மதுபான விளம்பரத்திற்குத் தடை என்று வந்ததும் King Fisher மினரல் வாட்டர்,Haywards/Bagpiper சோடா,Smironoff காசெட்டுகள்,Teacher"s
சாதனை விருதுகள் மற்றும் Royal Challenge கிளாஸ் டம்ளர்கள் என்று மறைமுகமாக(surrogate ad)விளம்பரம் கொடுத்து”டகால்டி”செய்தார்கள்.
ஆனால் இதையும் அரசாங்கம் தடை செய்தது.
அதே மாதிரிதான் டைட்டிலில் “வ குவார்ட்டர் கட்டிங்”.டைட்டிலுக்கே சப் டைட்டிலாம்.படத்தில் கண்டமேனிக்கு எல்லோரையும் கலாய்ப்பது போல் டைட்டிலிலும் கலாய்ப்பா?உள்ளே மவுண்ட்ரோடு,மெட்ராஸ்..?
சுந்தர்ராஜன்(சிவா)என்கிற சுரா(சுரா என்று கூப்பிட்டால்தான் அவனுக்குப் பிடிக்கும்)கோயம்பத்தூரிலிருந்து சவுதிக்குப் போக சென்னை வந்து தன் வருங்கால மாமா(சரண்)(அக்காவை காதலிப்பவர்)ரூமில் தங்குகிறான்.
சரண் ஒரு மாட்டு டாக்டர்.
மறுநாள் காலை நாலு மணிக்கு விமானம்.அன்று இரவு ஒரு குவார்ட்டர் கட்டிங்(XXX)போட்டுதான் விமான ஏறுவது என்று லட்சியமாக் கொண்டு கட்டிங்த் தேடி மாமாவுடன் தருமமிகு சென்னையில் அலைகிறான்.
தேர்தல் நாள் வருவதால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் கிடையாது.நொந்து போகிறான்.
கட்டிங்கைத் தேடி ஓடுகிறான்...ஓடுகிறான்...
வாழ்க்கையின் ஓரத்திற்க்கே ஓடுகிறான்.அவன் லட்சியத்திற்குக் குறுக்காக நிறைய இடையூறுகள்...சவால்கள்...கடைசியில் அவன் கட்டிங் லட்சியம்நிறைவேறுகிறதா.? படம் பார்க்கவும்.
இதுதான் வ குவார்ட்டர் கட்டிங்கின் சரக்கு(கதை.
கதை ஒரே இரவில் நடக்கிறது.சீரியஸ்னெஸ் இல்லாத கதை.ஆனால் நிறைய சிரிக்க வைக்கிறார்கள்.நடுவில் நமுத்த அப்பளம் போல் கதை சுவராசியம் இல்லாமல் போய் பின்னால் 1/24 அளவு விறுவிறுப்பு கூடுகிறது.சில இடங்களில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பார்ப்பது போல் லாஜிக்கே இல்லை.
கடைசியில் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து கூரையைப் பிச்சிட்டு கொடுப்பது நல்ல டிவிஸ்ட்.
வித்தியாசமான கேமரா ஒளியில் சொல்லப்பட்டு ரசிக்க முடிகிறது.
தமிழ்ப்படத்தின் ஹாங்க் ஓவர்கள் அங்கங்கு தெரிகிறது.ரசிகர்களும் அதே ஹாங்க் ஓவரில்தான் படத்திற்கு வந்திருப்பார்களோ?டைட்டில் குவார்ட்டர் கட்டிங் ஆச்சே?
கதாநாயகன் சிவா வழக்கமான எஸ்வி சேகர்த்தனமான காமெடி.இது அவருக்குப் பொருந்தி வருகிறது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் அதே தமிழ்ப்பட வாய்ஸ் மாடூலேஷன் காமெடி.இது மாதிரியே தொடர்ந்தால் மேஜர் சுந்தராஜன் ஆகி விடுவார்.மாமாவாக வரும் சரண் நன்றாக செய்திருக்கிறார்.இவர் மனதில் நிற்கிறார்.வித்தியாசமான கேரக்டர்.
டைரக்டர் காயத்ரி-புஷ்கர்
கதாநாயகி(?)லேகா வாஷிங்டன் ஜோடி அல்ல.கட்டிங் லட்சியத்தின் குறுக்கே வந்துபோகும் ஒரு மக்குப் பெண்.அவரும் நன்றாக செய்திருக்கிறார்.
செட்டிங்குகள் ஏன் சைனீஸ் ரெஸ்டாரெண்டுபோல் சிவப்பு நிறத்தில்?நைட் எபெக்ட்டா?இசை ஜி.வி.பிரகாஷ்.சுமார்.லேகா பாடும் பாட்டின் நடன அமைப்பு நன்றாக இருக்கிறது.”உன்னைக் கண் தேடுதே” பழையப் பாட்டு ரிமிக்ஸ் வேறு உண்டு.கொடுமை.
