Wednesday, November 17, 2010

ஐ லவ் யூ கீதாலஷ்மி

”சாயந்தரம் மூணு மணிக்கு ப்ரோகிராம் ஆரம்பிக்கும்.
மறக்காத வந்துரு.சும்மா பேசி அசத்து”சித்தார்த்

”ஓகேடா..கிளம்பிட்டு இருக்கேன்.கட்டாயமா வரேன்.”அரவிந்த்.

அரவிந்த் அழைப்பை கட் செய்து முடித்து அடுத்த நிமிடத்தில் மீண்டும் அழைப்பு.மீண்டும் நண்பன் சித்தார்த்.

“டேய் மன்மதா.. நிறைய பொண்ணுங்க கலந்துக்கிற டாக்‌ஷோ.மிஸ் பண்ணாத”

“ஓகே.. ஓகே...” கட் செய்துவிட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.

“என்னாடா ஒரே ஸ்மைலியாக இருக்க..” அரவிந்த் அம்மா

” நான் மன்மதனாம்”

“ஆமாண்டா.இன்னிக்கு இந்த புது ஷர்ட்டும் பேண்டும்.ஒரு தூக்கு தூக்குது வழக்கத்தவிட”

கண்ணாடியில் பார்த்தான்.உடை கச்சிதமாக பொருந்தி வந்தது.அப்பாவைப் போல் அகல தோள்கள்.அதே உயரம்.சட்டையை மீறி வெளியே துருத்திக்
கொண்டிருக்கும் முடி.அடர்த்தி மீசை.ஆண்தனமான முகம்.அதிரும் மெட்டாலிக் குரல்.

இந்தத் தோற்றத்திற்காகவே கல்லூரி காலத்தில் நிறைய பெண்கள் துரத்தினார்கள்.புன்னகையுடன் எல்லோரையும் கடந்தான்.இதற்காகவே மிச்சம் மீதி பெண்களும் துரத்தினார்கள்.தலையில் எந்தவித கீரிடமோ குறுகுறுப்போ இல்லாமல்தான் கடந்தான்.

எதற்காக துரத்தினார்களோ அதில் இவனுக்கு ஆர்வமில்லை.பட்டுக்கொண்டதும் இல்லை.தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றபடி இருந்தான்.அவனை அப்நார்மல் என்றார்கள்.படிப்பில் ரொம்ப கவனமாக இருந்தான்.உண்மையாகவே ஒரு மாணவனாக படிக்கவும் செய்தான்.

கடைசிவரை அதே புன்னகையுடன் எல்லா பெண்களையும் கடந்து கல்லூரிக்கு வெளியே வந்து நல்ல சம்பளத்தில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
__________________________________

சித்தார்த் அழைத்த இடத்தை நோக்கி காரை செலுத்தினான்.

காலரி போல் இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.டாக் ஷோ ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது.உள்ளே நுழைந்த கீதாலஷ்மியும் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

முதல் பார்வையிலேயே அவனை ரொம்ப பிடித்துப்போனதும் நெருங்கி உடகார்ந்தாள். வலிய பேசினாலும் அவன் ஒரிரு வார்த்தைகள்தான் பேசினான்.வந்திருந்த ஆண்களும் பெண்களும் இவர்களேயே அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அதையும் பாக்கியமாக ரசித்தாள்.

டாக் ஷோ ஆரம்பித்தது.தன் சைடு வாதங்களை அருமையாக பேசினான்.இவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது கீதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. கைத்தட்டல் வாங்கும்போதெல்லாம் அவள் இவனின் உள்ளங்கையால் தன் உள்ளங்கையால் தட்டினாள்.

நேரம் கூட கூட வாதங்களும் பிரதிவாதங்களும் பெரிதான சிரிப்புக்களும் கைத்தட்டல்களும் கத்தல்களும் காதில் விழாமல் சுருங்கி ஒரு புள்ளியாக கீதாலஷ்மி அரவிந்தை காதலிக்கத் தொடங்கினாள்.அவனின் உடல் மொழியும் தனக்கு இணையாக இருப்பதாக நினைத்து மீண்டும் பூரித்தாள்.

