சில குடைகள்
மழைக்குப் பிடிக்கப்படாமலேயே
பார்மசிகளிலும்
ஊத்துகுளி வெண்ணைக் கடைகளிலும்
காபிப்பொடி கடைகளிலும்
பட்டாணி கடைகளிலும்
சாத்திவைத்தபடி
மறதியில் தொலைந்துவிடுகிறது
____________________________________
மழை பெய்யும் இரவுகளில்
யாருக்கோ எப்பொழுதோ
கொடுக்க இருந்த
காதல் கடிதங்கள்
நனைந்துவிடுகிறது
பிழிந்துவிட்டு மீண்டும்
எல்லாவற்றையும் எழுதுகிறேன்
____________________________________
எந்த பூகோள டீச்சரும்
வெய்யிலுக்கு குடை
வருவதே இல்லை
____________________________________
பிரிப்பதற்கு முன்
சட்டென மழைப் பெய்துவிட
வேண்டாம்
நனைந்த பிறகு
விரித்த குடையின்
விரித்த குடையின்
தெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை
____________________________________ரசிக்க முடிவதில்லை
பாட்டிகளுக்குக்
குடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்
e
எல்லா குடை கவிதைகளும் அட! போட சொல்கின்றன .ரசித்து வாசித்தேன்
ReplyDeleteநன்றி பத்மா.
ReplyDeleteடீச்சர் கவிதை சூப்பர்.
ReplyDelete//பாட்டிகளுக்குக்
ReplyDeleteகுடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்//
ஆணாதிக்கமோ!
நன்றி அன்பரசன்.
ReplyDeleteவாங்க அருண் பிரசாத்.முதல் வருகை?
ReplyDeleteஅருண் பிரசாத் said...
//ஆணாதிக்கமோ!//
இது கொடையின் தோற்றத்தைக் குறித்துதான் “தாத்தா கொடை” என்றுச் சொல்லப்படுகிறது.
நன்றி.
பாட்டிகளுக்குக்
ReplyDeleteகுடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... எப்படி இப்படி?
சூப்பர் சார்... ரொம்பநாள் கழிச்சு கவிதைகள் எல்லாமே கொள்ளை அழகு.... ரசித்தேன்...
ReplyDeleteகடைசி கவிதை அருமை
ReplyDeleteகுடை கவிதைகள் சூப்பர் !
ReplyDeleteநன்றி சித்ரா
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//சூப்பர் சார்... ரொம்பநாள் கழிச்சு கவிதைகள் எல்லாமே கொள்ளை அழகு.... ரசித்தேன்...//
சந்தோஷம்.ஒன்றும் ஓடாமல் ஏதோ யோசித்து மழைக் கவிதைகள் வந்தது. நன்றி
லதாமகன் said...
ReplyDelete//கடைசி கவிதை அருமை//
நன்றி
இராமசாமி கண்ணண் said...
ReplyDelete//குடை கவிதைகள் சூப்பர் !//
நன்றி இராமசாமி கண்ணன்.
//பாட்டிகளுக்குக்
ReplyDeleteகுடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்
//
தாத்தா குடை அருமை.
கவிதைகள் சூப்பர் !
நன்றி சே.குமார்
ReplyDelete//விரித்த குடையின்
ReplyDeleteதெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை//
அருமை அருமை... வாழ்த்துக்கள் நண்பரே..
--
அன்புடன்
கவிநா...
நன்றி கவிநா.
ReplyDelete