மறு நாள் 4 மணிக்கு விமான ஏறப்போவதின் சீரியஸ்னெஸ் இல்லாமல் குவார்ட்டருக்கு அலைவது ஒரு கட்டத்தில் அபத்தம்.வசனங்களில் மட்டுமில்லாமல் பின்னணி,உடை,சக நடிகர்கள் முகங்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் பேசும்தமிழ்,வாகனங்கள் என்று நகைச்சுவையை கொண்டுவந்திருக்கிறார்கள்.
சொன்ன கதை குழப்பில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.படபிடிப்பு அருமை(நிரவ் ஷா).
ரசித்த ஜோக்குகள்:
(பாலத்தில் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்ற தூக்கும்போது)”சாவற்த்துக்கு முன்னேமே பொணம் கனம் கனக்கற”.
சரண் அணிந்திருக்கும் சட்டைப் பாண்ட்டைப் பார்த்து “மூணு மொட்டை மாடில திருடினா மாதிரி இருக்கு”
படத்தில் இன்னும் கூட புல் கதைக்கொண்டு வந்து சுவராஸ்யம் கொண்டு வந்திருக்கலாம்.
என்ன சார். இப்போ படத்துக்கும் விமர்சனம் எழுத ஆரம்பிச்சிடீங்க. லேட்டான தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteநான் நேத்தே பாத்துட்டேன்.. ஆனாலும் உங்களுக்கு தங்கமான மனசு ராசா...
ReplyDeleteஎன் விமர்சனம் போய் படிச்சு பாருங்க.. உங்க அளவுக்கு பொறும இல்லீங்க நமக்கு:-)
ரெண்டு said...
ReplyDelete// என்ன சார். இப்போ படத்துக்கும் விமர்சனம் எழுத ஆரம்பிச்சிடீங்க. லேட்டான தீபாவளி வாழ்த்துகள்//
சினிமா விமர்சனம் அப்பப்போ எழுதுவேன்.சினிமா விமர்சனம்னு ஒரு லேபிளே இருக்கே.தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி.
கடைக்குட்டி said...
ReplyDelete// என் விமர்சனம் போய் படிச்சு பாருங்க.. உங்க அளவுக்கு பொறும இல்லீங்க நமக்கு:-)//
எதையும் நமக்கு சுவராசியமா சொன்னா ரசிப்பேன்.மொக்கைதான் படம்.அதையதை ரசிப்பதற்கு ஒரு perspective இருக்கிறது.
வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.உங்கள் பதிவிலும் பின்னூட்டம் போட்டுவிட்டேன்.
Test
ReplyDeleteதுபாய்க்குப் போக//// SAUDIKKU POHANNU LA VERA VIMARSANATHULA POTTTURUNTHANGA /// shabi...
ReplyDelete//SAUDIKKU POHANNU LA VERA VIMARSANATHULA POTTTURUNTHANGA //
ReplyDeleteமாத்திட்டேன் ஷபி. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
டிரைலர்ல சொல்ற மாதிரி
ReplyDelete"இது ஒரு மொக்கை படம்ணா!"
Belated Deepavali greetings! neenga sollradhai paatha oru vaatti paakkalaam pola irukke! nice review!
ReplyDeleteலதாமகன் said...
ReplyDeleteவாங்க லதாமகன்.முதல் வருகை. கருத்துக்கு நன்றி.
// டிரைலர்ல சொல்ற மாதிரி
"இது ஒரு மொக்கை படம்ணா!"//
இது கூட கலாய்ப்பு விளம்பரம்.
அநன்யா மஹாதேவன் said...
ReplyDelete// Belated Deepavali greetings! //
உங்களுக்கும் அதே.
//neenga sollradhai paatha oru vaatti paakkalaam pola irukke! nice review!//
இது ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு.சுவராஸ்யம் கூட்டனும்.
நன்றி.
எனக்கு இந்த பாடம் சுத்தமா பிடிக்கல, ஜோக் ஒன்றும் ரசிக்கும் படி இல்லை. பல சீன்கள் சிரிப்பதற்கு பதில் கோபம் தான் வருது. இதை விட சனிக்கிழமை அசத்த போவது யார் பாக்கலாம். சிரிப்புக்கு டைமிங் சுத்தமா சரியில்லை.
ReplyDeleteசீனி said...
ReplyDelete//எனக்கு இந்த பாடம் சுத்தமா பிடிக்கல, ஜோக் ஒன்றும் ரசிக்கும் படி இல்லை. பல சீன்கள் சிரிப்பதற்கு பதில் கோபம் தான் வருது. இதை விட சனிக்கிழமை அசத்த போவது யார் பாக்கலாம். சிரிப்புக்கு டைமிங் சுத்தமா சரியில்லை.//
ஆளுக்கு ஆள் ரசனை வேறுபடும். நன்றி சீனி.