டாக் ஷோ முடிந்ததும் அதே பூரிப்பில்......

“ ஏய் அரவிந்த்.நாம ஜெயிச்சத கொண்டாடலாம். ஹாவ் டின்னர் அண்ட் கோ” ரொம்ப உரிமையாக.

”சாரி... கீதாலஷ்மி..இன்னொரு நாள். பட் ஐ ஹேட் வெரி நைஸ் டைம் வித் யூ”

பல வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக தன் முழுப்பெயரைச் சொல்லி அரவிந்த்துதான் கூப்பிடுகிறான்.அதில் திளைத்துக்கொண்டிருந்தபோது அவன் கிளம்பிவிட்டான்.”பை” சொன்னது கூட காதில் விழவில்லை.

அப்படி கூப்பிடாமல் இருந்திருந்தால் தான் விடாப்பிடியாக அவனை அழைத்திருப்பேன்.யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தாள்.டாக்‌ஷோவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக கருதினாள்.
_______________

அடுத்த ஒரு வாரத்தில் அவளிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் அரவிந்தைத் தாக்கியபடி இருந்தது.எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தான்.இவனை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.

அவனிமிருந்து ஒரு மறு காதல் மறுமொழியும் இல்லை இருந்தாலும் எல்லாம் பொதுவாக இருந்தது.

கீதாலஷ்மியும் ஒன்றும் புரியாமல் தவித்தாள். காதலிக்கப்படுவதற்கு  இவ்வளவு கஷ்டபடவேண்டியது புது அனுபவமாக இருந்து ஹிம்சையானாள்.வெளியேறுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள்.ஏன் அந்த டாக் ஷோக்கு போனோம் என்று முதல் முதலாக நொந்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக பிரான்ஸ் சென்றாள்.இவளின் குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.ஆனால் முன்போல அவ்வளவு  தீவிரம் இல்லை.குறையவும் செய்தது.அவனும் அதே சமயத்தில் அவன் ஆபீஸ் விஷயமாக வெளிநாடு சென்றான்.

கிட்டத்தட்ட நான்குமாத இடைவெளிக்கு பிறகு ஒரு நாள்---------

“அரவிந்த் ..திஸ் இஸ் கீதா... கீதாலஷ்மி. எப்படி இருக்கே?”

“ நல்லா இருக்கேன். கீதாலஷ்மி. நீ?”

“நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரு ஷிப்ட் ஆயிட்டேன். இப்ப சென்னைல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்கேன்.நான் உங்கிட்ட பேசனும். தி இஸ் அபொட் மை மேரேஜ்”

“வாழ்த்துக்கள் கீதா..”

“தாங்கஸ்.நேர்ல வா.. சொல்றேன்.கட்டாயம் வந்தே ஆகணும்”

கீதாலஷ்மிக்கு விரைவில் திருமணம்! போனை வைத்தவுடன் மனசு கனத்தது.வழக்கமான புன்னகை எங்கே போயிற்று? பார்த்தே ஆக வேண்டும் என்று மனசு வாட்டி எடுத்தது.

ஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ். ரூம் நம்பர் 218..

”எஸ் அரவிந்த்.. கம் இன்”  உள்ளே நுழைந்தான்.

“இஸ் இட் ஓகே” தன் உடையைக் காட்டிக் கேட்டாள்.

” நோ பிராபளம்” என்று சொல்லி கையில் கொண்டுவந்திருந்த பூங்கொத்தைக் கொடுத்து”வாழ்த்துக்கள்” என்றான்.பதிலுக்கு சிரித்து வாங்கிக்கொண்டாள்.

முதன்முதலாக அவளை உற்று நோக்குகிறான்.

லூசான கட்டம் போட்ட டி ஷர்ட்டும் அதன் கிழே தொளதொள பேண்டும் அணிந்து பளிச்சென்று இருந்தாள்.கையில் ஏதோ பேஷன் வளையல்கள். ஒரு காலில் மட்டும் மெல்லிதான கொலுசு.காலில் ரூம் செருப்பு.இருந்தாலும் கண்ணியமான தோற்றம்.


