அருமை.இதை மதனும் குறிப்பிட்டார்.


இந்த வாரம் சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது “ரெண்டு இட்லி ரெண்டு வடை”

சிறந்த நடிப்புக்காக முருகனும் பரிசு பெற்றார்.

படம்:வேகம் உண்டு விவேகம் இல்லை இயக்குனர்:சந்திரன்

இயக்குனர் ஒருவருக்குத்தான் இதன் கதை என்னவென்று தெரியும்.

10 comments:

 1. நல்ல விமர்சனங்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 2. நன்றி சித்ரா.

  ReplyDelete
 3. இந்த வாரம் பார்த்தேன் சார்,..
  ‘ரெண்டு இட்லி ரெண்டு வடை’ மட்டுமே சிறு பசியாற்ற உதவியது. பழைய சிறுகதை வாடைதான் எனினும் ஓகே...
  பிரதாப் போத்தன் சொல்ற மாதிரி படம் எடுக்கணும்னா ஸ்கூல் ஆண்டுவிழா ட்ராமா தான் எடுக்கணும்...

  ReplyDelete
 4. நானும் பார்த்தேன். இரண்டு இட்லி,இரண்டு வடை ஒருமனதாக தேர்வாகியிருந்தது மகிழ்ச்சி. அதில் நடித்த முருகனின் நடிப்பு அபாரம். (பருத்தி வீரனில் ஒரே ஒரு காட்சியில் கார்த்திக்கு பச்சை குத்துபவராக வருவார். சிறந்த நடிப்பு. பாருங்கள்.முடிஞ்ச்.. என்பார் மதுரை வழக்கில்). ஆனால் மெஸ் நடத்துபவர், குழந்தைக்காக வைத்திருந்த அத்தனை பெரிய தொகையை எடுத்து மாணவர்களுக்காக - அதுவும் அவர்களுக்கே தெரியாமல்- செலவு செய்வாரா என்பது மாத்திரம் எனக்கு நெருடலாகத் தெரிந்தது. ஏதோ அவசரத்திற்கு ரத்தம் தந்தார் என்பது மாதிரி வைத்திருந்தாலும் ஓகே. ..

  வாரா வாரம் நீங்கள் எழுதுவது நன்று.

  ReplyDelete
 5. ரெண்டு இட்லி, ரெண்டு வடை பற்றி நானும் கேள்விப்பட்டேன்... ஆனால் பார்க்க முடியவில்லை... பார்க்க கிடைத்தால் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 6. நன்றி தமிழ்ப்பறவை.

  ReplyDelete
 7. //(பருத்தி வீரனில் ஒரே ஒரு காட்சியில் கார்த்திக்கு பச்சை குத்துபவராக வருவார். சிறந்த நடிப்பு. பாருங்கள்.முடிஞ்ச்.. என்பார் மதுரை//

  படம் பார்த்தேன் சுரேஷ் ஆனால் கவனிக்கவில்லை.

  //இரண்டு இட்லி,இரண்டு வடை//
  வெற்றிக்குக் காரணம் மையத்தை நோக்கியே படம் செல்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 8. philosophy prabhakaran said...

  //பார்க்க கிடைத்தால் நன்றாக இருக்கும்...//

  யூ டூப்பில்தான் ஒரு மாதம் கழித்துத் தேட வேண்டும்.

  நன்றி.

  ReplyDelete
 9. இந்த பகுதியை நான் பார்க்கவில்லை சகோ.

  ஆனால், "ரெண்டு இட்லி ரெண்டு வடை" உங்கள் விமர்சனம் கண் முன்னாடி படம் காட்டியது. நடிகர் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி பகிர்வுக்கு....

  ReplyDelete
 10. நன்றி கவிநா.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!