நடக்கப்போகும் அவளின் திருமணத்தை விவரத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக சொன்னாள்.கணவன் அவர்கள் குடும்ப போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.


அவள் தன் பின்னணி படித்த காலேஜ் குடும்பம் எல்லாவற்றையும் முதல்முறையாகப் பகிர்ந்துக்கொண்டாள்.பிரான்ஸ் பற்றி விவரித்தாள்.தன் பல வித போட்டோக்களை காட்டி நிறைய ஜோக் அடித்தாள். பேச்சில் நேர்மை இருந்தது.விகல்பம் இல்லாமல் பேசினாள்.நிறைய சிரித்தாள்.தன் காதல் தோற்றதுப்பற்றி முகத்திலோ பேச்சிலோ எந்தவித தடயமும் இல்லை,

இதையெல்லாம் இவ்வளவு நாள் கவனிக்க தவறியது மனதை ரணமாக்கியது.

பேச்சின் இடையே தான் அடிக்கடி உதிர்த்த வழக்கமான புன்னகைகள் கூட அதன் வீரியத்தை இழந்துவிட்டதாக நினைத்தான்.

பேச்சின் முடிந்து கிளம்பும்போது அவளை ரொம்ப பிடித்துப்போயிருந்தது. மனதிற்குள் சொல்லிக்கொண்டான் -

“ஐ லவ் யூ கீதாலஷ்மி”


                        முற்றும்


---

17 comments:

  1. கதையில நீங்க என்ன சொல்ல வர்றீங்க.

    ReplyDelete
  2. வாங்க கேபிள் சங்கர். நீங்கதான் சொல்லனும்.
    நன்றி.

    ReplyDelete
  3. பிரியும் பாதைகள். விரும்பிப் போனால் விலகிப் போகும் . அதுதானே:)

    ReplyDelete
  4. நன்றி வல்லிசிம்ஹன்.

    ReplyDelete
  5. ம்ம் என்னமோங்க. உங்க வழக்கமான நச் பாணி இதுல இல்லே.. மிஸ்ஸிங்

    ReplyDelete
  6. நல்லா இருந்தது கதை. ஆனால் கொஞ்சம் வளவளா டைப்.

    ReplyDelete
  7. இது உங்களோட சொந்த அனுபவமா...

    ReplyDelete
  8. SUPER கதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. November 17, 2010 8:56 PM
    ILA(@)இளா said...

    // ம்ம் என்னமோங்க. உங்க வழக்கமான நச் பாணி இதுல இல்லே.. மிஸ்ஸிங்//

    நச் வேணும்னா கதையின் போக்கு கெடும் என்று விட்டுவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  10. //தமிழ்ப்பறவை said..//

    //நல்லா இருந்தது கதை. ஆனால் கொஞ்சம் வளவளா டைப்//

    நன்றி

    ReplyDelete
  11. நண்பரே ஒன்று மட்டும் புரியுது.

    யார் யார்க்கு எங்கு அமையுமோ அங்குதான் அமையும்.
    அதாவது கடவுள் அவர்கள் பிறகும் போதே நிச்சயித்து.

    --
    KUMAR.ம
    kumar.navink@gmail.com

    ReplyDelete
  12. philosophy prabhakaran said...

    //இது உங்களோட சொந்த அனுபவமா...//

    இல்லீங்க.கற்பனைங்க. நன்றி.

    ReplyDelete
  13. AT.Max said...
    //SUPER கதை நல்லா இருக்கு//

    நன்றி AT.Max

    ReplyDelete
  14. kumar said...
    நண்பரே ஒன்று மட்டும் புரியுது.

    //யார் யார்க்கு எங்கு அமையுமோ அங்குதான் அமையும்.அதாவது கடவுள் அவர்கள் பிறகும் போதே நிச்சயித்து.//

    இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று.

    நன்றி குமார்.

    ReplyDelete
  15. this is how life is !and he deserves it.

    ReplyDelete
  16. பத்மா said...

    //this is how life is !and he deserves it//

    உங்கள் உணர்வு என் கதைக்கு வெற்றி.

    நன்றி பத்மா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!